அனுஷம் நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அனுஷம் நட்சத்திரம்
அனுஷம் நட்சத்திரம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

பசி தாங்காதவர்கள்,பால் மனம் கொண்டவர்கள்,அன்புக்கு அடிமையானவர்கள்,நிதானமான பேச்சுகளை உடையவர்கள்,உண்மையை பேசுபவர்கள்,தர்ம சிந்தனையும் இரக்க குணமும் கொண்டவர்கள்.கீர்த்தி உடையவர்கள்,வெளிநாட்டில் வாழ்வதில் நாட்டம் கொண்டவர்கள்,குறைந்த தன்னம்பிக்கை மற்றும் ஆழ்ந்த அறிவு உடையவர்கள்,எதிர்கால திட்டங்களில் விருப்பம் உடையவர்கள்,எல்லோரும் விரும்ப கூடியவர்கள்,நேர்மையானவர்கள்,பெற்றோரை பேணி காப்பவர்கள்,மிதமான வேகம் உடையவர்கள்,செல்வாக்கு மிகுந்தவர்கள்,இன் சொற்களை பேச கூடியவர்கள்,செல்வம் உடையவர்கள்,மேன்மையான பதவிகலை வகிக்க கூடியவர்கள்,மற்றவர்களின் மனம் குணம் அறிந்து செயல்படுவதில் சிறந்தவர்கள்,பயணங்களில் விருப்பம் உடையவர்கள்,பிறரிடம் மனம் விட்டு பேச மாட்டார்கள்.

அனுஷம் நட்சத்திரம்

அனுஷம் நட்சத்திரம் பற்றிய தகவல்கள்

நட்சத்திரத்தின் ராசி – விருச்சிகம்

நட்சத்திர அதிபதி-சனி

நட்சத்திர நாம எழுத்துகள் :ந -நி -நு -நே

கணம் :தேவ கணம்

மிருகம் :பெண்மான்

பட்சி : வானம்பாடி

மரம் :மகிழம்

நாடி :மத்திய பார்சுவ நாடி

ரஜ்ஜு :இறங்கு தொடை

அதி தெய்வம் :மித்ரன்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்பம்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்கள். மனைவிக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்காக எதையும் விட்டு கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். செல்வம் செல்வாக்கு அசையும் அசையா சொத்துக்கள் யாவும் சிறப்பாக அமையும்.

எல்லாரிடத்திலும் நட்பாக பழகுவதால் உற்றார் உறவினர்களின் ஆதரவைப் பெறுவார்கள் ஆழ்ந்த சிந்தனையில் எப்பொழுதும் முழ்கியிருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் 29 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். 40 முதல் 60 வயது வரை பொற்காலமாக அமையும். தன்னுடைய தாராள மனப்பான்மையை எப்பொழுதும் வீட்டில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் தொழில்கள்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்காக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளிகளாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசனகர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல் துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள்.

ஒரு சிலர் கட்டிட கலை, காண்டிராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். பலராலும் பாராட்டப்படக் கூடிய அரிய பெரிய காரியங்களை செய்து பெரிய பதவிகளை வகிப்பார்கள். மக்கள் செல்வாக்கால் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றிலும் இடம் பெறும் வாய்ப்பு அமையும். சமுதாயத்தில் புகழ் பெருமை, செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். தொழிலாளர்களுக்காக போராடுவதால் தொழில் சங்க தலைவராக இருப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரம்

அனுஷம் நட்சத்திரகாரர்களை தாக்கும் நோய்கள்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இடது கண் நரம்புகள் மற்றும் தலை நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். தலைவலியும், வயிற்றில் பிரச்சனையும் எப்பொழுதும் இருக்கும்.

மகா திசை பலன்கள்

அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 19 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள சனி தசா புக்திகளை பற்றி அறியலாம். சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடையே கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் தனமும் உண்டாகும்.

இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்கள் 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.

மூன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.

நான்கவதாக வரும் சுக்கிரன் திசை 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வும் அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.

சூரிய திசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரம்

அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம்

நல்ல அறிவுடயவர்கள் ,வைராக்கியம் கொண்டவர்கள்,நினைவாற்றல் கொண்டவர்கள்,ஏட்டறிவு பெறுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.

அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்

அழகான தோற்றம் கொண்டவர்கள்,கலைகளை ரசிப்பவர்கள்,அலங்காரத்தில் விருப்பம் உடையவர்கள்,இசையில் வல்லமை உடையவர்கள்,பொறுப்பும் பாசமும் உள்ளவர்கள்,வாக்கு திறமை உடையவர்கள்,சிறந்த அறிவாளி ஆனால் கருமி

அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்

நேசம் மிகுந்தவர்கள் ,கடமைகளை அறிந்து செயல்படுபவர்கள்,உழைக்க தயங்காதவர்கள்,மற்றவர்களுக்கு உதவுவதில் விருப்பம் உடயவர்கள்,நல்ல புத்தி உடயவர்கள்,இனிய குரல் உடயவர்கள்

அனுஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்

இவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்,எதிர் பார்த்த காரியம் எதிர்பாராத நேரத்தில் நிறைவேறும் ,முன்னேற்றம் என்பது இவர்களின் முயற்சியை சார்ந்ததே.தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் 

செல்லவேண்டிய ஆலயம்

அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம்

விருத்தாசலத்துக்கு அருகிலுள்ள ராஜேந்திரப் பட்டினத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீறாமுலையம்மன் உடனுறை திருக்குமரேசரை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்

வரகுணமங்கை (நத்தம்) என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வரகுணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ விஜயாசனப் பெருமானை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்

திருச்சிறுப்புலியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீ சலசயனப் பெருமாளை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்

காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூற வேண்டிய மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு பிரசோதயாத்

அனுஷ நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

பரணி, பூசம்,பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகியவை பொருந்தாது.

Leave a Comment

error: Content is protected !!