அநேகதங்காவதம் (கெளரிகுண்டம்)
இறைவன் – அருள்மன்னேஸ்வரர் .
இறைவி – மனோன்மணி
தலமரம் –
தீர்த்தம் –
பாடல் – சம்பந்தர்
நாடு – வடநாடு
வரிசை எண் – 270
அருகில் உள்ள கோவில்கள்
கேதார்நாத் (உ.பி),பத்ரிநாத் (உ.பி )
தலச்சிறப்புக்கள்
✴️அம்பிகை தவம் செய்த தலம் .
✴️இங்கு இயற்கையில் உருவாகும் வெந்நீர் ஊற்று உள்ளது அதில் நீராடுவது விஷேசம்.
சம்பந்தர்
நீடல்மேவு நிமிர்புன்சடை மேலோர் நிலாமுளை
சூடல் மேவு மறையின் முறையாலோர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் பாடல் மேவுமனத்தார் வினை பற்றறுப்பார்களே
சம்பந்தர்
தேனையேறு நறுமாமலர் கொண்டு அடிசேர்த்துவீர்
ஆனையேறு அணிசாரல் அனேகதங்காவதம்
வானையேறு நெறிசென்று உணரும்தனை வல்லிரேல்
ஆனையேறு முடியான் அருள்செய்வதும் வானையே
சம்பந்தர்
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல நல்ல அடையும் அடையா சுடுதுன்பமே.
வழித்தடம்
கேதார்நாத் செல்லும் சாலையில் 14 கி.மீ சென்றால் கெளரிகுண்ட் எனப்படும் அநேகதங்காவதம் கோவிலை அடையலாம்.
கோவில் இருப்பிடம்