திருவதிகை
இறைவன் – வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.
இறைவி – திரிபுரசுந்தரி
தலமரம் – சரக்கொன்றை
தீர்த்தம் – கெடிலம்
பாடல் – மூவர்
நாடு – நடுநாடு
வரிசை எண் – 39
கோவில் திறக்கும் நேரம்
காலை – 6:00Am -12:00pm
மாலை – 4:30Pm – 9:30pm
அருகில் உள்ள கோவில்கள்
திருநாவலூர்,திருதுறையூர்
தலச்சிறப்புக்கள்
✴️அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று.
✴️திரிபுராதிகளை இறைவன் எரித்த தலம் .
✴️திலகவதியார் பூத்தொண்டு புரிந்த தலம்
✴️சூலை நோய் கொடுத்து மருள்நீக்கியாரை ஆண்டு அவருக்குத் திருநாவுக்கரசு என்ற திருநாமத்தை உலகறிய இறைவன் சூட்டியருளிய தலம்.
✴️இறைவன் நடனத்தை சம்பந்தர் கண்ட தலம்.
சம்பந்தர்
குண்டைக் குறட்பூதம் குழும அனலேந்திக் கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே
திருநாவுக்கரசர்
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே
சுந்தரர்
தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற்கொள்
பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்து
அம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.
வழித்தடம்
பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 2 கி. மீ சென்றால் திருவதிகை கோவிலை அடையலாம்.