கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தரும் பலன்கள்
கடகத்தில் சனி
7, 8-க்கு அதிபதியாக இருக்கும் சனி பகவான் கடக லக்னத்தில் இருந்தால் ஜாதகருக்கு சுமாரான தோற்றம், உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். மனதில் சஞ்சலம் எப்போதுமிருக்கும். முயற்சிகளில் சுமாரான வெற்றி கிடைக்கும். தந்தையால் பெயர், புகழ் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் சுமாரான லாபம் கிடைக்கும்.
சிம்மத்தில் சனி
2-ம் பாவத்தில் எதிரியான சூரியனின் சிம்ம ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக்கு சிறிய அளவில் நஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். ஜாதகர் வெளியே தன்னை பணக்காரராக காட்டிக் கொள்வார் ஆனால் அவருக்கு பண கஷ்டம் இருக்கும். குடும்பத்தில் சுகத்தில் குறையிருக்கும்.
கன்னியில் சனி
3-ம் பாவத்தில் தன் நண்பரான புதனின் கன்னி ராசியில் சனிபகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார்.உடன்பிறப்புகளுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் ருசித்து சாப்பிடுவார்.கோப குணம் இருக்கும்.
துலாம் ராசியில் சனி
4-ம் பாவத்தில் துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் அடைகிறார். அதனால் மனைவியால் சந்தோஷம் இருக்கும். அன்னையின் உடல்நலத்தில் சிறு குறைகள் இருக்கும். சொந்தத்தில் வீடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஜாதகர் மகிழ்ச்சியுடன் வாழ்வார். 6-ம் பாவத்தை பார்ப்பதால் சிறிய அளவில் நோயின் தாக்கம் இருக்கும்.
விருச்சிகத்தில் சனி
5-ம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகளைப் பற்றிய கவலை இருக்கும். படிப்பாளியாக இருப்பார். வயிற்றில் பிரச்சனை வரக்கூடும். பணத்தை சேமிப்பதில் சிரமம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். மனதில் எப்போதும் அதிகமான சிந்தனைகள் இருக்கும்.
தனுசில் சனி
6-ம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனிபகவான் இருந்தால் பகைவர்கள் ஜாதகரை பார்த்து பயப்படுவார்கள். வியாபாரத்தில் பிரச்சனை இருக்கும். மனைவியின் உடல் நலத்தை கவனிக்க வேண்டும்.வர்த்தகத்தில் கடுமையான போட்டிக்கு பிறகு தான் வெற்றி கிடைக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். உடன்பிறப்புகள் உடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
மகரத்தில் சனி
7-ம் பாவத்தில் மகர ராசியில் சனிபகவான் இருந்தால் ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பல சிரமங்களைக் கடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வருவார்.
கும்பத்தில் சனி
8-ம் பாவத்தில் சனி பகவான் கும்ப ராசியில் சுய வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியால் சிறிய அளவிலேயே சந்தோஷம் கிடைக்கும். வெளிய தொடர்பால் பணவரவு இருக்கும். பெயர் புகழ் கிடைக்கும்.சனியின் 10ம் பார்வை ஐந்தாவது பாவத்திற்கு இருப்பதால் பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும்.
மீனத்தில் குரு
9-ம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சனிபகவான் இருந்தால் அதிர்ஷ்டத்தில் சில தடைகள் ஏற்படும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். வர்த்தகத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.மனதில் கஷ்டங்கள் இருந்தாலும் தைரியமாக இருப்பார்.
மேஷத்தில் சனி
10-ம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனி பகவான் நீசம் அடைவதால் ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அவ்வப்போது நோய்களின் பாதிப்பு ஏற்படும். மனதில் சஞ்சலம் இருக்கும் எனினும் ஜாதகருக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும. நல்ல பணவசதி இருக்கும்.
ரிஷபத்தில் சனி
11-ம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சனிபகவான் இருந்தால் நல்ல பணவரவு இருக்கும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குறைவான படிப்பே இருக்கும். ஆனால் ஜாதகர் சாதுர்ய குணம் கொண்டவராக இருப்பார். கடுமையாக உழைத்து குடும்பத்தை காப்பாற்றுவார்.
மிதுனத்தில் சனி
12-ம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். வெளி தொடர்பால் ஜாதகர் பணம் சம்பாதிப்பர். சிலருக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். தர்ம செயல்கள் செய்வதில் தடைகள் உண்டாகும். எனினும் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.