ஏப்ரல் மாத ராசிபலன்கள்-2024
மேஷம் -Mesham
உங்கள் ராசிக்கு சனி செவ்வாய் 11ல் சஞ்சரிப்பதாலும், 6ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சூரியன், சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவுரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள்.
பரிகாரம் : சிவபெருமானை வழிபாடு செய்யவும்
சந்திராஷ்டமம் : 25.4.2024 இரவு 8 மணி முதல் 28.4.2024 அதிகாலை 4:28 மணி வரை.
ரிஷபம் -Rishbam
ரிஷப ராசிக்கு 10 ,11ல் செவ்வாய், 11ல் சுக்கிரன், ராகு மாதம் முற்பாதியில் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அமைப்புகள், எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் இம்மாதத்தில் உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றி பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம்.
பரிகாரம் : விஷ்ணு வழிபாடு, குருவுக்கு தீபம் ஏற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் : 28.4.2024 அதிகாலை 4.28 மணி முதல் 30.4.2024 காலை 10.36 மணி வரை.
மிதுனம் -Mithunam
ஜென்ம ராசிக்கு செவ்வாய் 9 ,10-லும், சூரியன் 10 ,11லும் சஞ்சரிப்பதால் எவ்வித மறைமுக எதிர்ப்பார்ப்புகளையும் சமாளித்து ஏற்றம்பெறும் ஆற்றல் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு புதன் 11ல் இருப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 3.04.2024 அதிகாலை 4.37 மணி முதல் 5.4.2024 காலை 7.12 மணி வரை. மற்றும் 30.4.2024 காலை 10.36 மணி முதல் 2.5.2024 பகல் 2.32 மணி வரை
கடகம் -Kadagam
மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 9 ,10ல் சஞ்சரிப்பதாலும், 3ல் கேது சஞ்சரிப்பதாலும், உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சனி செவ்வாய் 8ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல், உடல் ரீதியாக மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வண்டி வாகனங்களில் செல்கின்ற பொழுது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம் : முருகரையும், பெருமாளையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் : 5.4.2024 காலை 7.12 மணி முதல் 7.4.2024 காலை 7.39 மணி வரை
சிம்மம் -Simmam
குரு, புதன் 9ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். செவ்வாய் 7லும், முற்பாதியில் சூரியன் 8லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பங்காளிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
பரிகாரம் : துர்க்கை வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டமம் : 7.4.2024 காலை 07.39 மணி முதல்9.4.2024 காலை 7.32 மணி வரை
கன்னி – Kanni
சனி, செவ்வாய் 6ல் இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள் என்றாலும் 7,8ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல்நலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது சட்ட விதிக்குட்பட்டு நடக்கவும். பண வரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும், பொருள் தேக்கங்கள் ஏற்படாது. வேலையாட்களின் ஆதரவுடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் : உக்கிர தெய்வங்களை வழிபடவும்.
சந்திராஷ்டமம் : 9.4.2024 காலை 07.32 மணி முதல்11.4.2024 காலை 8.40 மணி வரை.
துலாம் -Thulam
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6ல் ராகு, முற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், உங்களது பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துக்களால் அனுகூல பலன் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும்.
பரிகாரம் : முருகரையும், மகாலட்சுமியும் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் : 11.4.2024 காலை 8.40 மணி முதல் 13.4.2024 பகல் 12.44 மணி வரை.
விருச்சிகம் -Viruchigam
உங்கள் ராசிக்கு 5ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். செவ்வாய், சனி 4ல் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். தொழில் வியாபாரம் லாபம் தரும்.
பரிகாரம் : முருகரையும் பெருமாளையும் வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் : 13.4.2024 பகல் 12.44 மணி முதல் 15.4.2024 இரவு 8.38 மணி வரை.
தனுசு – Dhanusu
உங்கள் ராசிக்கு 3ல் செவ்வாய், சனி 5ல் குரு ,புதன் சஞ்சரிப்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தாராத தன வரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெண்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.
பரிகாரம் : சிவனையும், அம்மனையும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் : 15.4.2024 இரவு 8.38 மணி முதல் 18.4.2024 காலை 7.56 மணி வரை.
மகரம் -Magaram
உங்கள் ராசிக்கு 3ல் ராகு, மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 2ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, எதிலும் நிதானமாக செயல்படுவது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு நீங்கள் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள்.
பரிகாரம் : அஷ்டலட்சுமி, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் : 18.4.2024 காலை 7.56 மணி முதல் 20.4.2024 இரவு 8.50 மணி வரை.
கும்பம் -Kumbam
ஜென்ம ராசியில் செவ்வாய், சனி சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்றாலும், மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து பிரச்சினைகள் குறையும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை.
பரிகாரம் : அஷ்டலட்சுமி வழிபாடு ,சனி ப்ரீதி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் : 20.4.2024 இரவு 8.50 மணி முதல் 23.4.2024 காலை 9.18 மணி வரை.
மீனம் -Meenam
ஜென்ம ராசியில் ராகு, 1,2ல் சூரியன் 12ல் செவ்வாய் சஞ்சரிப்பது தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 2ல் குரு புதன் இருப்பதால் உங்களுக்கு சகல விதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். முன் கோபத்தை குறைப்பது எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடுபவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பரிகாரம் : விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் : 23.4.2024 காலை 9.18 மணி முதல் 25.4.2024 இரவு 8.00 மணி வரை.