சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தரும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தரும் பலன்கள்

சிம்ம லக்னத்தில் சூரியனின் எதிரியான ராகு பகவான் இருந்தால், ஜாதகர் சுமாரான தோற்றத்தை கொண்டிருப்பார். மன அமைதி இல்லாமல் இருப்பார். உயர் பதவிக்காக ரகசியமாக சில காரியங்களை செய்வார். தைரியசாலியாக இருப்பார். பலரும் அதற்காக அவரை பாராட்டுவார்கள் .அந்த தைரியத்தால் அவர் வெற்றி பெறுவார்.

2-ம் பாவத்தில் தன் நண்பரான புதனின் வீட்டில் கன்னி ராசியில் ராகு பகவான் இருந்தால், குடும்பத்தில் சிறிய பிரச்சனை இருக்கும். எனினும் ஜாதகருக்கு வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைக்கக் கூடியவராக இருப்பார். ரகசியமாக செயல்பட்டு தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார். எப்போதும் சாதுரியமாக செயல்படுவார்.

3-ம் பாவத்தில் துலாம் ராசியில் ராகு இருந்தால், ஜாதகருக்கு உடன்பிறப்புகளால் சிறிய பிரச்சனைகள் உண்டாகும். ஆனால் தைரியமாக செயல்பட்டு வெற்றி பெறுவார். கடுமையாக உழைத்த பணம் சம்பாதிப்பார். பெயர்,புகழ் பெறுவார். மனதில் குடும்பத்தை பற்றிய சிந்தனை எப்போதும் இருக்கும்.

4-ம் பாவத்தில் விருச்சக ராசியில் ராகு பகவான் எதிரி செவ்வாயின் வீட்டிலிருந்தால் தாய்க்கு உடல் நல பாதிப்பிற்கும். மனதில் கவலை இருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் சில தடங்கல்கள் இருக்கும். வீட்டில் அமைதியற்ற நிலை காணப்படும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்று வேலை பார்ப்பார்கள்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தரும் பலன்கள்

ஐந்தாம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு பகவான் நீசம் அடைகிறார். அதனால் பிள்ளைகளால் சில கஷ்டங்கள் இருக்கும். படிப்பில் குறை ஏற்படும். ஜாதகர் தன் அயோக்கியத்தனங்கள் வெளியே தெரியாத வகையில் பார்த்துக் கொள்வார்.

6-ம் பாவத்தில் சனிபகவானின் மகர ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு பகைவர்களால் பிரச்சனைகள் உண்டாகும். ஆனால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார்.

7-ம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தால், ஜாதகருக்கு மனைவியால் மனக்கஷ்டம் உண்டாகும். வர்த்தகத்தில் சில தடங்கள் உண்டாகும். ஜாதகர் கடமையாக உழைத்து ரகசியமாக செயல்பட்டு தன் காரியங்களை சாதிப்பார். அதன் மூலம் தன் குடும்பத்தை காப்பாற்றுவார்.

8-ம் பாவத்தில் குருவின் மீன ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியதாயிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். அன்றாட செயல்களை நினைத்து மனதில் கவலை உண்டாகும். உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் வயிற்றில் பிரச்சனை உண்டாகும்.

9-ம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு பகவான் இருந்தால் அதிர்ஷ்டத்தில் தடைகள் இருக்கும். நடக்க வேண்டிய நல்ல செயல்கள் இறுதி நிமிடத்தில் நடக்காமல் நின்று விடும். அதனால் மனதில் கவலை உண்டாகும். சிலர் தர்ம செயல்களை செய்ய முடியாது. சிலர் வெறுப்பு காரணமாக கடவுளை வழிபட மாட்டார்கள்.

பத்தாம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவிருக்கும். வியாபாரத்தில் தடங்கல்கள் இருக்கும். அரசாங்க விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் ராகு தசை நடந்தால் ராஜயோகம் உண்டாகும். ஜாதகர் தைரியத்துடன் வாழ்வார்

11-ம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு பகவான் உச்சமடைகிறார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகருக்கு பல வகைகளில் வருமானம் வரும். சிலருக்கு திடீர் பணவரவு இருக்கும்.

12-ம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் ராகு பகவான் இருந்தால், ஜாதகருக்கு வீண் செலவுகள் இருக்கும். அதன் காரணமாக மனதில் கவலை உண்டாகும். சில நேரங்களில் அதிக அளவில் கஷ்டங்கள் உண்டாகும். அதனால் அதிக மனக்கவலை ஏற்படும்.

Leave a Comment

error: Content is protected !!