Homeநட்சத்திர ரகசியங்கள்ஆயில்யம் நட்சத்திரம்: பலன்கள், சிறப்புகள் மற்றும் வாழ்க்கை வழிகாட்டி

ஆயில்யம் நட்சத்திரம்: பலன்கள், சிறப்புகள் மற்றும் வாழ்க்கை வழிகாட்டி

ஆயில்யம் நட்சத்திரம்

27 நட்சத்திர மண்டலத்தில் 9 ஆவது நட்சத்திரமாக வருவது ஆயில்யம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் அதிபதி புதன் பசுவான் இந்த ராசியின் அதிபதி சந்திர பசுவான். சந்திரனுக்கு புதன் நட்பு ஆனால் புதனுக்கு சந்திரன் பகை. இந்த நட்சத்திரம் உடலில் நுரையீரல், இருதயம், தொண்டை ஆகிய இடங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் டி, டு, டே, டோ மற்றும் மெ, மை.

ஆயில்யம் நட்சத்திரம் பொதுவாண குணங்கள்

இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால் நல்ல புத்திசாலித்தனம் இருக்கும். படிப்பில் நன்றாக இருப்பார்கள். எல்லோரிடமும் நன்றாகப் பழகுவார்கள். பொருளாதாரத்தில் ஆர்வம் இருக்கும். சிக்கனவாதியாக இருப்பார்கள். 2 ஆம் வீட்டு அதிபதி சூரியன் என்பதால் சற்று முன்கோபியாக இருக்க வாய்ப்பு உள்ளது. மனதில் பட்டதை வெளியில் தைரியமாகச் சொல்வார்கள். நல்ல நண்பர்கள் வட்டாரம் இருக்கும். அநேகமாக அமைதியாக இருப்பார்கள்.

பொருட்சேர்க்கையில் விருப்பம் கொண்டவர்கள்.எடுத்த செயலை சொன்ன முறையில் நிறைவாக முடிக்கும் திறன் கொண்டவர்கள்.பல திறமைகள் கொண்டவர்கள்.பிறரை கட்டுப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர்கள்.எண்ணிய வாழ்க்கை எண்ணிய விதம் வாழ்வார்கள்.விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.பெற்றோர் மீது விருப்பம் கொண்டவர்கள்.மனதில் துன்பம் கொண்டவர்கள்.கடுமையான சொற்களைப் பேசக் கூடியவர்கள்.எவரையும் ஏளனம் செய்யும் இயல்பு கொண்டவர்கள்.தர்மத்தை கடைபிடிப்பவர்கள்.திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம்

 நட்சத்திர அதிபதி- புதன்

நட்சத்திர நாம எழுத்துகள் : டி, டு, டே, டோ மற்றும் மெ, மை.

கணம் :ராட்சச கணம்

மிருகம் :ஆண் பூனை

பட்சி : கிச்சிலி

மரம் :புன்னை

நாடி :வாம பார்சுவ நாடி

ரஜ்ஜு :இறங்கு பாதம்

அதி தெய்வம் : ஆதி சேஷன்

ஆயில்யம் நட்சத்திரதில் பிறந்தவர்களின் குடும்பம் -திருமணம் அமைப்பு

பெரும்பாலான ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் தாமதமாவதைப்பார்க்க முடிகிறது. திருமண வாழ்க்கை பிரச்னைகளை சந்திப்பதைக் காட்டுகிறது. இது ஆதிசேஷனின் நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. தாயின் மீது அன்பும் பாசமும் அதிகம். குடும்ப வாழ்க்கையில் பலவித போராட்டங்களை சந்தித்து முன்னேறுவார்கள். அநேகமாக தாய்க்கும் மனைவிக்கும் இடையில் போராடுவார்கள். ஜாதகம் மட்டும் நன்றாக அமைந்துவிட்டால் நல்ல பலன்களும், நல்ல குடும்ப வாழ்க்கையும் இருக்கும். வீட்டில் உள்ள பிரச்னைகளை வெளியில் காட்ட மாட்டார்கள். இவர்களின் குழந்தைகள் நல்ல நிலமைக்கு வருவார்கள். ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் தள்ளிப்போவதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் அனந்த விரதம் இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றி நடை போடுவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரதில் பிறந்தவர்களின் தொழில் அமைப்பு

இவர்களுக்குகணிதத்தில் நல்ல புலமை உண்டு. கணித ஆசிரியர்கள், வானியல் வல்லுனர்கள், உணவு விடுதி, மளிகைக்கடைக்காரர்கள், கப்பல் துறை, அரசாங்க அதிகாரிகள், மட்டுமல்லாமல் அரசியலிலும்கூடஈடுபடுவார்கள். ஒரு சிலர் விவசாயிகளாகவும், விவசாயம் சார்ந்த தொழிலிலும் இருப்பார்கள். கணிதப் புலமை இருப்பதால் ஆடிட்டர். மென்பொறி வல்லுனர்களாகவும் இருப்பார்கள். எதில் இருந்தாலும் போராடியே முன்னுக்கு வருவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரதில் பிறந்தவர்களை தாக்கும் நோய்கள்

இவர்களுக்கு சளித்தொல்லை. நுரையீரல் தொந்தரவு, இதயக்கோளாறு, தலைவலி, வயிற்று உபாதைகள் போன்றவை ஏற்படலாம்.

மகா தசா பலன்கள்

இவர்கள் பிறக்கும் போது புதன் தசை இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்களும், சற்று சிரமமான சூழ்நிலையும் இருக்கும் ஆனால் படிப்பில் மேன்மை இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதற்கு அடுத்த தசையாக கேது தசை இருப்பதால் அந்தக் காலகட்டங்களில் இருப்பிட மாற்றம், உடல்நிலைக் கோளாறுகள், படிப்பில் தடை போன்றவை ஏற்படலாம். இதற்கு அடுத்த தசையாக வரக்கூடிய சுக்கிர தசை 20 வருடங்கள். பொருளாதார முன்னேற்றம், வீடு வாகன சேர்க்கை குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் போன்றவை ஏற்படும். இதற்கு அடுத்ததாக வரும் சூரிய திசை 6 வருடங்கள். இவர்களுக்கு நல்ல மேன்மையைத் தரும். அடுத்ததாக வரும் சந்திர திசை 10 வருடங்கள். செல்வம், செல்வாக்கு போன்றவை ஏற்பட்டு சமுதாயத்தில் மதிப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரம் முதல் பாதம் 

சாமர்த்திய சாலிகள்.ஆராய்ச்சிப் பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.கீர்த்தியை விரும்புவர்கள்.மிகுந்த வாக்கு பலிதம் உள்ளவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் 

சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்கள்.விரும்பிய வாழ்க்கையை அடைய எதையும் செய்யக்கூடியவர்கள்.தவறுகளை நியாயப் படுத்துவார்கள்.எழிலான தோற்றம் கொண்டவர்கள்.முன்கோபம் கொண்டவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:

தீய சொற்களைப் பேசக் கூடியவர்கள்.தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளக் கூடியவர்கள்.மெதுவான போக்கைக் கொண்டவர்கள்.கர்வம் மற்றும் கோபம் கொண்டவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம் 

அசட்டுத்தனமான நம்பிக்கை கொண்டவர்கள்.சொத்துக்களை அழிப்பவர்கள்.எதற்கும் அஞ்சாதவர்கள்.இவர்கள் அறிவாளிகள் ஆனால் மந்தமான போக்கைக் கொண்டவர்கள்.எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்.அடிக்கடி நோய்வாய் படுபவர்கள்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்

நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

ஆயில்யம் நட்சத்திரம்

வழி பாட்டு ஸ்தலங்கள்

சங்கரன் கோவில்;

திருநெல்வேலிக்கு வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் INDRAYA RASI PALAN சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.

புள்ள பூதங்குடி;

கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.

திருப்புகலூர்;

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

நாகூர்;

நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.

திருவாரூர்;

அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.

கூற வேண்டிய மந்திரம்

ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
சர்ப்ப ராஜாய தீமஹி
தந்நோ அனந்த ப்ரசோதயாத்

ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!