Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 20252025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷ ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷ ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- மேஷ ராசி

செவ்வாய் பகவானின் ஆசி பெற்ற மேஷ ராசி அன்பர்களே!!! உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வரும் 2025 உங்களுக்கு எப்படிப்பட்ட ஆண்டாக அமையும் என்பதை சுருக்கமாக கூறுகிறேன்..

வேலை

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட்டு உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். பிறரது சூழ்ச்சியால் வீண் பழி சுமந்த நிலை மாறும். உங்களது மனம் போல் இடமாற்றம், பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் முயற்சிகள் கை கொடுக்கும். அதே நேரம் உங்களது உயர்வுகளை தக்க வைத்துக் கொள்வதற்கு உழைப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். புதிய வேலைக்காக முயற்சிப்பவர்கள் மனம் மகிழும் படி வாய்ப்பு கிட்டும். சிலருக்கு முதன்முறையாக வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

குடும்பம்

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இடம் பிடிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் மளமளவென்று கைகூட தொடங்கும். நன்மைகள் நிலைத்திருக்க குலதெய்வத்தை வணங்குவது நல்லது. பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் வீண் அதிகாரம் காட்டாமல் அன்பால் திருத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். உறவினர்களிடம் பேசும் போது அதிகாரப் போக்கை கைவிட்டால் ஆனந்தம் இரட்டிப்பாகும். வரவு அதிகரிக்கும். தினமும் சிறிது நேரம் தியானம், யோகா பழகுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

தொழில்

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். அதே சமயம் கூட்டுத் தொழில் அவசர ஒப்பந்தம் கூடாது. வங்கி கடன்களை ஆடம்பரத்திற்கு செலவிட வேண்டாம். அரசு வழி அனுமதிகளில் இருந்து தடை விலகி கைகூடும். சிலருக்கு புதிதாக வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் தேடி வரும்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்

2025 ம் ஆண்டு ஜாதக பலன்கள்

பொதுவான பலன்கள்

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு பதவி பாராட்டுகளும் கிடைக்கும். புறம் பேசும் நபர்களை புறம் தள்ளுங்கள். மேல் அதிகாரி அனுமதி இல்லாமல் பிறருக்கு வாக்குறுதி தருவதை தவிர்த்து விடுங்கள்.

மாணவர்களுக்கு திறமைக்கு உரிய உயர்வுகள் வரத் தொடங்கும். பாடங்கள் மனதில் எளிதாக பதிய அதிகாலை படிப்பை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கலை, சினிமா துறையினர் படைப்பு சார்ந்த ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

அறிவுரை

இரவு நேர பயணத்தை தொடங்கும் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வேகத்தை அறவே தவிர்த்திடுங்கள். தேவையில்லாத மன அழுத்தம் வராமல் இருக்க தினமும் கொஞ்ச நேரம் தியானம், யோகா செய்யுங்கள். கழுத்து, தோள்பட்டை ,மூட்டுகள், கழிவு உறுப்பு உபாதைகளை உடனே கவனியுங்கள்.

பலன் தரும் ஆலய வழிபாடு

இந்த வருடம் ஒருமுறை திருச்செந்தூர் முருகனை சென்று வணங்கி விட்டு வாருங்கள். மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். இந்த 2025 ஆம் வருடம் உங்களுக்கு 65 சதவீதம் நற்பலன்களை வழங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!