Home108 திவ்ய தேசம்திருத்தேவனார் தொகை: நம்பிக்கையினை இழந்தவர்களுக்கு ஆன்மிக அருந்து மருந்து

திருத்தேவனார் தொகை: நம்பிக்கையினை இழந்தவர்களுக்கு ஆன்மிக அருந்து மருந்து

திருத்தேவனார் தொகை

திருமாலை” தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சிலசமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியம். காரணம் , திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப் போனால் குறிப்பாகத் தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் எடுத்து , தன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதால் தேவலோகத்தில் தங்குவது சொற்பகாலம் இதனால் வானுலகத்து தேவர்களும் இறைவன் இறைவியும் கூட திருமாலைத் தரிசனம் செய்வதற்கு பூலோகத்தை நோக்கி வந்த சம்பவங்கள் ஏராளம். அதிலொன்றுதான் திருத்தேவனார் தொகை என்னும் கீழச்சாலைப் பெருமாள் ஸ்தலம்.

சீர்காழிக்கு தென்கிழக்கே 8 கி.மீ. திருநாங்கூருக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது திருத்தேவனார் தொகை மாதவப் பெருமாள் கோவில் திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.

மூலவர் ஸ்ரீ தெய்வ நாயகப் பெருமாள். நின்ற திருக்கோலம்.

திருமகள் பூமி தேவியுடன் மேற்கு நோக்கி தரிசனம்.

தாயார் தெய்வநாயகி,கடல் மகள் நாச்சியார், மாதவ நாயகி என்று வேறு பெயர்களும் உண்டு.

தீர்த்தம் ஷோபன புஷ்கரணி.

விமானம் சோபன விமானம்.

இத்தல உற்சவ மூர்த்தியின் பெயரால் “மாதவப் பெருமாள் தலம்” என்று அழைக்கப்படுகிறது .

திருத்தேவனார் தொகை

‘வசிஷ்டர்’ நீண்டகாலம் நிஷ்டையில் ஆழ்ந்தும் பெருமாள் தரிசனம் கிடைக்கவில்லை. எனவே இங்கு வந்து தவமிருந்தார் . திருமாலும் உடனடியாக வசிஷ்டருக்கு காட்சி தந்தார் . வசிஷ்டருக்கு தரிசனம் தந்த திருமால் தங்களுக்கும் தரிசனம் வேண்டும் என்று தேவலோகத்து பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக இங்குவந்து பெருமாளிடம் பிரார்த்தனை செய்தார்கள் . தேவலோகத்தில் தரிசனம் தராத ‘ பெருமாள் ‘ – தேவர்கள் அனைவருக்கும் பிரட்சத்யமாக தரிசனம் கொடுத்த ஸ்தலம் . அதனால் தேவனார்த் தொகை என்றழைக்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார் பாசுரம் செய்த ஸ்தலம்” திருநாங்கூர் கருட சேவையில் இந்த மாதவப் பெருமாளுக்கும் பங்குண்டு.

திருத்தேவனார் தொகை

பரிகாரம் :

மற்ற எந்த ஸ்தலங்களுக்குச் சென்றும் தங்கள் பிரார்த்தனைகள் ஈடேறாத நிலையில் பக்தர்கள் இங்குவந்து பிரார்த்தனை செய்தால் பகவான் எந்த ரூபத்தில் வந்தாவது தரிசனம் கொடுத்து அவர்தம் பிரார்த்தனையை நிறைவேற்றிக் காட்டுவார். மகான்கள் வாக்கு பெரியோர்கள் வாக்கு ஒருவேளை பொய்த்துப் போனால் அந்த வாக்கு நல்லபடியாக நடக்க இத்தலத்து பெருமாள் வழிகாட்டுவார். வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள் , தொழிலால் , உடலால் , மனதால் , பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தலம் ஒரு அருமருந்தாக இருக்கும்.அமைதியான வாழ்க்கையை ஆயுள் முழுவதும் தரும். இங்கு கருடசேவை செய்தால் அவர்கள் பரம்பரை கொடிகட்டிப் பறக்கும்.

கோவில் இருப்பிடம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!