கிரக கூட்டு பலன்கள்-சந்திரன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கிரக கூட்டு பலன்கள்-சந்திரன்

சந்திரன்+செவ்வாய்:

சந்திரன் சுபர் ; செவ்வாய் பாவி ! எனவே , இவர்களுக்கிடையில் சுபர் , பாவர் என்ற யுத்தம் நடந்து தீய பலன்களை ஏற்படும் என்பது முனிவரது கணிப்பு ! ஆனால் , இருவரும் நண்பர்கள். லக்ன பலம் வேறு ? எனவே , இவர்கள் சற்று தாமதமாக நற்பலன்கள் செய்ய இடமுண்டு ! ஆட்சி , உச்சமாக இருந்தால் , விசேஷமான சுபபலன்கள் ஏற்படுமென கூறுக.

சந்திரன்+புதன்:

நல்ல வாக்கு சாதுர்யம் நிறைந்தவர்.தன சேர்க்கையுள்ளவர்.நல்ல ரூபம் , அழகு , தயை நிறைந்தவர் . வணக்கம் உடையவர் . பரஸ்திரீ பிரியர் !

விளக்கம் :

இருவரும் சுபர்கள் ; சந்திரனுக்கு புதன் நட்பு , புதனுக்கு சந்திரன் பகை . எனவே , இவர்கள் நற்பலன்கள் தர இடமுண்டு . புதனுக்கு சந்திரன் பகை என்பதால் , பரஸ்திரீ நேசம் ஏற்பட வாய்ப்புண்டு என அறிக.

சந்திரன்+குரு:

நல்ல அழகு நிறைந்தவர் ; தீர்க்காயுள் உள்ளவர். புகழ் , செல்வாக்கு நிறைந்தவர் , நல்ல கண் பார்வையுடைவர் : அழகான தலை உடையவர்.

விளக்கம் : சந்திரன் , குரு ஆகிய இருவரும் சுபர்கள் மட்டுமின்றி , நெருங்கிய நண்பர்களும்கூட ! லக்னபலம் வேறு ! எனவே , இவர்கள் கூடியிருப்பதால் விசேஷமான சுபபலன்கள் ஏற்படும் என்பது உண்மையே!!

சந்திரன்+சுக்கிரன் :
நல்ல விஷயங்களில் ஆர்வமுடையவர் ; அழகான முகவசீகர முடையவர் ; செல்வாக்கு நிறைந்தவர் ; நல்லவற்றில் ஆசை கொண்டவர் ; இராஜப் பிரீதியுடைவர் .

விளக்கம் :

சந்திரன் , சுக்கிரன் ஆகிய இருவரும் சுபர்கள்.லக்ன பலத்தினால் , இவர்களது சத்துருத்துவம் விலகி , நல்ல சுப பலன்கள் உண்டாகும் என்பது உண்மையே ! பகை நீசமாக இருந்தால் , பாவ பலன்கள் வர இடமுண்டு !

சந்திரன்+ சனி :

துஷ்ட வழியில் பணத்தைச் சேமிப்பவர் ; கெடுதல் குணம் கொண்டவர் ; அற்ப புத்தி நிறைந்தவர் ; அடுத்தவர் பணத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்டவர் . துஷ்டர்களால் அவதியடைபவர்.

விளக்கம் :

சந்திரன் சுபர் ; சனி பாவி ; எனவே , இவர்களுக்கிடையில் சுபர் , பாவர் போட்டி ஏற்பட்டு தீயபலன்கள் உண்டாகும் என்பது முனிவரது கணிப்பு ! இவர்கள் ஆட்சி , உச்சமாக இருந்தால் , ஷெ தோஷம் விலகி நற்பலன்கள் உண்டாக இடமுண்டென அறிக!!

Leave a Comment

error: Content is protected !!