அதிசய ஐயப்பன் கோவில்
கடவுள் சிலை இல்லாத கோவில்
ஐயப்பன்(IYYAPPAN) என்றாலே பத்மாசன நிலையில் அமர்ந்த சிலைதான் சிறப்பு. ஆனால் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகா என்ற திருக்கோவிலில் சிலையே இல்லாமல் இருக்கிறது. கேரள(Kerala) மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்ஜப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது.
இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும், தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபாட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர் .
ஆலய சிறப்பு:
இதில் ஐயப்பனுக்கு சிலை ஏதுமில்லை வெள்ளி முத்திரையுடனான தடி ,திருநீற்றுப் பை,ஒரு கல் ஆகியவற்றை ஐயப்பனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.இங்கே மாளிகைபுரத்து அம்மன் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டுக்காக தினமும் திறக்கப்படுவது இல்லை சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரல்களின் படியே ஆலயம் திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களிலும் கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும் ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாக கருதப்படும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் நாளிலும் ஆலயம் திறந்திருக்கும்.அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் ஒரு மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.
சபரிமலை வழிபாட்டுக் காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும் இங்கு பெண்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுகின்றனர்…
சங்கரநாராயணன் கோயில் பற்றி தங்களால் எழுத முடியுமா …
நிச்சயமாக மிக விரைவில்