Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் :பகுதி21-நவாம்சம் என்றால் என்ன ?நவாம்சம் கணிப்பது எப்படி ?

அடிப்படை ஜோதிடம் :பகுதி21-நவாம்சம் என்றால் என்ன ?நவாம்சம் கணிப்பது எப்படி ?

நவாம்சம் 

நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது சம பாகங்களாக பிரித்து ,ராசியில் உள்ள கிரகம் அது எந்த பகுதியில் உள்ளது என்பதை காட்டுவதாகும்.

ராசி சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம் ஆகும் .நவாம்சம் என்பது அதனுடைய நிழல் என்றே  கூறலாம் .ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப ,அசுப வர்க்கங்களை கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்ல பட்டது .அதில் கிரகங்களுக்கு பார்வை இல்லை ,மறைவு ஸ்தானமும் இல்லை .ஆனால் சேர்க்கை வர்கோத்தமம் உண்டு .

ராசி சக்கரம் என்னும் உண்மைநிலையில் மட்டுமே கிரகங்களுக்கு பார்வை உண்டு .நவாம்சம் என்பது ராசி சக்கரத்தை ஒன்பதின் மடங்கில்  எந்த கிரகம் எங்கே ? எந்த துல்லிய நிலையில் சுபத்துவ ,பாபத்துவ அமைப்பில் உள்ளது என்று பார்க்க உதவுகிறது 

மேலும் நவாம்சத்தை வைத்து திருமண வாழ்க்கையை துல்லியமாக கூற முடியும்.

நவாம்சம் எப்படி போட வேண்டும்? 

நவாம்ச கட்டம் போடுவதற்கு முன் கிரகங்களுக்குரிய நட்சத்திரங்கள் பற்றி  தெரிந்திருக்க வேண்டும் 

சூரியன் – கார்த்திகை ,உத்திரம் ,உத்திராடம் 

சந்திரன்- ரோகினி ,அஸ்தம் ,திருவோணம் 

செவ்வாய்-சித்திரை ,அவிட்டம் ,மிருகசீரிடம்  

ராகு- சுவாதி ,சதயம் ,திருவாதிரை  

குரு-புனர்பூசம் ,பூரட்டாதி  ,விசாகம்  

சனி- பூசம், அனுஷம், உத்திரட்டாதி  

புதன்-ஆயில்யம் ,கேட்டை ,ரேவதி  

கேது-அசுவினி ,மகம் ,மூலம்  

சுக்கிரன்- பரணி ,பூராடம் ,பூரம் 

நவாம்சம் கணிக்கும் முறை :

சந்திரன் ,குரு ,கேதுவின் நட்சத்திரங்களின் பாதம்-மேஷம் முதல் கடகம் 

செவ்வாய் ,சனி ,சுக்கிரன் நட்சத்திரங்களின் பாதம்-சிம்மம்  முதல் விருச்சிகம் 

சூரியன் ,புதன் ,ராகு நட்சத்திரங்களின் பாதம்-தனுசு முதல் மீனம்  

உதாரண ஜாதகத்தின் ராசி கட்டம் 

நவாம்சம் 

 உதாணர ஜாதகத்தின் அம்ச கட்டம் 

நவாம்சம் 

உதாரண ஜாதகத்தின் நட்சத்திர பாதம் 

கிரகம்ராசிதீர்க்காம்சம்நட்சத்திர பாதம்
லக்னம்கடகம்22:32ஆயில்யம்-2
சூரியன்தனுசு19:39பூராடம் -2
சந்திரன்துலாம்27:41:00விசாகம்-3
செவ்வாய்மீனம்27:59:00ரேவதி-4
ராகுகும்பம்14:05சதயம் -3
குருரிஷபம்03:00கிருத்திகை -2
சனிதனுசு12:20மூலம்-4
புதன்மகரம்07:34உத்திராடம்-4
கேதுசிம்மம்14:05பூரம்-1
சுக்கிரன்விருச்சிகம்27:30:00கேட்டை-4
மாந்திகடகம்01:42புனர்பூசம்-4

குறிப்பு :

லக்கினம் புதனின் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் உள்ளது ஆகையால் நவாம்சத்தில் மகரத்தில் போடவேண்டும் ..இதேபோல் பிற கிரகங்களையும் அதன் நட்சத்திர பாதத்தை பொறுத்து ..நவாம்சத்தில் போடவேண்டும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

1 COMMENT

  1. ஜோதிடம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. நன்றி .அடுத்த பதிவு நவாம்ச பலன் அறிதலை நோக்கிக் காத்திருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!