Homeஜோதிட குறிப்புகள்லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள்

லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள்

உச்ச கிரக பலன்கள்

  • லக்னத்தில் ஒரு கிரகம் உச்சமானால் பெரிய பதவி பெறுவர்.
  • லக்னத்துக்கு 2 இல் (குடும்பஸ்தானத்தில் ஒரு கிரகம் உச்சமானால் பிற சாதியினருடன் திருமணம் உண்டு
  • லக்னத்துக்கு 3இல் ஒரு கிரகம் உச்சமானால் (லக்னத்திலிருந்து) சகோதரர் பெரும் பதவியில் இருப்பர்.
  • லக்னத்தில் இருந்து 4 இல் ஒரு கிரகம் உச்சமானால் வீடு, வாகன யோகம் உண்டாகும்.
  • லக்னத்துக்கு 5 இல் ஒரு கிரகம் உச்சமானால் புத்திர பேறு உண்டு. ஆனால், சிம்மம், தனுசு, கும்பம்,மிதுனத்தில் எந்தக் கிரகமும் உச்சம், நீச்சம் ஆகாது.
லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள்
  • லக்னத்துக்கு 6 இல் ஒரு கிரகம் உச்சமானால் கடன் பெருகும்.
  • லக்னத்துக்கு 7 இல் கிரகம் உச்சமானால் மணவாழ்வு சரியாக இருக்காது.
  • லக்னத்துக்கு 8 இல் கிரகம் உச்சமானால் விஷ பயமுண்டாகும்.
  • லக்னத்துக்கு 9 இல் கிரகம் உச்சமானால் இவரது தந்தை இரண்டாவது மணம் செய்வார்.
  • லக்னத்துக்கு 10 இல் ஒரு கிரகம் உச்சமானால் தொழிலேதுமின்றி சுகமாய் இருப்பர்
  • லக்னத்துக்கு 11 இல் கிரகம் உச்சமானால் இலாபம் உண்டாகும்.
  • லக்னத்துக்கு 12 இல் உச்சமானால் வேற்று மாநிலம் வாசமும் உண்டாகும்.

நீச்ச கிரக பலன்கள்

  • லக்னத்தில் ஒரு கிரகம் நீச்சமானால் பைத்தியம் பிடிக்கும். குழப்பம் உண்டு.
  • லக்னத்துக்கு 2 இல் கிரகம் நீச்சமானால் டான்சில் உபாதை உண்டு. தாழ்ந்த மக்கள் நடுவில் வசிப்பர்,
  • லக்னத்துக்கு 3 இல் கிரகம் நீச்சமானால் கணவர் / மனைவிக்குத் துரோகம் செய்வர். திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும். சகோதரப் பிரிவு உண்டு.
  • லக்னத்துக்கு 4 இல் ஒரு கிரகம் நீச்சமானால் வாகன விபத்து 4 ஆம் தெசையில்) உண்டு. தாயார் பிரிவு உண்டு. (அம்சத்தில்) அதே கிரகம் உச்சம், வர்கோத்தமமானால் தாயாருக்கு நலமுண்டு.
  • லக்னத்துக்கு5 இல் ஒரு கிரகம் நீச்சமானால் புத்திர சோகமுண்டு,
  • லக்னத்துக்கு 6 இல் ஒரு கிரகம் நீச்சமானால் கடனுபாதை பெருகும். பேசினாலே சண்டை வரும்.
லக்னம் முதல் 12 வீடுகளில் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்கள்
  • லக்னத்துக்கு7இல் ஒரு கிரகம் நீச்சமானல் காமுகர்களாய் இருப்பர். நீச்ச இன மக்களிடம் கலந்துறவாடுவார்.
  • லக்னத்துக்கு 8 இல் ஒரு கிரகம் நீச்சமானால் சூரியன் இருந்தால் நெருப்பினும், சந்திரன் இருந்தால் நீரிலும், செவ்வாயானால் ஆயுதத்திலும், புதனானால் பசியாலும், குருவானால் மலைமீது ஏறி விழுந்தும். சுக்கிரனானால் மனப்பிரமையானும், சனியானால் கள்வராலும், இராகுவானால் மருந்தாலும், கேதுவானால் மாந்திரீகத்தாலும் உயிர் பிரியும்.
  • லக்னத்துக்கு 9 இல் கிரகம் நீச்சமானல் தந்தைவழி சொத்து கிட்டாது. தந்தை தேசாந்திரியாக அலைவார்.
  • லக்னத்துக்கு 10 இல் கிரகம் நீச்சமானால் தொழிற்சங்கத் தலைவர்.
  • லக்னத்துக்கு 11 இல் நீச்சமானால் பொருள் வரவும் உண்டு.
  • லக்னத்துக்கு 12 இல் கிரசு நீச்சம் வீண் அலைச்சல், கால் வீக்கம் தரும்.
  • லக்கினத்திற்கு 2 ஆம் அதிபதி, 6 இல் நீச்சமானால் பிறவி ஊமை 2 இலேயே நீச்சமானால் திக்குவாய் உண்டாகும். 3 இல் நீச்சமானால் அதிர்ச்சியில் ஊமையாவார்..

இரு நீச்ச கிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் உச்ச பலன், இரு உச்சகிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் நீச்ச பலனும் உண்டு.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!