சூரியன்-குரு-சுக்கிரன்-சனி பரிவர்த்தனை
சூரியன்- குரு பரிவர்த்தனை
சூரியன் இல்லதில் குருவும் குருவின் இல்லத்தில் சூரியன் அமர்ந்து ஏற்படும் பரிவர்த்தனை நிலையானது நீதித்துறை , நிதித்துறை , ஆன்மிகத்துறை , அரசு வகையில் நுட்பமான ஆய்வுத்துறை , மதம் கலாச்சாரம் , மத போதகர்கள் மத வியாக்கியான கர்த்தாக்கள் மதத்தில் ஆசான் , குரு என்ற நிலை மக்களின் நன் மதிப்பு அரசு வகை பட்டம் பதவி விருதுகள் உதவி தொகைகள் , தாய் , தந்தை , குழந்தைகள் உறவில் சிறப்பு பெற்ற நிலை , வீரியம் மிக்க உடல் பலம் , அரசு வகை தனங்கள் எதிர்பாராமல் அடைவது போன்ற பலன்கள் இப்பரிவர்த்தனை மூலம் கிடைக்கிறது.
மேஷம் , ரிஷபம் , கடகம் , சிம்மம் , விருச்சிகம் , தனுசு , கும்பம் போன்ற லக்கினத்தார்க்கு சிறப்பு மிகுந்ததாக இருக்கும்.
5 , 9 , 4 , 11 , 2 , 9 , 2 , 10 , 5 , 10 , 11 , 7 போன்ற நிலைகளில் பரிவர்த்தனம் ஏற்பட்டிருந்தால் அது நல்ல வலுவான ஜாதகமாக திகழ்கிறது.
இந்த லக்னங்கள் சுப அம்சம் பெற்றிருந்தால் உயர்ந்த பலன்களை தவறாமல் தருகிறது.
சூரியன் - சுக்கிரன் பரிவர்த்தனை
சூரியன் துலாத்திலும் சுக்கிரன் சிம்மத்திலும் இருந்து பரிவர்த்தனை ஏற்பட்டால் இது சிறப்பு மிகுந்ததாக ஏற்றுக் கொள்ள வழிஇல்லை.
பெண்கள் வகையில் , அரசு வகை குற்றங்கள் , தகாத வழியில் செல்வதால் ஏற்படும் அவமானங்கள் , ஆபத்துக்கள் இல்லற சிறப்பின்மை தவறுகளை பெண்களின் , ஆண்களின் தொடர்பு காம நிலை தலைக் கேறுவதால் ஏற்படும் எசகு பிசகான நிலைகள் , கண் கோளாறு எதிர்பாராத வகையில் உயர்வு பின் தாழ்வு தந்தை வர்க்கத்தில் ஏற்பட்ட பெண்களின் சாபத்தினால் வந்த தோஷங்கள் அவ்வகை வம்சா வழியில் 2 , 3 , 4 தாரங்கள் என்ற நிலை தந்தை வழி சொத்துக்கு அழிவு போன்ற நிலை ஏற்படும்.
இந்த பரிவர்த்தனமானது மேஷம் , ரிஷபம் , மிதுனம் சிம்மம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , போன்ற லக்னங்களுக்கு மிகவும் பாதிப்பை தருவதை அனுபவத்தில் காணலாம்.
சூரியன்- சனி பரிவர்த்தனை
சூரியன் இல்லத்தில் சனியும் சனியின் இல்லத்தில் சூரியனும் அமர்ந்து இருக்கும் இப்பரிவர்த்தனை நிலையானது கலை கூத்தாடிகளை உருவாக்குகிறது . மேடை , பேச்சு , பல வேடங்கள் போட்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் திறன் அரசு வகை குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் தந்தைக்கு ஏற்படும்.
அகால மரணங்கள் விஷ சூன்யாதி குற்றங்கள் தகுதிக்கு மீறின செயல்கள் , வாழ்க்கையில் ஏற்படும் விபரீத விளையாட்டுகள் , தான் செய்ய வேண்டிய கடமைகளை காரியங்களை விட்டு பேராசை மூலம் பொருள் தேடும் நோக்கத்துடன் தீய வழிகளில் செல்லுதல் , மற்றவர்களின் உடமைகளுக்கு தீங்கிழைத்தல் நுட்பமான தொழில் திறன் மிக்க இவர்கள் தான் செய்வதை நியாயம் என்றெண்ணி செயல்பட்டு விபரீதங்களை தேடிக் கொள்வர்.
இந்த பரிவர்த்தனமானது ரிஷபம் , மிதுனம் , விருச்சிகம் தனுசு , கும்பம் போன்றவைகளுக்கு நல்ல பலன்கள் தருகிறது ஆனால் அவர்களுடைய செயல் திறன் , தொழில் திறன் நடை முறை பழக்க வழக்கங் களுக்கு ஒப்ப செயல்படுகிறது.