லக்கினத்தில் குரு
சுபத்தன்மை பெற்ற குரு பலன்கள் கீழே வருவன :
பூர்வீக சொத்து சேரும், நிம்மதியான வாழ்வு,உத்தியோகத்தில் பேரும் புகழும் வரும், சிலருக்கு நிலப்பட்டாக்களும் கிடைக்கும் ,குடும்ப ஒற்றுமை,மக்களால் உதவி , ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு .
நல்ல மனைவி அமைவாள், தீர்க்காயுள் உண்டு ,எவ்வித தோஷமும் அணுகாது, சில சமயங்களில் சிறிய தொல்லைகள் வரும்.பின் காலத்தில் பெருஞ்செல்வம் சேரும்.தந்தைக்கு நல்ல ஆயுள் பலம் உண்டு.அழகுள்ள குழந்தைகள் பிறக்கும்.
தொழில் துறையில் சிலர் நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது,பிதுர் பாக்கியம் உண்டாகும் . தந்தைக்கு பாக்ய விர்த்தி , தொழிலில் உயர்வு தெய்வபலம் கிடைத்தல் இளைய உடன் பிறப்பிற்கு செல்வ சேர்க்கை ஏறப்டுதல்,தாய்க்கு சில பாதிப்புகளைத் தரலாம்.
பிறக்கும் குழந்தைகள் நல்ல நிலையில் இருப்பர் . ‘ – கடன் – எதிரி – நோய் தொல்லைகள் மறையும் . தாய் மாமன் நிலை உயர்வடையும் . மனைவிக்கு அடிக்கடி நோய்த் தொல்லை – ரண சிகிச்சை ஏற்படலாம் . எக்காலத்திலும் மானபங்கம் ஏற்படாது.
தொழில் வகையில் அடிக்கடி சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்புகள் இராது . மூத்த சகோதரருக்கு ஆகாது . நல்ல காரியங்களுக்கு செலவு செய்வார் . புத்தி குறைவு , கீர்த்தி குறைவு , ஜீவன காரியத்தில் விரோதம் – இடமாற்றம் – மான பங்கம் – மரண பயம் – ஏற்பட வாய்ப்புகளும் உண்டு.
கோச்சாரத்தில் இவருடன் வேறு கிரக சேர்க்கை சேர்க்கை இருப்பின் குரு பதிப்பான பலன்களை தரார்.
குரு நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுய பலன்கள் மாறி எதிரிடை யான பலன்கள் நடக்கும் தீய பலன்கள் செயல்படாது .
குரு நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் , சந்திரன் , தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சுப பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும் . தீய பலன்கள் பலப்படும்.
சொல்லப்பட்ட பலன்கள் குரு தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும் .