மேலூர் திருவுடை அம்மன் (Thiruvudai Amman)
திருவுடை அம்மன் வரலாறு:
திருவுடை அம்மன் சென்னை புறநகர் பகுதியில் இக்கோயில் உள்ளது. திருவுடையம்மன்(Thiruvudai Amman) இச்சா சக்தி கொண்டவள் ஆதலால் பௌர்ணமி தினங்களில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது
திருவுடை அம்மன் சிறப்பு:
இச்சா சக்தி கொண்ட மேலூர் திருவுடையம்மனை காலையிலும், ஞான சக்தி கொண்ட திருவொற்றியூர் வடிவுடை அம்மனை மதியத்திலும், க்ரியா சக்தி கொண்ட திருமுல்லைவாயில் கொடியுடை அம்மனை மாலையிலும் வழிபடுவது நல்லது.
திருவுடை அம்மன் பரிகாரம்:
நாம் நினைப்பதை செய்வதற்கான ஞானசக்தி, அறிவின் சக்தி, க்ரியா சக்தி என்ற இந்த மூன்று சக்திகளும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளன.எனவே இந்த மூன்று அம்மனையும் ஒரே பவுர்ணமி தினத்தன்று வழிபடுதல் நன்று. நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
மஞ்சள் நிற புடவையும் மாம்பழமும் மேலூர் திருவுடையம்மனுக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
இக்கோவிலில், தனது திருநாயகரான திருமங்கீஸ்வரருடன் பக்தர்களை அருள்பாலிக்கிறாள்.
வழித்தடம்:
சென்னை புறநகர் பகுதியில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மேலூர் திருவுடையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.