அஸ்வினி
இது இரண்டு குதிரை தலையை போல் காண்பதை படத்தில் பாருங்கள். இதில் பெரிய நட்சத்திரங்கள் பிரகாசமாயும், சிறிய நட்சத்திரங்களால் குதிரை தலைகளும் நமக்கு தெரிகிறது. ஒன்றின் தலை வடக்கு பார்த்தும் மற்றது கிழக்கு நோக்கியும் நம் தலைக்கு வடக்கே இவைகள் தோன்றும். ஜனவரி 20ஆம் தேதி வரை இரவில் நம் தலைக்கு வடக்கே தெரிவதை பார்க்கலாம்.
சந்திரன் அசுவதியில் ஊர்ந்து வரும்போது தெற்கே தெரியும்
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை பூர்த்தி செய்பவர்
- இந்த நட்சத்திரம் பூரண உடல் பெற்றது
- இந்த நட்சத்திரம் சமநோக்கு நாளாகும்
- இந்த நட்சத்திரத்தில் யாரும் சுபகாரியம் செய்யலாம்
- இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள்- சு, சோ, சே, ல
- இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள்- செ ,சை
- இந்த நட்சத்திர கணம்- தேவ கணம்
- இந்த நட்சத்திரம் மிருகம்- ஆண் குதிரை
- இந்த நட்சத்திர தாவரம்- எட்டி
- இந்த நட்சத்திர பட்சி – ராஜாளி
யந்திரம்
இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்
எப்படி பூஜை செய்ய வேண்டும் ?
- தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
- கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
- முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
- பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
- பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.
வசிய மந்திரம்