Homeஅற்புத ஆலயங்கள்பைரவர் தரிசனம்: வழக்கில் வெற்றி பெற வைக்கும் ஆலயம் | பைரவ பூஜை முறைகள்

பைரவர் தரிசனம்: வழக்கில் வெற்றி பெற வைக்கும் ஆலயம் | பைரவ பூஜை முறைகள்

பைரவர்  தரிசனம்

சிவன் கோவில்களில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி தரிசனம் தருபவர் ஸ்ரீ பைரவர்.இவருக்கு சேத்திர பாலகர், வடுகர் ,ஆகாச பைரவர், ஸ்வர்ண பைரவர் என்று வேறு பெயர்களும் உண்டு.

உடல் நலம் ,சொத்து வழக்கில் நல்ல தீர்வு காண விரும்புவோர் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று மாலை வேளையில் பால் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை வழிபட்டால் பலன் கிடைக்கும். 

பைரவர்  தரிசனம்

அஞ்சநேயருக்கு செய்வது போல இவருக்கும் வடை மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பு. ‘சதுர்வேதி மங்கலம், என்று போற்றப்படும் மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் சிவன் ஆலயத்தில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் நின்று அடியார்களின் குறை நீக்கி அருள்வது சிறப்பான ஒன்று. 

மேலும் வேதாரண்யம் வட்டம் தகட்டூரில் பைரவர் ஸ்வர்ண பைரவியுடன் காட்சியளிக்கிறார். இவர் வலது கையில் தங்க கலசம் ஏந்தி இடக்கையால் அம்பிகையை அணைத்த படி அருள் பாலிக்கிறார்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!