தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்-திருவாஞ்சிக்குளம்( அஞ்சைக்களம்)
🔶இறைவன்-மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்
🔶 இறைவி-உமையம்மை
🔶தலமரம் – சரக்கொன்றை
🔶 தீர்த்தம்-சிவகங்கை
🔶பாடல்– சுந்தரர்
🔶நாடு-சேர நாடு
🔶வரிசை எண்-266
🔶தொலைபேசி– 0487-2331124,0480-2812061
🔶அலைபேசி-?
🔶முகவரி :
அ / மி . மகாதேவசுவாமி கோயில்,
வாஞ்சிக்குளம் & அஞ்சல்,
(வழி)கொடுங்களூர் ,
திருச்சூர் (மாவட்டம்)
கேரளா – 680664
🔱அருகிலிருக்கும் தலங்கள்🔱
கொடுங்காளூர் (சேரமான் பெருமாள் நாயனார் ஆண்ட தலம்)
🔶கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை – 5:00-11:00
மாலை -5:00-8:00
🔱தலசிறப்புகள்🔱
சுந்தர மூர்த்தி நாயனார் முக்தி தலம்.இங்கிருந்துதான் வெள்ளை யானை மீதேறி கயிலை சென்றார்.
பண் - இந்தளம்
இராகம் - நாதநாமக்கிரியா
திருமுறை- ஏழு
பதிகம்-4
பாடல் -1
🔱 சுந்தரர் 🔱
தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்ததென்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்ததென்னே
அதன்மேல் கதநாகம் கச்சார்த்த தென்னே மலைக்கு நிகரொப்பன வன்திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரிகொண்டு அலைக்கும் கடல் அங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
பண் - இந்தளம்
இராகம் - நாதநாமக்கிரியா
திருமுறை- ஏழு
பதிகம்-4
பாடல் -10
🔱 சுந்தரர் 🔱
எம்தம் அடிகள் இமையோர்பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றான் அந்தண் கடல் அங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை
மந்தம் முழவும் குழலும் இயம்பும்
வளர் நாவலர் கோன் நம்பிஊரன் சொன்ன சந்தம் மிகு தண்தமிழ் மாலைகள் கொண்டு
அடிவீழ வல்லார் தடுமாற்று இலரே
வழித்தடம்
திருசூரில் இருந்து NH 17 ல் இரிஞாலக்குடா வழியாக சென்றால் வாஞ்சிகுளம் அருகில் அல்லது கொடுங்கோலூர்
🔱கோவில் இருப்பிடம்🔱