திருவஹீந்த்ரபுரம்- தேவநாத சுவாமி
பெருமானின் திவ்ய தேசங்கள் இவ்வனவுதான் எண்ணிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும் சில திவ்ய தேசங்களில் பக்தர்களை எப்படியெல்லாம் சோதனைக்குப்படுத்தி பின்னர் அவர்களுக்கு தாமே தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்பொழுது பெருமாளின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையென்று நினைத்து மனம் ஆனந்தத்தில் மூழ்குகிறது. இதற்கு அடையாளமாக திருவஹீந்திரபுரம் தேவநாத சுவாமி கோவிலை சொல்லலாம்.
கெடில நதிக்கு தென்கரையில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஐந்து நிலை இராஜகோபுரம் மூன்று பிராகாரங்களைக் கொண்டது.
மூலவர் தெய்வ நாயகப் பெருமான் நின்ற திருக்கோலம். இருபுறங்களின் மார்க்கண்டேயர் பூமிதேவி காட்சியளிக்கிறார்கள்.
உற்சவர் தேவநாதன் தாயார் ஹேமாம்புஜவல்லி ஸ்ரீ பார்கலி தாயார் என்பது மற்றொரு பெயர்.
விமானம் சந்திர விமானம்.
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சேஷ தீர்த்தக் கிணறு கருடநதி இவ்வாலயத்தின் எதிரில் 74 படிகள் கொண்ட ஒளஷதாசலம் என்ற மலையில் லஷ்மி ஹயக்கிரீவர் காட்சி தருகிறார்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் திருமால், தேவர்களுக்காக அசுரர்களை தனது சக்கராயுதத்தால் கொன்றார். அசுரர்களுக்காக சிவபெருமான் போராடியபொழுது சிவபெருமான் சக்ராயுதத்திற்கு எதிராக தனது குலத்தை ஏவினார். அதையும் சக்ராயுதம். வென்றது அப்பொழுது சிவபெருமானுக்கு ஸ்ரீமந் நாராயணனே மும்மூர்த்தியும் தாமே என்ற வடிவத்தைக் காட்ட சிவபெருமான் சாந்தமானார். அவருடைய குலாயுதத்தை பெருமாள் சிவனிடமே கொடுத்தார். பிறகு இங்கேயே கோவில் கொண்டார் பெருமாள்.
ஒருசமயம் தாகசாந்திக்கு பகவான் நீர் கேட்க ஆதிசேஷன் தனது வாலால் பூமியை அடித்து பிளந்து தீர்த்தம் கொடுத்தார். இதனால் இங்குள்ள தீர்த்தத்திற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர். கருடனும் பகவானுக்கு நீர் கொண்டு வந்தார். அதுதான் கருடநதியாயிற்று இப்பொழுது அது கெடிலநதியாக மாறிவிட்டது.
கருடன் கைகளைக் கட்டிக் கொண்டு சேவை சாதிப்பது அபூர்வமான காட்சி, பெருமாள் சங்கு சக்கரதாரியாய். நான்முகத்தோடு நெற்றிக்கண் கொண்டு ‘மூவரும் நாமே” என்று காட்சியளிப்பது மிகப்பெரிய விசேஷம். ஸ்ரீமத் வேதாந்த தேசிகருக்கு கருட பகவான் மூலம் ஹயக்கிரீவ மந்திரத்தை உபதேசமாகப் பெற்ற ஸ்தலம்.
பரிகாரம்:
நோய்களினால் கஷ்டப்படுகிறவர்கள் டாக்டரிடம் சென்றும் குணமாகாமல் இருந்தாலும் சரி, வறுமையில் பலகாலம் வாடுபவர்களும் சரி, கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டு சங்கடப்படுபவர்களுக்கும் சரி வாழ்க்கையில் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு இனி மனிதப் பிறவியே வேண்டாம் மோட்சம்தான் வேண்டும் என்று நினைக்கிற வர்களும் இங்குள்ள பெருமாளிடம் நேரிடையாக பிரார்த்தனை செய்தால் அவர்கள் எண்ணியது அப்படியே நடக்கும். இந்த சேஷ குளத்தில் பால் உப்பு மிளகு ஆகியவைகளைப் போட்டால் அத்தனை நோய்களும் விலகும்.
கோவில் இருப்பிடம்