5ம் வீட்டு கிரக பலன்கள்- மகரிஷி பராசரர்
லக்னாதிபதி மற்றும் 5-ம் இடத்து(5th House in Astrology) அதிபதி அதன் சொந்த வீடுகளில் இருந்தாலும்,கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருந்தாலும் அந்த ஜாதகரின் குழந்தைகளால் அந்த ஜாதகர் சந்தோஷம் அனுபவிப்பார்.
5-ம் இடத்து அதிபதி 6,8,12-ல் இருப்பின் (மரபுவழி) குழந்தைகள் இல்லை
5-ம் இடத்து(5th House in Astrology அதிபதி அஸ்தங்கம் ஆனாலோ,பாவிகளுடன் சேர்ந்து, பலம் இல்லாமல் இருப்பினும் குழந்தைகள் இல்லை. அப்படியே ஏற்பட்டாலும் அந்த குழந்தை சீக்கிரம் உயிர் விடும்.
5-ம் இடத்து அதிபதி 6-ல் நின்றிட லக்னாதிபதியுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால், அந்த ஜாதகர் முதல் குழந்தையை இழப்பர். மேலும் அவர் மனைவிக்கு வேறு குழந்தைகள் பிறக்காது.
5-ம் அதிபதி 6, 8, 12-ல் இருக்க, புதன் கேது 5-ல் இருப்பின், அந்த ஜாதகரின் மனைவிக்கு ஒரு குழந்தை மட்டுமே இருக்கும்.
5-ம் அதிபதி(5th House in Astrology பலமிழந்து, 5-ம் இடத்தையும் பார்க்காமல், 5-ல் சனி, புதன் இருப்பினும் மனைவி ஒரு குழந்தையை பெற்று இருப்பார்.
9-ம் இடத்து அதிபதி 5-ல் லக்னத்தில் நின்றிட, 5-ம் இடத்து அதிபதி பலமின்றி இருப்பின் மேலும் 5-ல் கேது உடன் புதனும் இருப்பின், ஒரு குழந்தையையும் சிரமப்பட்டே பெற்றெடுக்க நேரிடும். சமயத்தில் குழந்தைகள் இருக்காது.
5-ம் இடத்து அதிபதி 6,8,12-ல் நின்றிட அல்லது எதிரி வீட்டில் இருந்து, 5-ம் இடத்தில் பலமிழந்து நின்றாலும் அந்த ஜாதகருக்கு சிரமப்பட்டே குழந்தை பிறக்கும்.
5-ம் வீடு சனி அல்லது புதன் வீடாக நிற்பின் அங்கு சனி, மாந்தி இருந்தாலோ, சனி, மாந்தி பார்த்தாலும் அந்த ஜாதகர் தத்துப் பிள்ளையை அடைவார்.
சூரியன் சந்திரன் இருவரும் ஒரே ராசியில் நிற்க, நவாம்சத்திலும் அதே நிலை இருப்பின் அந்த குழந்தைக்கு தாயார் அல்லது தகப்பனார் இறப்பர்.
விளக்கம்: இது அமாவாசையன்று பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஐந்தாமிடத்தில் 6 கிரகங்கள் நின்றிட ஐந்தாம் அதிபதி 12-ல் நின்றிட, சந்திரன் மற்றும் லக்னாதிபதி பலமுடன் நின்றிட அந்த ஜாதகருக்கு தத்துப்பிள்ளை யோகமாகும்.
5-ம் இடத்து(5th House in Astrology அதிபதி பலம் பெற்று அமர்ந்திட, ஐந்தாம் இடத்தை புதன், சுக்கிரன், குரு பார்வையிட அந்த ஜாதகருக்கு அநேக குழந்தைகள் ஏற்படும்
5-ம் இடத்து அதிபதி சந்திரனுடன் நிற்க அல்லது அதன் சுய திரிகோணத்தில் நிற்க, அந்த ஜாதகனுக்கு அனேக பெண்குழந்தைகள் பிறக்கும்.
5-ம் இடத்து அதிபதி சர ராசியில் நின்றிட, சனி 5-ல் இருந்து, ராகு, சந்திரன் சேர்ந்து இருப்பின், அந்த குழந்தை பிறப்பு சந்தேகத்துக்குரியது ஆகும்
லக்னத்திலிருந்து 8-ல் சந்திரனும், சந்திரனுக்கு 8-ல் குருவும் நிற்க, பாவிகள் பார்வை அல்லது சேர்க்கை ஏற்படின் அந்த ஜாதகர் பிறப்பு சந்தேகத்துக்குரியது
5-ம் இடத்து அதிபதி உச்சம் பெற்றிட அல்லது லக்னத்திலிருந்து 2,5,9-ல் இருப்பினும், குருவுடன் சேர்க்கை அல்லது பார்வை பெறினும், அந்த ஜாதகருக்கு குழந்தைகள் இருக்கும்.
5-ம் இடத்து(5th House in Astrology அதிபதி பலமிழந்து ஐந்தாமிடத்தில் 3,4 பாவிகள் இருப்பின் அந்த ஜாதகருக்கு பிறக்கும் குழந்தை கீழ்த்தரமான செய்கைகள் செய்பவராக இருப்பார். ஐந்தாமிடத்தில் சுப கிரகங்கள் இருப்பின் அசுப பலன்கள் மாறி சுப பலன்கள் கிட்டும்.
ஐந்தாம் இடத்தில் குரு நிற்க, ஐந்தாம் அதிபதி சுக்கிரனுடன் நின்றிட அந்த ஜாதகருக்கு 32 அல்லது 33 வயதில் புத்திர பாக்கியம் கிட்டும்.
5-ம் இடத்து அதிபதி கேந்திரத்தில் குரு உடன் நிற்க, அந்த ஜாதகர் தனது 30 முதல் 36 வயதில் குழந்தைகளை பெறுவார்.
குரு 9-ல் நிற்க, குருவிற்கு 9-ல் சுக்கிரன் லக்னாதிபதியுடன் நின்றிட, அந்த ஜாதகருக்கு 40 வயதில் குழந்தை பிறக்கும்.
ராகு 5-ல் நிற்க, 5-ஆம் இடத்து அதிபதி பாவ கிரகங்களுடன் நிற்க, குரு நீச்சமாகி நின்றிட, அந்த ஜாதகர் தனது 32 வயதில் புத்திரனை இழப்பார்.
லக்கினத்திற்கு 5-ம் இடத்திலும், குருவுக்கு ஐந்தாம் இடத்திலும், பாவர்கள் நின்றிட, அந்த ஜாதகருக்கு தனது 33 முதல் 36 வயதிலான வயதில் குழந்தைகளை இழப்பார்.
மாந்தி லக்னத்தில் இருந்து லக்னாதிபதி பலம் இழந்து இருப்பின் அந்த ஜாதகர் தனது 56 வயதில் குழந்தையை இழப்பார்
4-ம் இடம் மற்றும் 6-ம் இடத்தில் பாபிகள் இருப்பின், 5-ம் அதிபதி உச்ச பலம் பெற்று லக்னாதிபதியுடன் நிற்க, குருவும் சுப கிரகத்தோடு நின்றிட அவருக்கு 10 குழந்தைகள் ஆகும்.
ஒன்பதாம் இடத்து அதிபதி ஒன்பதில் நிற்க, ராகு இரண்டாமிடத்து அதிபதியுடன் நிற்க, குரு பரம உச்சத்தில் இருப்பின் அந்த ஜாதகருக்கு 9 குழந்தைகள் ஆகும்.
5ஆம் இடத்து அதிபதி பலமாகி, இரண்டாம் அதிபதி பத்தில் நிற்க, குரு 5 அல்லது 9-ல் நின்றிட அந்த ஜாதகருக்கு 8 குழந்தைகள் ஆகும்.
சனியும் 9-ல் நின்றிட, ஐந்தாம் அதிபதி ஐந்தில் நின்றிட, ஏழு குழந்தைகளைப் பெற்று அதில் இரண்டு தடவை இரட்டை குழந்தைகள் பிறக்கும்.
5-ம் இடத்ததிபதி 5-ல் இரண்டாமிடத்து அதிபதி உடன் நிற்க ,ஏழு மகன்கள் பிறந்து, அதில் மூன்று பேர் இறப்பர்.
லக்கினத்திற்கு ஐந்தில் பாவிகள் நிற்க சனிக்கு, ஐந்தில் குரு நிற்க அவருக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே உண்டு.
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் நின்றட, சனிக்கு ஐந்தில் குரு நிற்க, அந்த ஜாதகருக்கு இரண்டாவது மூன்றாவது மனைவி மூலம் குழந்தை பிறக்கும்.
5-ல் பாவ கிரகங்களும், குருவிற்கு 5-ல் சனி நிற்க, ஐந்தாம் அதிபதி இரண்டில் நிற்க, ஐந்தாம் அதிபதி செவ்வாயுடன் நிற்க, அந்த ஜாதகர் நீண்டநாள் வாழ்வார் அந்த ஜாதகரின் குழந்தை ஒன்றன்பின் ஒன்றாக மடியும்..
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் :