அஸ்வினி 3-ம் பாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள்
அஸ்வினி 3-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன்
இதன் அம்சம் மிதுனம்-அதிபதி புதன்
- மிதுன அங்கிசத்தை சேர்ந்த அஸ்வினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவன் அறிவாளி,
- அழகன், அரசசு உயர் அதிகாரிகளால் போற்றப்படுபவன் ,
- லக்ஷ்மியை உடைய திருமால் போல் ஆஜானுபானனான உருவம் உடையவன்,
- இவர்களின் மன ஆழத்தை, கருத்தைப் பிறர்களால் அறிய முடியாது
- பெண்கள் மேல் தன் பொருளை வீணாக செலவழிக்க மாட்டான்(சிக்கனமானவன் )
- பெண்கள் மேல் அதிகை இச்சை இல்லாதவன் ,
- பெண்களின் கருத்துகளை சார்ந்த நடக்காதவன்
- உயர்ந்த வலது தோளை உடையவன்
- பிறரை இகழமாட்டான்
அஸ்வினி 3-ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
அஸ்வினி 3-ம் பாதத்தில் சூரியன் நின்றால்:
- பணக்காரன் ஆக இருப்பான் ,ஆனால் கீழ்மட்ட சமூகத்திலேயே இருப்பான் ,
- ஆரோக்கிய குறை உண்டு
- முரடனாகவும், கெட்ட எண்ணம் உள்ளவனாகவும் இருப்பதுண்டு .
அஸ்வினி 3-ம் பாதத்தில் சந்திரன் நின்றால்:
- அதிகம் படித்தவர் ,அறிவாளி,
- பல கலைகளில் விஞ்ஞான துறைகளில் தேர்ந்தவர்,
- மத சார்பானவற்றில் ஈடுபாடு உடையவன்,
- சமயப் பற்றுள்ளவன், சுறுசுறுப்பானவன்
- இவனுக்கு பிடிப்பு ஏற்பட்டால் நண்பர்களுக்கு மிக நல்லவன்,
- இந்த சந்திரனை செவ்வாய் பார்த்தால் கண் கெடும் அல்லது பல் பாதிக்கப்படும்
அஸ்வினி 3-ம் பாதத்தில் செவ்வாய் நின்றால்:
- வெளியில் அலைந்து திரியும் வியாபாரம் செய்பவன்,
- செவ்வாயை சூரியன் பார்த்தால்தான் தனம் ,உடல்நலம், மகிழ்ச்சியான மணவாழ்க்கை, எல்லாம் அமையும்.
- சிறுவயதில் அன்னையை இழக்க நேரலாம்.
- குரு பார்த்தால் ஜாதகனுக்கு தீர்க்க ஆயுள் ,சிற்றின்ப சுகமனுபவிப்பான்
அஸ்வினி 3-ம் பாதத்தில் புதன் நின்றால்:
- இவனுக்கு கடவுள் அனுக்கிரகம் நிறைய உண்டு.
- தன் கடமைகள் பொறுப்புகள் எல்லாவற்றையும் முழுவதும் நிறைவேற்றுவான்.
- அதிக ஆண் குழந்தைகள் உண்டு.
- ஆரோக்கிய குறை இருக்கலாம்,
- வயதும் 60க்கு கிட்டத்தட்டதான் உண்டு
அஸ்வினி 3-ம் பாதத்தில் குரு நின்றால்:
- புத்திசாலி, கல்வி, செல்வம் இரண்டும் நிறைய பெற்றவன்
- அதிக புகழ் உண்டு
- அரச போகம் அதாவது ராஜயோகம் உண்டு
- சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கலாம் (ஆயுள் ஸ்தானம் ,ஆயுள் காரகன் இவர்கல் வலுத்தால் இது இராது)
- உயர்ந்த அந்தஸ்தான வாழ்க்கை உண்டு.
அஸ்வினி 3-ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:
- மிகவும் கெட்டிக்காரன்,
- இரக்க குணம் உள்ளவன்
- சிறந்த மருத்துவராகவும் அரசியல் தலைவனாகவும் பெயர் எடுப்பான்
- சில சமயம் காலையோ கையையோ இழக்கும் அங்கஹீனம் ஏற்படலாம் சுக்கிரன் சுபத்துவம் பெற்றால் இக்குறை இருக்காது.
- இவனைப்பற்றி தொடர்பவர்கள் யாவருமே இவனை விரும்புவர்.
அஸ்வினி 3-ம் பாதத்தில் சனி நின்றால்:
- வியாபாரத்தில் நல்ல திறமை, சாமர்த்தியம் உண்டு
- நிறைய பணம் சம்பாதிப்பான்
- தன்கீழ் பணியாளர்களிடம் இரக்கத்துடன் நடப்பவன் அவர்கள் நலத்தில் அக்கறை உள்ளவனாக இருப்பான்
- பேராசையும் பொறுமையற்றவனாகவும் இருக்க கூடும் .
அஸ்வினி 3-ம் பாதத்தில் ராகு நின்றால்:
- இவன் மிகவும் வறுமை உடையவன்
- நல்லது கெட்டது எந்த காரியத்திலும் அக்கறை இருக்காது
- சித்தம் போக்கு சிவன் போக்கு என்று பிடிப்பின்றி வேடிக்கையான நடத்தையுள்ளவன்
- தன் மனைவி அல்லது கணவனால் மணவாழ்க்கையில் தொல்லை இருக்கும்
அஸ்வினி 3-ம் பாதத்தில் கேது நின்றால்:
- கீழ்நிலையில் உள்ளவர்களுடையே காலம் கழிப்பார்
- இவனுக்கு ஒரு பெண் குழந்தை மாற்றானுக்கு பிறக்கலாம்
- எவ்வளவு கஷ்டமான நிலையில் இருந்தாலும் பிறர் செய்த உதவியை நினைவில் கொண்டு நன்மையே பதிலுதவி செய்வதிலும் கருத்தாய் இருப்பான்
கால சக்கர தசை | வருடம் |
ரிஷப சுக்கிர தசை | 16 வருடம் |
மேஷ செவ்வாய் தசை | 7 வருடம் |
மீன குரு தசை | 10 வருடம் |
கும்ப சனி தசை | 4வருடம் |
மகர சனி தசை | 4 வருடம் |
தனுசு குரு தசை | 10 வருடம் |
மேஷ செவ்வாய் தசை | 7 வருடம் |
ரிஷப சுக்கிர தசை | 16 வருடம் |
மிதுன புதன் தசை | 9 வருடம் |
பரம ஆயுள் | 83 வயதாகும் |