ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்

ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழிமுறைகள் பல உள்ளன.

அத்தகைய வழி முறைகளில் பிருகு முனிவரால் இயற்றப்பட்ட பிருகு நாடியும், நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட நந்திநாடியும் ஜோதிட பலன்களை துல்லியமாக உரைக்கின்றன.

இந்த நாடி முறைகள் பலன் கூறும் வழியை தெளிவாக எடுத்தியம்புகின்றன.

ஜோதிட பலன்கள் கேட்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், உடல்நலம், சொத்து, சுகம் இவைகளை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

திருமண விஷயம் பற்றி பிருகு-நந்தி நாடி கூறும் சில விதிகளை பார்ப்போம்.

பிருகு-நந்தி நாடி முறை படி ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் 12 ராசிகளில் எந்த ராசியில் இருக்கிறாரோ அதை கொண்டு அந்த ஜாதகருக்கு வரும் மனைவியை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேஷத்தில் சுக்கிரன் நின்றால்:

  • ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றம் உடையவள்.
  • சுறுசுறுப்பானவர்
  • ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள்
  • ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தமுள்ள மனைவியாக இருப்பாள்.
  • உஷ்ண தேகம் உடையவளாகவும் இருப்பாள்
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும்.
  • திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவர். தன் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டார்.
  • மனைவி ஒருபோதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டாள்.
  • மனைவிக்கு இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.

ரிஷபத்தில் சுக்கிரன் நின்றால்:

  • ஜாதகனுக்கு வரும் மனைவி அழகானவளாகவும்,ஆடை அலங்கார பிரியையாகவும் , சொகுசு விரும்பியகவும் செல்வச்செழிப்பு உடையவளாகவும் இருப்பாள்.
  • மனைவி பக்கத்து ஊர்க்காரியாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பார்த்த வாசல் உடையதாக இருக்கும்.
  • திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள் அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள்.
  • அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடிபெயர்ந்து செல்ல முயற்சிப்பாள்.
  • மனைவி உறவினர்கள் நண்பர்கள் என யார் வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டாள்.
  • யாரையும் உபசரிக்க மாட்டாள்
  • வீட்டை அழகாக வைத்திருப்பாள்.
  • அதிகம் வெளியே செல்ல மாட்டாள்
  • தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தரமாக தங்கி விடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள்.
மனைவி

மிதுனத்தில் சுக்கிரன் நின்றால்:

  • ஜாதகருக்கு வரும் மனைவி நட்பு விரும்பியாகவும், புத்திசாலியாகவும், இளமையான தோற்றம் உடையவளாகவும், சுறுசுறுப்பானவளாகவும், இரட்டை பெயர் அல்லது இரண்டு பெயர்கள் உடையவளாகவும் இருப்பாள்.
  • தோற்றத்தில் ஜாதகரை விட மிகவும் இளையவள் போன்றோ அல்லது வயதில் மிகவும் இளையவளகா இருப்பாள்.
  • ஜாதகனுக்கு அவன் மனைவிக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும்.
  • ஜாதகனுக்கு இரண்டு மனைவிகள் அமைய வாய்ப்பு உண்டு.
  • ஜாதகரின் மனைவி பெண் தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாள்.
  • மனைவி பிறந்த ஊர் ஒரு ஜாதகன் பிறந்த ஊருக்கு தென்கிழக்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்கும்.

கடகத்தில் சுக்கிரன் நின்றால்:

  • ஜாதகருக்கு வரும் மனைவி தாய்மை உணர்வு அதிகம் உடையவளாக இருப்பாள்.
  • மனைவி அழகானவளாகவும்,மன சஞ்சலம் உடையவளாகவும்,பாசத்திற்கு அடிமையாகவும் இருப்பாள்.
  • மனைவிக்கு அவள் பிறந்த வீட்டில் மரியாதை இருக்காது.அவளை அன்னியப் பெண் போல் நடத்துவார்கள் இதனால் காலப்போக்கில் தன் தாய் வீட்டிற்கு செல்வதை விரும்பாமல் நிரந்தரமாக நிறுத்தி விடுவாள்.
  • மாமியார் வசிக்கும் வீட்டிலும் இவள் இருக்கமாட்டாள்.
  • தனிக்குடித்தனம் செல்வதயே பெரிதும் விரும்புவாள்.
  • மாமியார், தாய், அக்கா, அண்ணி இவர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாள்.
  • அடுத்தவர் வீடுகளில் தங்குவதை அவமானமாக நினைப்பாள்.
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
  • மனைவி சொந்தமில்லாமல் அந்நிய பெண்ணாக இருப்பாள்.
  • மனைவி இருக்கும் வீட்டின் தளம் தெருவை விட சற்று பள்ளமாக இருக்கும்..

தொடர்ச்சி அடுத்த பதிவில்

Leave a Comment

error: Content is protected !!