சந்திரன்
பொதுவாக 12 வீடுகளில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசியில் தான் ஒருவர் பிறந்த நட்சத்திரம் அமைகிறது. சந்திரன் ஒரு ராசியைக் கடந்து வர 27 நாட்கள் ஆகின்றன ஆக பன்னிரு ராசிகளை கடந்து வர 27 நாட்கள் ஆகின்றன.
இவ்வாறு சந்திரன் கடக்கும் இருபத்தி ஏழு நாட்களுக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாட்களுக்கும் தொடர்பு உண்டு.
சந்திரன் மேஷத்தில் இருந்தால்
அஸ்வினி 1,2,3,4 பாதம், பரணி1,2,3, 4 பாதம், கிருத்திகை 1ம் பாதம் ஆகியவற்றில் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்தவர்களை இருந்தாலும் இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் பொருந்தும்.
இவர் தன்மான உணர்வு மிகுந்தவர்,துணிவை துணையாகக் கொண்டவர்,கபடமான மனமும் செயலும் உள்ளவர்,நீரில் செல்ல பயப்படுவார்,அடிக்கடி முன் கோபம் கொண்டால் இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு,நல்ல செயல்களுக்கு தாராளமாக செலவு செய்வார்,இவருக்கு வயிற்றில் ஏதாவது ஒரு நோய் ஏற்படலாம்,அபத்தங்கள் அவமானங்கள் ஆகியன ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ரிஷபத்தில் சந்திரன் இருந்தால்
ரிஷபத்தில் சந்திரன் அமைந்தவர்களுக்கும் கிருத்திகை 2,3,4 பாதம் ரோகிணி 1,2,3, 4 பாதம் மிருகசிரிஷம் 1, 2 பாதம் ஆகியவற்றில் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்து இருந்தாலும் இங்கு குறிப்பிடும் பலன்கள் பொருந்தும்.
இவர் கவர்ச்சி மிகுந்த வாளிப்பான உடலமைப்பு கொண்டவராக இருப்பார்,உறவினரோடு சேர்ந்து இருக்கமாட்டார்,செல்வாக்கு புகழ் ஆகியவற்றை பெறுவார்,அமைதியாய் இருக்கும் இவருக்கு பலர் நண்பரவர்,இவருக்கு நடு வயதிற்கு பிறகு வாழ்க்கை மிக சுவாரசியமாக இருக்கும்,இவருக்கு சளித் தொந்தரவு இருக்கும்,இவர் சொற்பொழிவாற்றும் இசை ஓவியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்,அவமானமும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிதுனத்தில் சந்திரன் இருந்தால்
மிதுனத்தில் சந்திரன் அமைந்தவர் மிருகசிரிஷம் ,3,4 பாதம் திருவாதிரை 1,2,3,4 பாதம் புனர்பூசம் 1,2,3 ம் பாதம் ஆகியவற்றில் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்து இருந்தாலும் அதற்கும் இங்கு குறிப்பிடுதல் பொருந்தும்
இவர் கலைத் திறன் உள்ளவர்,நகைச்சுவை உணர்ச்சி மிகுந்த உணவில் மிகுந்த விருப்பம் உள்ளவர்,கூர்மையான அறிவும் துணிவும் வாய்ந்தவர்,இசை நடனம் நாடகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர் ,இவர் எதையும் எளிதாக புரிந்து கொள்ளவார். இழிகுல பெண்களால் அவமானம் நேராமல் விழிப்பாய் இருக்க வேண்டும்,இவர் நண்பர்களே முடிவில் பகைவராவார். எதிர்பாராமல் செல்வவசதி ஏற்படலாம்,பல தொழில்களில் ஈடுபாடு ஏற்படும் இதனால் எந்த தொழிலையும் முழுமையாக செய்யாமல் அவதிப்படுவார்.
கடகத்தில் சந்திரன் இருந்தால்
கடகத்தில் சந்திரன் அமைந்திருக்கும் புனர்பூசம் 4 பாதம், பூசம் 1,2,3,4 பாதம் , ஆயில்யம் 1,2,3,4 பாதம் ஆகியவற்றில் எந்த ஒரு பாதத்தில் பிறந்தவர்கள் இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் பொருந்தும்.
இவர் பிறர் பாராட்ட மயங்குபவர்,பல வீடுகளுக்கு உடைமையாளர் ஆகும் யோகம் உள்ளவர்,தோட்டங்கள் அமைப்பார்,இருமல் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு,பெண்களுக்கு அடங்கி நடப்பார்,இவர் உயரமான பகுதிகளில் செல்லும்போதும் நெருப்பு அருகே செல்லும் போதும் நீர் மீது செல்லும் போதும் மிக விழிப்பாக இருத்தல் வேண்டும்,தம் முயற்சியால் முன்னேறும் இவர் ஆறு கடல் குளம் ஆகிய நீர்நிலைகளின் அருகே குடியிருப்பார்,இசை கவிதை இலக்கியம் ஆகியவற்றில் இவருக்கு ஈடுபாடு ஏற்படும்,குனிந்தபடி விரைவாக நடக்கும் இயல்பானவர்,மணவாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவது அரிது.
சிம்மத்தில் சந்திரன் இருந்தால்
சிம்மத்தில் சந்திரன் அமைந்தவருக்கும் மகம் 1,2,3,4-ம் பாதம், பூரம் 1,2,3,4-ம் பாதம், உத்திரம் 1ஆம் பாதம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பாதத்தில் பிறந்தவர் இருக்கும் இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் பொருந்தும்.
இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்,லட்சியம் உள்ளவர்,பெண்களை வெறுப்பவன்,பல்வலி, வயிற்று வலி, கை, கால் வலு இழத்தல்ஆகிய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சுகபோக இச்சை மிகுந்தவர்,மது மாமிசம் ஆகியவற்றில் விருப்பம் ஏற்படும்,இசை, கவிதை ,நாட்டியம், நாடகம், சினிமா ஆகியவற்றுள் ஈடுபாடு உள்ளவர்,வாசனைப் பொருள்களிலும் சுவையான உணவுகளிலும் விருப்பம் உள்ளவர்.
கன்னியில் சந்திரன் இருந்தால்
கன்னியா ராசியில் சந்திரன் இருந்தால் அதாவது கன்னியா ராசியில் உள்ள உத்திரம் 2,3,4 பாதம் அஸ்தம்1,2,3,4 பாதம் சித்திரை 1,2,3ம் பாதம் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் பொதுவான பலன்கள் அமையும்
இவர் அழகானவர்,அடிக்கடி சளிபிடிக்கும் உடல்வாகு கொண்டவர்,குறுகிய மனோபாவம், காமசுகத்தில் விருப்பம், தெய்வபக்தி, அறிவாற்றல், தியாக உணர்வுகள் ஆகியவற்றைக் கொண்டவர்.மற்றவர் சொத்துக்களை அனுபவிக்கும் யோகமும் உண்டு,தொலைவிலுள்ள நாட்டில் வாழும் வாழ்க்கையும், இரு மனைவிகள் அமைய வாய்ப்பு ஏற்படலாம்,இவருக்கு கழுத்து ,கை, பின் பக்கங்களில் மச்சம், மரு இருக்கும்.மருத்துவத் தொழில், உணவுக்கடை, கல்வித் துறை ஆகியவை இவருக்கு ஏற்றவை.
துலாம் சந்திரன் இருந்தால்
துலாத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் க்கும் சித்திரை 3,4ம் பாதம் சுவாதி1,2,3,4 பாதம் விசாகம் 1,2,3 பாதம் ஆகிய ஏதாவது ஒரு நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் இந்த பலன்கள் பொருந்தும்.
இவருக்கு வலுவான உடலும் மங்கலான நிறமும் இருக்கும்,இவர் உயரமானவர், இவருக்கு எடுப்பான மூக்கும் கால்களில் ஏதாவது ஒன்றில் குறையும் இருக்கும்,மதப்பற்று மிகுந்தவர் மத தலைவர்களை தெய்வமாக வழிபடுபவன்,இவர் அறிவாற்றலும் தூய்மையான மனமும் வாய்ந்தவர்,பெண்களிடம் செல்வாக்குப் பெறும் பயணங்களில் விருப்பமுள்ளவர்,எல்லாவற்றிலும் சாமர்த்தியமும் கண்டிப்பும் உள்ளவர்,அவர்களிடம் நெருக்கம் இராது இவர் எளிதாக பிறரிடம் நட்புக்கொள்பவர்,இவருக்கு தோல் நோய்கள் வயிற்று வலி ஆகிய ஏற்பட்டாலும் பல குழந்தைகள் பிறக்கும்,இவர் இசை ஞானமும் கல்வியும் ஞானமும் மிகுந்தவர்,செல்வாக்கு புகழ் ஆகியவற்றை பெறுவார்,வைர மோதிரம் அணிய விருப்பம் உள்ளவராக இருப்பார்.
விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால்
விருச்சிகத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்க்கும் விசாகம் 1ஆம் பாதம், அனுஷம் 4ம் பாதம், கேட்டை 4-ம் பாதம் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு நட்சத்திர பாதத்தில் பிறந்தவர் இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் பொருந்தும்.
இவர் குள்ளமான குண்டான உடலும்,இருண்ட நிறமும் ,அகன்ற கண்களும் ,பரந்த மார்பும், கருமையான முடியும், முகத்தில் மச்சம், குறையுள்ள பாதமும் கொண்டவராக இருப்பார்.
இவர் குருரகுணம், பெண்கள் மீது மோகம் கொண்டவர்.இளமையில் கட்டுப்பாடு இன்றி சுற்றி அலைபவராய் இருப்பர்.இவர் வியாபாரத்தில் வல்லவர்.நல்ல மனைவி வாய்க்கப் பெறுவார்கள்.நம்பிக்கை மிகுந்த இவர் தம் நண்பர்களிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்.கடுமையான தோல் நோய் ஏற்பட்டு தம் உடலுக்கு ஊறு நேராவண்ணம் கவனித்துக்கொள்ள வேண்டும்.
விருச்சிக ராசி சந்திரனுக்கு நீச ராசி.
தனுசில் சந்திரன் இருந்தால்
தனுசு ராசியில் சந்திரன் அமையப் பெற்றவர்க்கும் மூலம் 4ம் பாதம், பூராடம் 4ம் பாதம், உத்திராடம் 1ம் பாதம்
இவர் நாணயத்தை பெரிதாக மதிப்பவர்.நல்ல மனத்தினராயும் இருப்பார்.இவர் புத்திசாலித்தனமும் ,தரும சிந்தனையும் ,உறவினர் மீது பாசம் உள்ளவர்.இவர் அழகான உடலமைப்பும் ,நடுத்தர உயரமும், வளைந்த பற்களையும், ஒழுங்கற்ற நகங்களையும், உள்ளடங்கிய வயிற்றையும் கொண்டவர்.இவர் நல்ல பேச்சாளர் ஆகவும் பல தொழிலில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்.
மகரத்தில் சந்திரன் இருந்தால்
மகரத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் உத்திராடம் 3ம் பாதம், திருவோணம் 4ம் பாதம், அவிட்டம் 2ம் பாதம் ஆகியவற்றில் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்தவராக இருந்தாலும் இந்த பலன்கள் பொருந்தும்.
சுயநலம் மிகுந்தவராயும் , எவருடனாவது சண்டையிட்டுக் கொண்டே இருப்பவராயும் ,எதிலும் தாமதம் செய்யும் இயல்புடையவராகவும் இருப்பார்.ஒல்லியான உடலும், அழகான விழிகளும் கொண்டவர், இவருக்கு கழுத்தில் மச்சம் இருக்கும்,இவர் தம் மனைவி மக்களிடம் அன்பு கொண்டவர்.சிக்கனமாய் இருப்பதாகக் கூறிக்கொண்டு செலவு செய்பவர்.
கும்பத்தில் சந்திரன் இருந்தால்
கும்பத்தில் சந்திரன் அமையப் பெற்றவருக்கும் அவிட்டம் 2ம் பாதம், சதயம் 4ம் பாதம், பூரட்டாதி 3ம் பாதம் ஆகியவற்றில் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்தவராக இருந்தாலும் இந்த பலன்கள் பொருந்தும்.
எவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட இவர்கள் சிலர் தகாத தொடர்பு கொண்டவராக இருப்பார்.இவர் நடுத்தர உயரம் உள்ளவராகவும் கை மார்பு தலை ஆகியவற்றில் மிகுந்த முடிகள் கொண்டவராகவும் இருப்பார்.இவர் காம இச்சையை உள்ளவராகவும் இருப்பார்.இவரிடம் சுறுசுறுப்பு கெட்டிக்காரத்தனம், தீய போக்கு பிறரை ஏமாற்றும் குணம் ஆகியன அமைந்திருக்கும்,
மலர்கள் வாசனை திரவியங்கள் நண்பர்கள் பயணங்கள் ஆகியவற்றை மிகுதியாக விரும்புவார்.ஜோதிடம், மாந்திரீகம் ,அரசியல் ,சமுதாய சங்கம் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்.நீரில் செல்லும் போது இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனத்தில் சந்திரன் இருந்தால்
மீனத்தில் சந்திரன் அமையப் பெற்றவருக்கும் பூரட்டாதி 1ம் பாதம், உத்திரட்டாதி 4ம் பாதம் ஆகியவற்றில் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்தவராக இருந்தாலும் இந்த பலன்கள் பொருந்தும்.
புதையல் அல்லது லாட்டரி மூலம் பொருள் பெறும் யோகமுண்டு .இவர் வலிமையான உடலும், உருண்டை முகமும், எடுப்பான முகம், கொண்டவர்,இவர் சுயநலம் வாய்ந்தவர்,இவர் இருமல் நோயால் பாதிக்கப்படலாம்,கல்வியறிவு இனிமையான பேச்சு எளிமையான இயல்பு ஆகியன வாய்க்கப் பெற்றவர்,மனத்தை அலைபாய விடுதலும் ,அடிக்கடி தளர்ச்சி அடைதலும், இவரின் தனி குணங்கள்