கண்டம் ஏற்படும் காலகட்டம்
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவ கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் 8ம் பாவமும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே 8ம் பாவம் பலமிழந்து சனி பகவானும் 8ம் அதிபதியும் பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது-. அது போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது.
ஒரு சில தசாக்கள் சிலருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக வரும் சனி திசையும், அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5வது திசையாக வரும் செவ்வாய் திசையும், பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 6வது திசையாக வரும் குரு திசையும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7வது திசையாக வரும் ராகு திசையும் கண்டத்தை உண்டாக்கும் என்பது பொது விதி.
ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகஸ்தானம் உண்டு. அந்த ஸ்தானதிபதியின் தசா புக்தியும், ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் தசா புக்தியும் நடைபெறும் சமயங்களில் கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 12 லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
சர லக்னம் என வர்ணிக்கபட கூடிய மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்திற்கு 2,7ம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்ப லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும். உபய லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும்.
ஜென்ம லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் மாரக ஸ்தானாதிபதியின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாக கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.
அக்கிரகங்களை சுப கிரகங்கள் பார்வை செய்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கடக்க முடியும். அதுவே பாவ கிரக பார்வை, பாவ கிரக சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்து அந்த நேரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி போன்றவை நடைபெற்றால் மாரகத்தை எதிர் கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான சுக்கிரன் மாரகாதிபதியாவார். 2,7க்குரிய கிரகமான சுக்கிரனின் தசா புக்தி காலங்கிளலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8 க்கு அதிபதிகள் மாரகாதிபதிகளாவார்கள். அதனால் 3ம் அதிபதி சந்திரனின் தசா புக்தி காலங்களிலும் 8ம் அதிபதி குருவின் தசா புக்தி காலங்களிலும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது-. 3,8ல் அமையும் கிரகங்களின் தசா புக்தி காலத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குரு, செவ்வாய் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலத்திலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தல் கவனம் செலுத்துவது நல்லது.
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சூரியனும். சனியும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7 அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்ம லக்னத்தில் பிறந்வர்களுக்கு 3, 8க்கு அதிபதிகளான சுக்கிரனும் குருவும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும் 3,8ல் அமையும் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கித்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குருவும். சந்திரனும் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்றுள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான செவ்வாய் மாரகாதிபதியாவார். செவ்வாயின் திசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான சனி, புதன் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சுக்கிரன் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சனி, சந்திரன் மாரகாதிபதிகள் ஆவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும்.
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான செவ்வாய், புதன் மாராகதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சனி ஆகியோர் மாரகாதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய பாதிப்புகள் எதிர் கொள்ள வேண்டும்.
ஜென்ம லக்னத்திற்கு 8ம் வீட்டில் பாவிகள் இருந்தால் கெடுதிகள் ஏற்படும் என்றாலும், குருபகவானின் பார்வை 8ம் வீட்டிற்கோ அல்லது சர்ச்சைக்குரிய பாவ கிரக சேர்க்கைக்கோ ஏற்பட்டால் விபத்துக்கள் ஏற்பட்டால் கூட அதிலிருந்து தப்பித்து உயிர் வாழக்கூடிய யோகம் உண்டாகும். ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்புகள் கூட குறைந்து சிறு பாதிப்புகளுடன் முடிவடையும்.
மாரக ஸ்தான அதிபதி மற்றும் பாதகதிபதி குருவாக இருந்து கன்னி லக்கினத்தில் சனியோடு இணைந்துள்ளார். இப்போது குருவின் பலன் எப்படி இருக்கும். குரு தசா எப்படி இருக்கும் ஐயா?
விளக்கம் தாருங்கள் குருவே. நன்றி 🙏
தங்களது பிறந்த விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்