அம்பல் பிரம்மபுரீசுவரர் கோயில்
இறைவன் – பிரம்மபுரீஸ்வரர்
இறைவி – சுகுந்தகுந்தளாம்பிகை,பூங்குழலம்மை
தலமரம் – புன்னை
தீர்த்தம் -பிரம்ம
பாடல் – சம்பந்தர்
நாடு – சோழநாடு (தென்கரை )
வரிசை எண் – 171
அருகில் உள்ள கோவில்கள்
அம்பர் மாகாளம் ,நன்னிலம் ,திருவாரூர்
தலச்சிறப்புக்கள்
மாடக்கோவில் சோச்செங்கட்சோழ மன்னனின் கடைசி திருப்பணி.சோமாசி நாயனார் வாழ்ந்த தலம்.பிரம்மன் வழிபட்ட தலம் மாசி மகத்தில் பிரம்மோற்சவம் .
சம்பந்தர்
எரிதர அனல் கையிலேந்தி எல்லில்
நரிதிரி கானிடை நட்டமாடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர்மாநகர்க்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே
சம்பந்தர்
கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடியாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடமது என்பரே
சம்பந்தர்
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீலகண்டரை
உமிழ்திரை உலகினில் ஒதுவர் கொள்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே
வழித்தடம்
பூந்தோட்டத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் சென்று ரயில்வே கேட் தாண்டி 4 கி.மீ சென்றால் கோவில்
கோவில் இருப்பிடம்