திருசெம்பொன் செய்கோவில் ( திருநாங்கூர் )
பெருமாளை ஒரு சமயத்தில் பார்த்தால் விளையாட்டுக் குழந்தை,இன்னொரு சமயத்தில் பார்த்தால் மகா குரு . இப்படி திருமால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தினமும் அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும்.
ராவணனுக்கும் மோட்சம் கொடுத்த பெருமாள். இராவணனைக் கொன்ற ஸ்ரீராமனுக்கும் கொலை பாதக பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கினார். அத்தகைய சம்பவங்களில் ஒன்று இந்த செம்பொன் செய்கோவிலிலும் நடந்தது என்பது மிகவும் சிறப்பு. இந்த கோவில் சீர்காழிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இதுவும் திருநாங்கூரில் உள்ள ஸ்தலம்.
மூலவர் ஸ்ரீ பேரளுளாளர் பெருமாள். நின்ற திருக்கோலம்.
வலதுபுற திருமகள் இடது புறத்தில் பூமிதேவி தாயார் அல்லி மாமலர் நாச்சியார்.
தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி.
விமானம் கனக விமானம்.
உற்சவர் செம்பொன்னரங்கர்.
இந்தக் கோவிலிலுள்ள குளத்தில் குளித்து , 32000 முறை அஷ்டாஷர மந்த்ரத்தை மூன்று நாட்கள் இங்கேயே தங்கி ஜெபித்தால் அவர்கள் செய்கின்ற , செய்த அத்தனைப் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசைக்கு அடுத்த நாள் இங்கு நடக்கும் கருட சேர்வை மிகவு விசேஷமானது. ருத்ரன் , த்ருட நேத்ரமுனி பெருமானுக்கு நேரிடையாகவே பெருமாள் தரிசனம் கொடுத்ததாக வரலாறு.
இராவணனை வதம் செய்த பின்னர் . இராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இந்த ஸ்தலத்தில் தியானம் செய்து கொண்டிருந்த த்ருடநேத்ர முனிவரைச் சந்தித்தார். இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க , தங்கத்தால் ஒரு பசு செய்து அதற்கு இந்த ஆஸ்ரமத்திலேயே பூஜை செய்து அதை ஒரு பிராம்மணருக்குத் தானம் செய்ய வேண்டும் என்று அந்த தருட நேத்ர முனிவர் சொன்னார். இராமனும் அவ்வாறே இந்த ஸ்தலத்தில் செய்தான் . இராமனிடமிருந்து தங்கப்பசுவை வாங்கிக் கொண்ட அந்தப் பிராம்மணன். அந்த தங்கப் பசுவைக் கொண்டு பெருமாளுக்கு இந்தக் கோயிலைக் கட்டினான். அதனால் இந்த ஊர்க் கோயிலுக்கு செம்பொன் செய் கோவில் என்று பெயர் வந்தது என்று கூறுவர். உண்மையில் மிகச் சிறப்பான அமைப்புகளைக் கொண்டது இந்தக் கோயில்.
பரிகாரம்
ராம பெருமானுக்கே பிரம்மஹஸ்தி தோஷம் போன கோயில் ஸ்தலம் என்பதால் சாதாரண பக்தர்களும் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களைப் போக்குவதற்கு, எதிர்கால இல்லற வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் மாற்றுவதற்கும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் போதும். பசுவைக் கொன்றவர்வர்கள், பிறர் சொத்தை ஏமாற்றி அபகரித்தவர்கள், பொய் சொல்லி மற்றவர்கள் குடும்பத்தை கெடுத்தவர்கள் ஆகிய அத்தனை பேர்களும் தங்கள் தவறுகளை மனதில் வைத்து கஷ்டப்படாமல் இங்கு வந்து பரிகாரம் செய்தால் போதும் அவர்களை மன்னித்து பாவங்களை களைந்து விடுவார்.
கோவில் இருப்பிடம்