Home108 திவ்ய தேசம்திவ்ய தேசம் 50:திரு நிலாத்திங்கள் துண்டாம் (காஞ்சி)

திவ்ய தேசம் 50:திரு நிலாத்திங்கள் துண்டாம் (காஞ்சி)

திரு நிலாத்திங்கள் துண்டாம்

விஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. நாம் தான் வித்தியாசமாக பார்க்கிறோம் என்பதை திருமாலே மெய்ப்பித்து காட்டிய சம்பவங்கள் எத்தனையோ உண்டு. சிவபெருமானுடைய மனைவி பார்வதி தேவியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்ட திருமால் என்ன என்ன வகையில் உதவி செய்திருக்கிறார் என்பது ஒரு பெரிய வரலாறு.

அதன் ஒரே சம்பவத்தை மாத்திரம் இந்த காஞ்சிபுரம் மண்ணில் மிகவும் அற்புதமாக ‘திரு நிலாத்திங்கள் துண்டாம்’ கோயிலில் காணலாம். இந்த கோயில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் உட்பிரகாரத்தில் இருப்பதுதான் மிகப்பெரிய சிறப்பு.

மூலவர்நிலா திங்கள் துண்டத்தான்,நின்ற திருக்கோலம்
விமானம்புருஷ சூத்கம்
தாயார்வல்லித் தாயார்
தீர்த்தம் சந்திர புஷ்கரணி

சிவபெருமானுக்குரியப் பெருமையை பறைசாற்றும் விதத்தில் திருமாலே இந்த திருத்தலத்திற்கு வந்ததாக ஒரு தலபுராணம் உண்டு.

இன்னொரு தலபுராணம் இது, திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் பொழுது தனக்கு ஏற்பட்ட வெப்பத்தை நீக்குவதற்காக பிரம்மனை நோக்கி திருமால் பிரார்த்தனை செய்தார். அமிர்த கடல் வெப்பம் நீங்க வேண்டுமானால் காஞ்சியில் உள்ள சிவபெருமான் குடி கொண்டிருக்கும் ஏகாம்பரநாதன் திருக்கோயிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கினால் போதும் என்று பிரம்மன் வழிகாட்ட திருமால் இந்த கோயிலில் வந்து தவம் செய்தார்.

சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி திருமால் மீது பட்டதும் திருமாலுக்கு வெப்பம் நீங்கியது. இதனால் பெருமாளுக்கு ‘நிலாத்திங்கள் துண்ட பெருமாள்‘ என்ற பெயர் வழங்கலாயிற்று.

சிவபெருமானின் சடையில் அணிந்துள்ள பிறை துண்டத்தின் குளிர்ந்த ஒளி திருமாலின் மீது பட்டதால் திருமாலின் நோய் தீர்ந்தது, அதனால் தான் நிலாத்திங்கள் துண்ட பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாக இன்னொரு செய்தி. ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தவம் செய்யும் பொழுது இந்த தவத்தை சோதிக்க சிவன் அந்த மாமரத்தை எரித்ததாகவும், அப்பொழுது பெருமாள் தனது அமிர்த கிரகணங்களைக் கொண்டு எரிந்து போன மாமரத்தை தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு பண்ணியதாகவும் மற்றொரு வரலாறு.

இந்தக் கோயிலில் பார்வதியின் அருகே வாமனர் இருக்கிறார். அந்த வாமனர் தான் மாமரத்தை தழைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி கூறுகிறது.

பரிகாரம்

கோபத்தால் செய்த பஞ்ச மகா பாவங்கள் எதுவாக இருந்தாலும், அத்தகைய பாவங்களைப் போக்க இந்த திருத்தலத்திற்கு வந்து பெருமாளை சேவித்தால் போதும். அத்தகைய பாவங்கள் விலகிவிடும். அது மட்டுமல்ல நெருப்பினால் எந்த வகையான ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், பொருள் நஷ்டம், வியாபார நஷ்டம் ஏற்படாமல் தடுக்கவும், பெரியவர்கள், பெரும் பதவியில் இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பாதிப்பு நீங்கவும், ‘கெமிக்கல்’ விஷம் சம்பந்தமான நோயினால் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து விலகவும் இங்குள்ள பெருமாளை வேண்டி பிரார்த்தனை செய்தாலே போதும் புண்ணியவானாக மாறிவிடலாம்.

கோவில் இருப்பிடம்  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!