பிறந்த திதி பலன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திதி கணக்கிடுவது எப்படி

திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

1. திதியின் அளவு

2. பாகையின் அளவு

பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேர் கணக்குகள் முடிவு நாழிகை

வினாடிகளில் உள்ளது அவை 28- 1/4 நாட்கள் வரும். அமாவாசை தினத்தில் சந்திரன், சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக (“O” டிகிரியில்) நின்ற பின் பூமியைக் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது சூரியனப் பிரியும் ஒவ்வொரு 12 பாகைகள் கொண்ட 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.

சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அவை பிரதமை முதல் அமாவாசை வரையான 15 திதிகளும் சுக்கில பட்சத் திதிகள் எனவும் தேய் பிறை காலத்தில் பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு திதியால் ஆளப்படுகிறது. இச் சுற்று முழு நிலவின் (பௌர்ணமி) மறுநாளும்,புதுநிலவின் முதல்நாளான அமாவாசையன்று தொடங்குகிறது.

திதி

சுக்ல பட்சம் (அல்லது) பூர்வ பட்சம் : வளர்பிறை கிருஷ்ண பட்சம் (அல்லது) அமர் பட்சம் : தேய்பிறை என இரண்டு வகைப்படும். சுக்லம் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு ‘வெண்மை’ என்றும், கிருஷ்ண எனும் சொல்லுக்கு ‘கருமை’ என்றும் பொருள் பிரதமை முதல் அமாவாசை வரை தேய்பிறை ‘கிருஷ்ண பட்சம்’ அல்லது அமர பட்சம். பிரதமை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை ‘சுக்ல பட்சம்’ அல்லது பூர்வ பட்சம்.

சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேய் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.

அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார்.அன்று முதல் திதியாகிய “பிரதமையும்”. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5, பஞ்சமி, 6 சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பௌர்ணமித் திதியும் ஏற்படுகின்றது.

சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள். I

அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் (தேய்-பிறைத் திதிகள்) கிருஷ்ணபக்ஷக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள்.

புத்தி சுவாதீன முற்றோர்; அமாவாசை, பூரணை, அட்டமி போன்ற திதிகளில் (கனத்த நாட்களில்) மிகவும் கடுமையாக (வேகமாக) உள்ளவர்களாக காணப்படுவது கிரகங்கள் புவியில் உள்ள உயிர்கள் மீது தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றன என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகும்.

பிறந்த திதி பலன் மற்றும் திதி அதிபதிகள்

திதி

பிரதமை திதி

இந்த பிரதமை திதிக்கு அதி தேவதை அக்னி பகவான் ஆவார்.வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் புது வீடு கட்டுவாதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.

துவிதியை திதி

அரசாங்கம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் செய்யலாம். திருமணம் செய்யலாம், புதிய ஆடை, நகைகள் வாங்கி அணியலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். கோயில்களில் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம். துவிதியை திதிக்கு அதிதேவதையாக பிரம்ம தேவன் இருக்கிறார்.

திதி

திருதியை திதி

திருதியை திதியின் அதிதேவதை கௌரி எனப்படும் பராசக்தி ஆவார்.இந்த திதியில் குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சங்கீதம் கற்க தொடங்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அலங்கரித்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.

சதுர்த்தி திதி

சதுர்த்தி திதிக்கு எமதருமன், விநாயகப் பெருமான் ஆகிய இருவரும் அதிதேவதைகளாக இருக்கின்றனர்.முற்காலத்தில் மன்னர்கள் பிற நாடுகளின் மீதான படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுத்தனர். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம் நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்ய உகந்த திதி. இது ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள் மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நீங்கும்.

பஞ்சமி திதி

அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும். பஞ்சமி திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதைகள் ஆகின்றனர். எனவே நாக வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபட நாக தோஷம் நீங்கும். நாக பஞ்சமி விசேஷ தன்மை கொண்ட திதியாகும்.

சஷ்டி திதி

சஷ்டி திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் எனப்படும் முருகப்பெருமான் ஆவார். சஷ்டி என்றால் ஆறு என்பது பொருள் ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நன்மைகள் ஏற்படும். நன்மக்கட் பேறு உண்டாகும். சிற்பம், வாஸ்து போன்ற காரியங்களில் ஈடுபடலாம்: புதிய ஆபரணங்கள் தயாரிக்கலாம். புது வாகனம் வாங்கலாம். புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

சப்தமி திதி

சப்தமி திதியின் அதிதேவதை சூரிய பகவான் ஆவார். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான நன்மைகளை தரும். தொலைதூர பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ள சிறந்த திதி இது. திருமணம் செய்யலாம். புதிய இன்னிசை சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம் புதிய ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

திதி

அஷ்டமி திதி

அஷ்டமி திதியின் அதி தேவதை ருத்திரன் எனப்படும் சிவ பெருமான் ஆவார். வீடு மற்றும் தங்களுக்கான அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதிய தளவாடம் வாங்கலாம். நாட்டியம் பயில்வதற்கும் சிறந்த திதியாகும்.

நவமி திதி

நவமி திதிக்கு அம்பிகை அதிதேவதை ஆவாள். எதிரிகள் பயத்தை போக்கும் திதி. இது தீமையான விசயங்கள் அனைத்தையும் ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபட சிறந்த திதி இது.

தசமி திதி

தசமி திதிக்கு எமதருமன் அதிதேவதை ஆவார். அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம் ஆன்மிகப்பணிகளுக்கு மிகவும் ஏற்ற திதி இது. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஒட்ட பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.

ஏகாதசி திதி

ஏகாதசி திதிக்கு விஷ்ணு அதிதேவதை ஆவார். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிற்பம் செதுக்குதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

துவாதசி திதி

துவாதசி திதிக்கு விஷ்ணு அதிதேவதை ஆவார். பொதுவாக மதச்சடங்குகளில் ஈடுபடவும், தெய்வீக காரியங்கள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி இது.

திரயோதசி திதி

இந்த திதியில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம் ஆகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம் புத்தாடை அணியலாம் எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம் விளையாட்டுகள், கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதிக்கு மகாசக்தியான காளி தேவி அதிதேவதை ஆவாள். எனவே புதிய ஆயுதங்கள் உருவாக்க, துஷ்ட சக்திகள், எதிரிகளை வெற்றி கொள்ள, தீயவற்றை ஒழிக்கும் மந்திரம் பயில ஆகிய செயல்களுக்கு ஏற்ற திதியாக இருக்கிறது.

பௌர்ணமி திதி

பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.உங்கள் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம் கோயில் சிற்ப வேலைப்பாடுகள், மங்கள காரியங்களில் ஈடுபடலாம். தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம்.

அமாவாசை திதி

அமாவாசை திதிக்கு சிவன், சக்தி ஆகிய இருவரும் அதிதேவதை ஆவார்கள். பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம் தான- தர்ம காரியங்கள் செய்ய உகந்த திதி இயந்திரம் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் தொடங்கலாம்.

வளர்பிறை, தேய்பிறை திதிகளில் கவனமாக இருக்க வேண்டிய இராசிகள்.

மேஷம்- சஷ்டி

ரிஷபம்-சதுர்த்தி, திரயோதசி

மிதுனம் – பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

கடகம்-சப்தமி

சிம்மம்- திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி

கன்னி -பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

துலாம் – பிரதமை, துவாதசி

விருச்சிகம்-நவமி, தசமி

தனுசு – துவிதியை ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

மகரம்- பிரதமை, திருதியை துவாதசி.

கும்பம்-சதுர்த்தி

மீனம்- துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

Leave a Comment

error: Content is protected !!