Homeஜோதிட தொடர்ஜோதிட ரீதியில் இல்லற இன்பம் குறையும் கணவன் மனைவி யார்?

ஜோதிட ரீதியில் இல்லற இன்பம் குறையும் கணவன் மனைவி யார்?

ஜோதிட ரீதியில் இல்லற இன்பம் குறையும் கணவன் மனைவி யார்?

ஜோதிட முறையில் ஆண் பெண் ஜாதகத்திற்கான தனித்தனியே பலன்கள் கூறுவது கிடையாது. இருவர் ஜாதகத்திலும் இதில் கூறப்பட்டுள்ளது போல் கிரகங்கள் இருந்தால் இங்கு கூறப்படும் பலன்கள் இருக்கும் சரியாக பொருந்தும்.

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழாவது ராசியில் செவ்வாய் இருந்தால் முன்கோபம், கலக குணம் ,பிறரைத் துன்புறுத்தி மகிழும் சுபாவும் ,அகங்காரம் ,ஆணவம் கொண்டவள் மனைவியாக அமைவாள்.

ஏழாவது ராசியில் சனி இருந்தால் சோம்பல் தனம், மந்தமான புத்தி, செயல், வயது முதிர்ந்த தோற்றம் கொண்ட பெண் மனைவியாக அமைவாள் .பெண் ஜாதகத்தில் இருந்தால் இதே போன்று கணவன் அமைவான்.

ஏழாவது ராசியில் ராகு இருந்தால் பொய் ,திருட்டுபுத்தி, வஞ்சக குணம், எதையும் ரகசியமாக செய்தல், வேடதாரி,ஏமாற்றும் குணம், மாயமந்திர செயல்களில் நம்பிக்கை ,சுயநலம் கொண்ட வயது முதிர்ந்த தோற்றம் உடைய பெண் மனைவியாக அமைவாள்.

ஏழாவது ராசியில் கேது இருந்தால் எந்த செயலிலும் ஈடுபாடு ஆர்வமின்மை, எப்போதும் எதையோ இழந்தது போல் விரக்தி, பணம், பொருள் சம்பந்தமான தகராறு,கருத்து வேறுபாடு கொண்ட பெண் மனைவியாக அமைவாள். வழிபாடு, பூஜை, விரதம் கடைப்பிடித்து வாழ்வாள், தாம்பத்திய சுகம் குறையும், வயது முதிர்ந்த தோற்றம், நேர்மாறான குணம் கொண்டவள்.

ஜோதிட ரீதியில் இல்லற இன்பம்

ஆணின் ஜென்ம லக்னத்திற்கு 7 ஆவது ராசியில் லக்னத்திற்கு ஆறாவது ராசிக்குரிய கிரகம் இருந்தால்  கணவனுடன் கருத்து வேறுபாடு கொள்பவள், பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாத நிலையை உருவாக்கும் பெண் மனைவியாக அமைவாள், திருமண வாழ்க்கை சிறப்பாக இராது.

ஏழாவது ராசியில் லக்னத்திற்கு 12வது ராசிக்குரிய கிரகம் இருந்தால் குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவு, குழப்பம் செய்பவள்,நோயாளியாக இருக்கும் பெண் மனைவியாக அமைவாள்.

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 2வது ராசியில் இருந்தால் மனைவி குடும்ப விஷயங்களில் அனாவசியமாக தலையிட்டு தனக்குத் தானே அவமானங்களை தேடிக் கொள்வார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உள்ளவர். மன நோய் ,உடல் நோய் உடைய பெண்ணை மணம் புரிவான்.

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 3-வது ராசியில் இருந்தால் திருமணத்திற்கு பின்பு ஜாதகருக்கு கண்டங்கள் ,கஷ்டங்கள், நோய் பாதிப்பு உண்டாகும்.

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு நான்காவது ராசியில் இருந்தால் மனைவி ஜாதகனின் தகப்பனாரை (அதாவது மாமனாரை) அவமானப்படுத்தி துன்புறுத்துவாள் , தகப்பனையும் மகனையும்  பிரித்து விடுவாள்.

7-வது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 6வது ராசியில் இருந்தால் இவன் ஆசைகள் நிறைவேறாத படி, ஆசைப்பட்டதை அனுபவிக்க விடாமல் இவன் மனைவியே தடைசெய்து எதிராக செயல்படுவார். மனைவியால் வம்பு வழக்குகள் உண்டாகும். ஜாதகனின் மூத்த சகோதர, சகோதரிகள், நண்பர்களை அவமானப்படுத்தி உறவை பிரித்து விடுவாள்.

ஜோதிட ரீதியில் இல்லற இன்பம்

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு ஏழாவது ராசியில் ஆட்சி பெற்றிருந்தால் மனைவி படுக்கை அறையில் ஒத்துழைக்க மறுப்பாள், ஜாதகனின் தூக்கத்தைக் கெடுப்பால் , இதனால் கணவன் வேறு உறவை தேடுவான். பெண் ஜாதகத்தில் இதுபோல் இருந்தால் கணவனுக்கு இந்த குணம் இருக்கும்.

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு எட்டாவது ராசியில் இருந்தால் மனைவியால் இவனுக்கு பலவித அவமானங்கள் உண்டாகும். மனைவி மிரட்டுவாள், பல தொல்லைகளை தந்து துன்புறுத்துவாள்,

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 9-வது ராசியில் இருந்தால் மனைவியின் தலையிட்டால் செய்யும் தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் தடை ஏற்படும். தொழில் மூலம் மனைவியும், மனைவி வீட்டாரும் ஜாதகனின் குடும்பத்தாரை மிரட்டுவார்கள். கேவலமாய் பேசி அவமானப்படுத்துவார்கள்.

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 10-வது ராசியில் இருந்தால் மனைவி ஜாதகனின் இளைய சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்தி கேவலமாக பேசி துன்புறுத்துவாள். சகோதர உறவை துண்டித்து விடுவாள்.

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு பதினோராவது ராசியில் இருந்தால் மனைவி ஜாதகனின் தாயாரை அதாவது மாமியாரை கேவலமாக பேசி துன்புறுத்துவாள். தாய் மகன் உறவை பிரித்து விடுவாள்.

ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 12-வது ராசியில் இருந்தால் மனைவி அடிக்கடி நோய்வாய்ப்படுதல், மருத்துவ செலவு,  தண்டச் செலவு அதிகமாக இருக்கும். பெற்ற பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்துவாள்.

ஆண் பெண் திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும்போது சுத்த ஜாதகம், பாவ ஜாதகம், தோஷ ஜாதகம் என்று எதுவும் கிடையாது இந்த பூமியில் பிறக்கும் எல்லோருக்கும் பாவமும் உண்டு புண்ணியமும் உண்டு மேலும் ராகு சனி ,செவ்வாய், கேது தோஷம் உள்ளது இதே போன்ற கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் இருவரின் பாவக் கணக்கும் ஒன்று சேர்ந்து இரு மடங்காகி இல்லற வாழ்வில் சிரமம் அடைகிறார்கள்.

பொருத்தம் பார்க்கும்போது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சிரமம் தரும் கிரக அமைப்பு இருந்தால் அவள் மணம் புரியும் ஆணின் ஜாதகம் யோக அமைப்பு உள்ளதாகவும் ஆண் ஜாதகத்தில் சிரமம் தரும் அமைப்பு இருந்தால் பெண் ஜாதகம் யோக அமைப்பு உடைய ஜாதகம் ஆகவும் இருக்க வேண்டும். இதேபோன்று திருமணம் செய்தால் இருவர் வாழ்க்கையும் சந்தோஷமாக அமைந்து விடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!