அடிப்படை ஜோதிடம் -பகுதி-49-அனுஷம் நட்சத்திரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

நட்சத்திர சிறப்பம்சங்கள்- அனுஷம்  

  • அனுஷம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்கள்,
  • வசதியுடன் இருப்பார்கள்,
  • பலவித ஆடைகள் நகைகள் அணிவதில் விருப்பமுள்ளவர்கள், அலங்காரப் பிரியர்கள்,
  • நல்ல மனம் கொண்டவர்கள், பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார்கள்,
  • மென்மையான குணம் உள்ளவர்கள்,
  • காரியங்களை முழுமையாக முடிப்பார்கள் ,
  • இயற்கையை ரசிக்க கூடியவர்கள்,
  • எதையும் சுய விருப்பத்துடன் செய்வார்கள்,
  • கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பார்கள், கதாநாயகனைப் போல் வாழ்வார்கள், 
  • இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு N என்னும் ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும்
யோனி-மான்
கணம்- தேவகணம்,
நாடி-மத்திம நாடி 
அதிபதி-சூரியன்
கிரகம்-சனி 
 
அனுஷம் நட்சத்திரம்

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால் அது குணமாவதற்கு 12 முதல் 30 நாட்கள் வரை ஆகும் நோய் குணமாக நமோ மித்ரேதி மந்திரத்தை கூற வேண்டும். நெய்யை தானமளிக்க வேண்டும் நாகலிங்க மரத்தை வழிபட வேண்டும்.
 
பிறக்கும்போது ஜாதகத்தில் சனி லக்னத்தில் அல்லது சுய வீட்டில் அல்லது உச்சமாக இருந்தால் தலைமைப் பதவிக்கு வருவார்கள் 
 
சனி குருவால் பார்க்கப்பட்டால் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து பெரிய மனிதர்களாக வருவார்கள் 
 
சனி சந்திரனுடன் 8ல் இருந்தால் இளம் வயதில் அடிக்கடி காய்ச்சல் வரும் 
 
சனி ஆறாம் பாவத்தில் இருந்தால் பித்த நோய் உண்டாகும் சந்திரன் பலவீனமாக இருந்தால் மனநோய் வரும் 
 
சனி சந்திரனுடன் பன்னிரண்டில் இருந்தால் தூக்கம் சரியாக வராது குடிப்பழக்கம் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது
 
 இரண்டில் சனி சூரியன் புதன் அல்லது சனி சூரியன் செவ்வாய் இருந்தால் காய்ச்சல் வரும் 
 
உணவில் கட்டுப்பாடு இருக்காது சிலர் காரம், மாமிச உணவு மது ஆகியவற்றை அதிகமாக உண்டு உடலை கெடுத்துக் கொள்வார்கள்
 
செல்லவேண்டிய திருக்கோவில் :
கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில்
 
அம்மன்: உலகநாயகி
தல வரலாறு:
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.
சிறப்பு:
பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்:
மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.
,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.

Leave a Comment

error: Content is protected !!