உங்கள் ஜாதகம் நீண்ட ஆயுள் ஜாதகமா ? அற்ப ஆயுள் ஜாதகமா ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஆயுள்

மனித வாழ்வில் உலகில் பிறந்த ஒவ்வொருவருமே தாம் 80 வயதுக்குமேல் இருப்போம் என்றும் மறுபிறப்பற்றவர் என்றும் நினைத்துக்கொள்வது இயல்பே. எனினும் நாம் பிறந்த உடனேயே மூச்சுவிடத் தொடங்குகிறோமல்லவா? ஒவ்வொரு மூச்சும் நம்மை மரண காலத்தை நோக்கியே அழைத்துச் செல்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு 8 ஆவது வீட்டைக் கொண்டு அவருடைய ‘ஆயுள்‘ பலத்தை அறியலாம். பொதுவாய் 8 ஆவது வீடு சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதே நியதி. எனினும் 8 ஆவது வீடு சுத்தமாய் இருந்தும் அந்த வீட்டு அதிபதி உச்சமாகவோ நீச்சமாகவோ மறைவிடத்திலோ இருந்தால் நீண்ட ஆயுள் என்று சொல்வதற்கில்லை. நீச்சமானால் துர்மரணம் உண்டாகலாம்.

எந்த வகையில் ஒருவருக்கு உயிர் பிரியும் என்பதைப் பார்ப்போம்.

8 இல் கிரகம் நீச்சம் பெற்றால்

  • ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 8 இல் சூரியன் நீச்சமானால் தீ விபத்தில் உயிரிழப்பார்.
  • சந்திரன் நீச்சமானால் வெள்ள அபாயத்தில் நீச்சமான தெசா காலத்தில் உயிரிழப்பார்.
  • செவ்வாய் நீச்சமானால் இரத்தத்தில் இரும்புச் சத்து (ஹிமோகுளோபின்) குறைந்து மூச்சிரைச்சலுற்றும் உயிரிழப்பார்.
  • புதன் நீச்சமானால் மனபயம், சித்தபிரமையாலும்,
  • குரு நீச்சமானால் பசியாலும்,
  • சுக்கிரன் நீச்சமானால் புயல் காற்றாலும் உயிரிழப்பார்.
  • இராகு நீச்சமானால் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பார்.
  • கேது நீச்சமானால் விஷ மருந்தினால் உயிரிழப்பார்.
 ஆயுள்

கேது 8இல் இருந்தால், விஷ மருந்து தான் உண்ணுதல் மட்டுமின்றி, பிறரால் வலுக்கட்டாயமாகத் தரப்படலாம். அல்லது சொல்லாமல் விஷம் அளிக்கலாம். எனவே நாகரீகம் கருதி முன்பின் அறிமுகமில்லாத இடங்களில் உணவு உண்ணாமல் இருப்பதே பரிகாரமாகும்.

மேற்கண்ட யாவும் லக்கினத்துக்கு 8 இல் இருந்தால் நிகழும். மேலும் குரு நீச்சமானால் மலை உச்சியில் இருந்து உருண்டு உயிர் பிரியும்,

  • கேது 8இல் இருந்தால் பாம்பு கடித்து உயிர் இழப்பார்.

கிரகங்கள் லக்னத்தில் நீச்சம் பெற்றால்

  • கிரகங்கள் லக்னங்களில் நீச்சமானால் முழு மயக்க நிலை அடைந்தும் தலை துண்டிக்கப்பட்டும் இடி விழுந்தும் உயிர் இழப்பார்.
  • சூரியன் 1 இல் நீச்சமானால் மயக்கநிலை உண்டாகும்.
  • சந்திரன் லக்கினத்தில் நீச்சம் ஆனால் மறதி, மயக்கம் உண்டு.
  • செவ்வாய் 1 இல் நீச்சமானால் பிரமை பிடிக்கும்.
  • புதன் 1 இல் நீச்சமானால் பல் உதிர்ந்து இரத்தம் வடிந்து உயிர் இழப்பார்.
  • குரு, சனி போன்றவை லக்கினத்தில் நீச்சமானால் விபத்தை உண்டாக்கும்.

மேற்கண்ட கிரகங்கள் லக்னத்துக்கு 2 இல் நீச்சமானால் சூரியன் என்றால் புகையிலை போட்டு புற்று நோய் உண்டாகி உயிரிழப்பார்.

சந்திரன் எனில் மதுஅருந்தி உயிர் இழப்பார். தொண்டை அடைப்பான் (டான்ஸில்) உண்டு.

செவ்வாய் நீச்சமானால் கிணற்றில், கடலில் விழுந்து இறப்பர்.

மேற்கண்ட கிரகங்கள் லகனத்துக்கு 3. 4, 9 ஆகிய இடங்களில் நீச்சமானால் சகோதரர் தாயார். தந்தை வழி உறவு பகையால் உயிர் இழப்பார்.

  • 4 இல் ஒரு கிரகம் நீச்சமானால் வாகன விபத்தில் கண்-இருதய அறுவை சிகிச்சையில் உயிரிழப்பார்.
  • 5 இல் மேற்கண்ட கிரகங்கள் நீச்சமானால் புத்திர சோகத்தில் உயிரிழப்பார்.
  • 6,8,12 இல் இருந்தால் கடனுபாதையில் தற்கொலை செய்து கொள்வார்.
  • 7 இல் நீச்சமானால் தவறான ஆண் / பெண் பழக்கம், எய்ட்ஸ் நோய் கண்டு உயிரிழப்பார்.
  • 10 இல் நீச்சமானால் தொழில் கடன் உண்டாகி உயிர் இழப்பார்.
  • 12 இல் சனி, இராகு இருந்தால் யானைக்கால் நோய் உண்டாகி உயிர் இழப்பார்.
  • 12 இல் புதன் இருந்தால் அந்தத் தெசை நடந்தால் கால்வீக்கம் உண்டாகி உயிர் பிரியும்.

சந்திரன், சுக்கிரன் ஒரே வீட்டில் இருக்க அருவியில் குளிக்கப் போனால் மூச்சுத் திணறி உயிர் பிரியும்.

சுக்கிரன் கேலிக்கைக்கு அதிபதி என்பதால் சுக்கிரன் எந்த இடத்தில் நீச்சமாய் இருந்தாலும் ஒன்றும் செய்யாது. இது விதிவிலக்கு.

 ஆயுள்

8 இல் கிரகம் உச்சம் பெற்றால்

சூரியன் 8 இல் உச்சமானால் குளிராலும்,

சந்திரன் உச்சமானால் தாகத்தாலும்,

செவ்வாய் உச்சமானால் உயர் இரத்த அழுத்தத்தாலும்.

புதன் உச்சமானால் அதிகக் கொழுப்பாலும்,

குரு உச்சமானால் அதிக சிந்தனை வயப்படுதலாலும் உயிர் பிரியும்.

சுக்கிரன் 8இல் உச்சமானால் மனைவியால் கொல்லப் படுவார். (உச்சமாகி 8 இல் மறைந்தால்,)

சனி 8இல் உச்சமானால் இரும்பு தாக்கப்பட்டு உயிர் இழப்பார்.

இராகு உச்சமானால் சிற்றப்பாவாலும்

கேது உச்சமானால் மாமாவாலும் மரணமுண்டு.

இவை யாவும் 8 ஆம் வீட்டில் இருந்தால் உண்டாகும்.

இராகு உச்சமாகி லக்னத்தில் இருந்தால் இடி இடித்து தலையில் விழுந்து உயிர் பிரியும்.

நீண்ட ஆயுள் ஜாதகம்

லக்னத்தைச் சனி 10 ஆம் பார்வையாலும் செவ்வாய் 6 ஆம் பார்வையாலும், குரு 9 ஆம் பார்வையாலும் பார்த்தால் நீண்ட ஆயுள் 85 வயது வரை உண்டு.

சனியோ ஆயுள் ஸ்தானாதிபதியோ ஆட்சியாய் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

லக்னத்துக்கு 8 இல், இரண்டில் லக்னத்தில் சனி இருந்தால் நீண்ட ஆயுள் 90 வயது உண்டு,

 ஆயுள்

இராசியில் அல்லது அம்ஸத்தில் லக்கினம் + சந்திரன் இணைந்தால் 96 வயது உண்டு.

மனிதனுக்குப் பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள், அதாவது தான் பிறந்த தெசா புக்தி மீண்டும் வரும் வரை வாழ்ந்தால் 120 வயது உள்ளவராவார்.

  • மத்திம ஆயள் 60 வயது
  • அற்பாயுள் 40 வயது
  • 80 வயது வாழ்பவர்கள் வணங்கத் தருந்தவர்கள்.

ஒருவர் ஜாதகத்தில் உச்சம் நீச்சம் இல்லாதிருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

எல்லா தெசைகளிலும் இராசிநாதனுக்கு 8 ஆவது வீட்டு புத்திநாதன் புத்தியில் உயிர்கண்டம் உண்டாகும்.

புத்திநாதன் ஆட்சி அல்லது வர்கோத்தம் நிலை அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

பஞ்சபூதங்களால் உண்டான தேகம் பஞ்சபூதங்கள் ஒன்றால்தான் மரணமடைவார்.

கொலையும் தற்கொலையும்

தொழிலாளர் நலச்சட்டபடி தொழில் வளாகத்தில் நடக்கும் கொலை விபத்தாகக் கருதப்படும். தற்கொலை விபத்தாய்க் கருதப்பட மாட்டாது.

ஒரு ஜாதகத்தில் லக்கினத்துக்கு 8 இல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் கூடியிருந்தாலோ. கோச்சாரப்படி கூடியிருக்கும் நேரத்திலோ வாகனத்தில் கோர விபத்து அடைந்து உயிர் இழப்பார்.

லக்கினத்துக்கு 6 இல் சூரியன், செவ்வாய், இராகு கூடின் பல பேரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு இறப்பார்.

லக்கினத்துக்கு 12 இல் கூட்டு கிரகம் அதாவது புதன், குரு, இராகு, செவ்வாய் இருந்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாவார்.

சந்திரன் நீச்சமாகி, கடகத்தில் குரு இருந்தால் படகு மூழ்கி உயிர் இழப்பார்.

8 ஆம் வீட்டில் 2 ஆம் வீட்டு அதிபதி இருந்தால் இராகு-கேதுவால் பார்க்கப்பட்டால் அதிகம் உணவு உண்டு உயிர் இழப்பார்.

2 இல் கேது அல்லது செவ்வாய் இருந்தால் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வார்

கேட்டை- அனுஷக் கால்களில் எட்டாம் அதிபதி நீச்சமானால் நாய்க்கடியால் உயிர் பிரியும்.

ரேவதி – பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பூனையால் தொற்றுநோய் உண்டாகும்.

பூரட்டாதி, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் யானையிடம் கவனமுடன் இருப்பது நல்லது.

8 இல் சந்திரன் இருந்தால் கடனுபாதையால் உயிர் இழப்பர்.

6 ஆம் அதிபதி 8 இல் இருந்தால் வயல் வரப்பில் மயங்கி உயிர் இழப்பர்.

8-ல் சனி அல்லது சூரியன் இருந்தால் (நீச்சமானால் ரயிலடியில் உயிர் பிரியும்).

புதன் குரு நீச்சமானாலும் எலும்பு தேய்ந்து உயிர் பிரியும்.

சனி செவ்வாய் பரஸ்பர பார்வை நெருப்பு அபாயம் உண்டு.

இயற்கை மரணம் யாருக்கு உண்டாகும்

ஆயுள்காரகனும் ஆயுள் ஸ்தானாதிபதியும் உச்சம் நீச்சமின்றி ஆட்சி வீட்டில் இருந்தால் இயற்கையான மரணம் உண்டாகும்.

ரோகிணி, அனுஷம் ஆகிய தேவகணங்களுக்கு இயற்கை மரணம்
உண்டு,

சுவாதி நட்சத்திரக்காரர் மரண பயம் இன்றி உயிரை விடுவார்.

பெளர்ணமியில் உயிர் பிரியின் நன்று.

அமாவாசையில் உயிர் பிரியின் சுமாரான பலனே உண்டாகும்.

தனிஷ்டா பஞ்சமி என்பதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, தீபம் ஏற்றல் போன்றவையும் தேவையில்லை.

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் உயிர் பிரிந்து தனுஷ்டா பஞ்சமி கன்னக்கோள் வேண்டாம்.

செவ்வாயும் சூரியனும் பரிவர்த்தனையாகி இராகுவால் பார்க்கப்பட்டால் கலவரத்தில் உயிர் பிரியும்.

சுக்கிரன் நீச்சமாகி குருவால் பார்க்கப்பட்டால் அமிலங்களால் உயிர் பிரியும்.

புதன் நீச்சமாகி செவ்வாயால் பார்க்கப்பட்டால் பள்ளத்தில் விழுந்து உயிர் பிரியும்.

சனி நீச்சமாகி செவ்வாயால் பார்க்கப்பட்டால் கத்தி ஆயுதங்களால் உயிர் பிரியும்.

இராகு செவ்வாய் சேர்ந்து சனியால் பார்க்கப்பட்டால் கொதிக்கும் வெந்நீர், எண்ணெய் பட்டு உயிர் பிரியும்

6 ஆவது வீட்டில் 5,6,7,8 ஆம் அதிபதிகள் இருந்தால் நண்பர்கள் குழுமியிருக்க உயிர் பிரியும். குத்தி கொல்லபடுவார்.

சிம்மம், மிதுனம், கும்பம், தனுசு லக்னக்காரர்களுக்கு இயற்கை மரணம், சுப மரணம் உண்டு.

 ஆயுள்

புதன் நீச்சமாகி செவ்வாயால் பார்க்கப்பட்டால் நுரையீரல் நோயால் உயிரிழப்பர்.

சுக்கிரன் + புதன் சேர்ந்தால் புற்று நோய் தாக்கும்.

சுக்கிரன் + சூரியன் சேர்ந்து 6 இல் இருந்தால் தோல் ஒவ்வாமை (அலர்ஜி) உண்டாகும்.

குரு + சனி சேரின் தசை நரம்புப் பிடிப்பு உண்டாகும்.

அசுபதி, அவிட்டம், ஆயில்யம், ஹஸ்தம், அனுஷம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் நீண்ட ஆயுள் அடைவர்.

புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்கள் கணவர் / மனைவியால் தொல்லையுறுவர்.

சதயம் நட்சத்திரக்காரர்கள் காது தொண்டைவலியால் அவதியுறுவர்.

மகம், பூரம் நட்சத்திரக்காரர்கள் பாம்பு பயம் உள்ளவர்.

லக்னத்துக்கு 5, 11 இல் இராகு, கேது இருந்தால் பாம்பு கடித்து உயிரிழப்பர்.

சனி + இராகு சேர்ந்து 6 இல் இருந்தால் அம்மை போட்டு உயிர் இழப்பர்.

பரணி, பூரம் நட்சத்திரக்காரர்கள் மருந்து மாத்திரையால் உயிர் இழப்பர்.

உத்திரம், உத்திரட்டாதி, புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பிற மாதர் தொடர்பால் நோயுற்று இறப்பர்.

9 இல் கூட்டுக்கிரகம் இருந்து சனியால் பார்க்கப்படின் பெற்றோர் இருவரும் ஒரே நாளில் இறப்பர்:

இராகு செவ்வாய் லக்கினத்துக்கு 3 இல் இருப்பின் பெற்ற மகனாலோ உடன்பிறந்த சகோதரியாலோ வஞ்சிக்கப்பட்டு உயிர் இழப்பார்.

Leave a Comment

error: Content is protected !!