Navagraha temples |நவக்கிரகக் கோயில்கள்-திங்களூர்(சந்திரன்)
ஸ்தலம் :திங்களூர் (சந்திரன்)
சுவாமி : ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீபெரியநாயகி
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சிறப்பு
பங்குனி உத்திரத்தன்று காலை 6.00 மணிக்கு சூரிய ஒளி சிவலிங்கத்தின் மேல் பிரவேசிப்பதால் அன்று சூரிய பூஜையும், மறுதினம் (பௌர்ணமி) பிரதமையில் மாலை 6.30 -க்கு சந்திர ஒளி சிவலிங்கத்தின் மேல் பிரவேசிப்பதால் அன்று சந்திர பூஜையும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. சந்திர பகவானுக்கு தனிச்சன்னதி உள்ளது.
வழித்தடம்
இத்தலம் திருவையாறு – கும்பகோணம் பேருந்துச் சாலையில் திருவையாற்றில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாறு திங்களூருக்கு 15. 28. 46 ஆகிய டவுன் பஸ்கள் உள்ளன. கும்பகோணம் – திருவையாறு. கபிஸ்தலம் வழியாக ரூட் பஸ்களும் உள்ளன. மெயின்ரோட்டிலிருந்து 2 கி.மீ. தூரம் நடந்துதான் திருக்கோயிலை அடைய வேண்டும்.
பூஜைக் கட்டணம்
ரூ.500.00 கட்டினால் அபிஷேகம் செய்யலாம். திருக்கோயிலில் ஏற்பாடு செய்து தருகிறார்கள். நேரம்: காலை 6.00 மணி. 9.00 மணி
அர்ச்சனை
விநாயகர்,சுவாமி, அம்பாள், திங்கள், சந்திரனுக்குத் தனி சன்னதி உள்ளன.
திருநாவுக்கரசு நாயனார் அருளிய ஒரு திருப்பதிகம் உள்ளது.
திருக்கோயில் முகவரி
செயல் அலுவலர், ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர்,
திருப்பழனம் போஸ்ட்- 612 204. திருவையாறு தாலுக்கா.navagraha temples route map
திருக்கோயில் தொலைபேசி எண்
போன் : (04362) 262499