ராகு -கேது தோஷத்தால் அவதி படுபவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய திவ்ய தேசம்-புண்டரீகாட்சன்பெருமாள் கோவில்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருவெள்ளறை புண்டரீகாட்சன்பெருமாள் கோயில்

திவ்ய தேசம் 4

மூலவர்- புண்டரீகாட்சன்

உற்சவர்- பங்கயச்செல்வி

அம்மன் /தாயார்- செண்பகவல்லி

தலவிருட்சம்- வில்வம்

தீர்த்தம்- மணிகர்ணிகா,சக்ர,புஷ்கல வராக கந்த பத்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை:

பழமை: 1000-2000வருடங்களுக்கு முன்

புராண பெயர் :

ஊர்: திருவெள்ளறை

மாவட்டம்: திருச்சி

மாநிலம்: தமிழ்நாடு

மங்களாசாசனம்:

ஆறினோடொருநான்குடைநெடுமுடியரக்கன்றன்
சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே
எனக்கருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடை
தாமரைமலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல்
திருவெள்ளறை நின்றானே .

-திருமங்கையாழ்வார்

புண்டரீகாட்சன்பெருமாள்

தல சிறப்பு

கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 4 வது திவ்ய தேசம்.

பொது தகவல்

கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் ” வெள்ளறை” என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக ” திருவெள்ளறை“ஆனது.முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது .

‘புண்டரீகன்’ என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் ‘புண்டரீகாட்சப்பெருமாள்’ ஆனார்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டி பிராத்தனை செய்ய படுகிறது.

நேர்த்தி கடன்

நிறைவேறிய பின் “பலிபீட திருமஞ்சனம்”செய்து பொங்கல் படையல் செய்து பிராத்தைனையை நிறைவேற்றுவார்கள்.

புண்டரீகாட்சன்பெருமாள்

தல வரலாறு

ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும் , மகாலட் சுமியும் பேசிக்கொண்டிருந்தனர் . அப்போது பெருமாள் , லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது . இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது . எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் ” என்கிறார் அதற்கு லட்சுமி , தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு ” என்கிறாள் இருந்தாலும் , எனது பிறந்த இடமான இந்த பாற்கடல் இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள் அதற்கு பெருமாள் உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது .

இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன் இருந்தாலும் பூமியில் சிபிசக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் ” என்கிறார் . ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள் . அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது . படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக . சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார் . பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான்.

அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன் நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார்.

இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம் . நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரு பமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்கிறார் பெருமாள் இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்க்ஷஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர் இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார் எனவே நீ திரும்ப நாட்டை ஆள் செல் என்கிறார் ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை . அதற்கு மார்க்கண்டேயர் உனக்கு தரிசனம் கொடுத்தபெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக ” என்கிறார்.

அரசனும் கோயில் கட்டி , சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான் . வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார் . அதற்கு பெருமாள் அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம் . நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார் பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

கோவில் இருப்பிடம்

Leave a Comment

error: Content is protected !!