Homeஅடிப்படை ஜோதிடம்அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை மற்ற கிரகங்கள் பார்த்த பலன்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை மற்ற கிரகங்கள் பார்த்த பலன்கள்

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சூரியனை :

  1. செவ்வாய் பார்த்தால் அதிக முரடன்
  2. புதன் பார்த்தால் நல்ல அக சவுக்கியம். (சூரியனும் புதனும் பெரும்பாலும் அடுத்தடுத்து சஞ்சாரம் பண்ணுமானதால்)பார்வை சாத்தியமில்லை.
  3. குரு பார்த்தால் இவன் தாட்சிணியவாதி அன்புள்ளவன். அரசுப் பதவியையும் செல்வாக்கையும் அனுபவிப்பான்
  4. சுக்கிரன் பார்த்தால் சிற்றின்ப ஈடுபாடு அதிகம் இருக்கும் (இதுவும் அவ்வளவாக சாத்தியமில்லை) ஏன் என்றால் சுக்கிரனும் பெரும்பாலும் சூரியனுக்கு நெருக்கமாகவே சஞ்சரிப்பவன்.
  5. சனி பார்த்தால் இவன் ஏழையாக இருப்பான். சோம்பேறி, உழைப்பில் ஈடுபாடு இருக்காது.

அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சந்திரனை :

  1. சூரியன் பார்த்தால் தன்னை நாடியவருக்கு உதவி செய்வான், ஆனால் முரடன். அரசு செல்வாக்கு பதவி வகிப்பவர்.
  2. செவ்வாய் பார்த்தால் பல்-காது நோய்கள் இருக்கும். சமுதாயத்தில் பிறரை நம்பி வாழ்பவன்.
  3. புதன் பார்த்தால் பேரும் புகழும் அனுபவிப்பவன். எல்லா சுக சௌக்கியமும் அனுபவிப்பவன்.
  4. குரு பார்த்தால் மிகுந்த கல்வி உடையவன், மெத்தப் படித்தவன், பிறருக்கு போதகன்.
  5. சுக்கிரன் பார்த்தால் அழகிய பெண்களுடன் சகவாசம் உள்ளவன் ,பணக்காரன்.
  6. சனி பார்த்தால் ஏழை, பிறரிடம் இரக்கமற்றவன், நல்ல சந்ததி அற்றவன் அதாவது இவன் மக்கள் சிறப்பாக அமைவதில்லை.

அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள செவ்வாயை :

  1. சூரியன் பார்த்தால் அவன் மெத்தப் படித்தவன், தன் பெற்றோர்களிடம் மதிப்பு வைப்பவன்.
  2. சந்திரன் பார்த்தால் -பிற பெண்டிரிடம் அன்பு பற்றுள்ளவன். பிறரிடம் இரக்கமற்றவன். சில சமயம் களவிலும் ஈடுபடுவான்.
  3. புதன் பார்த்தால்-வேசியர் போகம் உள்ளவன். அதிக ஆடம்பரம் உள்ளவன்.
  4. குரு பார்த்தால்-தன் குடும்பத்திற்கு மதிப்புள்ள தலைவன். பணக்காரன் ,செல்வாக்கு தலைமை உள்ளவன்.
  5. சுக்கிரன் பார்த்தால்-நல்ல உணவு கிடைக்காது. பிற பெண்டிர் மேல் மோகத்தால் சில சமயம் சிக்கலில் மாட்டிக்கொள்பவன்.ஆனால் சமூகத்திற்கு நல்லது செய்வான்
  6. சனி பார்த்தால்- தன் குடும்பத்தை விட்டு விரட்ட படுவான். தாய் அன்பும் பாசமும் இவனுக்கு கிடைப்பதில்லை.
அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள புதனை :

  1. சூரியன் பார்த்த-உறவினரால் மிகவும் விரும்படுபவன். உண்மை விளம்பி, அரசாங்கத்திடமிருந்து நிறைய சலுகைகள் அனுபவிப்பவன்.
  2. சந்திரன் பார்த்தால்-இசை, நுண் கலைகளில் வல்லவன். பெண்களிடம் நிறைந்த சுகம் அனுபவிப்பான். வாகன யோகமும், நல்ல வீடும் உண்டு.
  3. செவ்வாய் பார்த்தால்-அரசினரிடம் நெருக்கமும் அதனால் ஆதாயமும் உள்ளவன்.
  4. குரு பார்த்தால்-நல்ல மனைவி, மக்கள், குடும்பம், செல்வம் உண்டு.
  5. சுக்கிரன் பார்த்தால்-இவன் பழகும் எல்லோராலும் நன்கு விரும்பப்படுவான். செல்வமும் பெயரும் புகழும் உண்டு.
  6. சனி பார்த்தால்-சமூகத்திற்கு நல்ல தொண்டு செய்பவன், நல்ல உறுதியான உடல், தன் குடும்பத்தாருடன் பூசலிடுபவன்.

அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள குருவை :

  1. சூரியன் பார்த்தால்-நீதிக்குப் புறம்பாக எதையும் செய்ய அஞ்சுபவன், தேவதாபக்தி உள்ளவன். பொது ஜன சேவை செய்பவன்.
  2. சந்திரன் பார்த்தால்-பெயர், புகழ் ,செல்வம் எல்லாம் பெருகும்.
  3. செவ்வாய் பார்த்தால்-கொடூரன், மற்ற முரடர்களை அடக்கி ஆள்பவன். அரசாங்கத்தால் வருமானம் உள்ளவன்.
  4. புதன் பார்த்தால்-நன்னடத்தை இராது, எப்பொழுதும் வலுச்சண்டை பூசல்களில் ஈடுபாடும்.அக்கறையும் உள்ளவன்
  5. சுக்கிரன் பார்த்தால்-பரிமள வாசனாதிப் பொருள்களை வியாபாரம் பண்ணுபவன். பெண்கள் பயன்படுத்தும் பொருள்கள் வியாபாரம்.பல பெண்களை அனுபவிப்பவன்
  6. சனி பார்த்தால்-குடும்ப சுகம், நிம்மதி இல்லாதவன், கடின சித்தம் உள்ளவன், கொடூரன்


அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சுக்கிரனை:

  1. சூரியன் பார்த்தால்-அழகிய குணவதியான மனைவி உள்ளவன். நிலபுலன், வீடு ,வாசல் ,சொத்து உள்ளவன்.
  2. சந்திரன் பார்த்தால்-தாய் மிகவும் உயர்ந்த அந்தஸ்து உள்ளவள். இவனும் சமூகத்தில் அதிக மதிப்புள்ளவன்.
  3. செவ்வாய் பார்த்தால்-திருமண வாழ்க்கை பாழாகும், பெண்களால் தனம் சொத்து அழியும்.
  4. புதன் பார்த்தால்-எப்பொழுதும் மகிழ்ச்சியும் அதிர்ஷ்ட பாக்கியமும் உள்ளவன்.
  5. குரு பார்த்தால்-நல்ல மனைவி உள்ளவன், நல்ல சந்ததி, செல்வம் உண்டு.
  6. சனி பார்த்தால்-மகிழ்ச்சி என்பது சிறிதளவும் இராது, தன் மனைவியிடமே இவன் மிகவும் துன்பப்படுவான். உறவினரும் மனைவியும் சேர்ந்து இவனை துன்புறுத்துவார்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ள சனியை :
  1. சூரியன் பார்த்தால்-மெத்தப் படித்தவன், வேதசாஸ்திர வித்தகன் ஆனால் வாழ்க்கையில் தன் பிழைப்புக்கு பெரும்பாலும் பிறரை நம்பி இருப்பான்.
  2. சந்திரன் பார்த்தால்-அரசியலில் பெரும் பதவியை அடையலாம். அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் தலைவனாகவும் முதன்மை அதிகாரியாக இருப்பான்.
  3. செவ்வாய் பார்த்தால்-படை அல்லது போலீஸ் துறையில் பெரிய அதிகாரி ஆகலாம்.
  4. புதன் பார்த்தால்-பெண்களின் கீழ் வேலை செய்ய வேண்டிவரும். பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவான்.
  5. குரு பார்த்தால்-பிறர் சுக துக்கங்களில் பங்கேற்று, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய எப்பொழுதும் முன் இருப்பான்.
  6. சுக்கிரன் பார்த்தால்-மதுவையும் மங்கையரையும் பெரிதும் அனுபவித்து மகிழ்வான். அரசுத் தலைமைக்கு மிகவும் வேண்டியவனாக இருப்பான்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!