Homeஆன்மிக தகவல்நவராத்திரி பூஜைநவராத்திரி நான்காம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு

அம்மன் வடிவம் : மகாலட்சுமி

பூஜையின் நோக்கம்: தேவர் துதி ஏற்றல்

மகாலட்சுமி வடிவம் : தாமரை மலரில் வீற்றிருப்பவள்.கேடயம், ஆயுதம் மற்றும் சங்கு சக்கரம் ஏந்திய பவளம் போன்ற சிவந்த நிறமுடையவள். திருமாலின் சக்தியாக விளங்கக்கூடியவள். திருமாலின் பத்தினி ஆவாள். சகலவிதமான நன்மைகளையும் அளிக்கக்கூடியவள் மகாலட்சுமி

தென்நாட்டில் நான்காம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சாந்தி துர்க்கை.

தாட்சாயிணி பிரிவால் கோபம் கொண்ட சிவபெருமானை தணிக்க அம்பிகை எடுத்த அவதாரம் சாந்தி துர்க்கை. சாந்தி துர்க்கை மனதிற்கு ஓய்வு அளிக்கக்கூடியவள்

சாந்தி துர்க்கையை வழிபடுவதால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும். உடலில் உள்ள ஆரோக்கிய குறைகளை நிவரத்தி செய்யக்கூடியவள் சாந்தி துர்க்கை.

நவராத்திரி
  • அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : ஜாதிமல்லி
  • அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : கதிரப்பச்சை
  • அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : மஞ்சள் நிறம்
  • அன்னையின் அலங்காரம் : ஜெய துர்க்கை அலங்காரம்
  • அரச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள்: பல்விதமான பூக்கள்
  • கோலம் : படிக்கட்டு கோலம் போட வேண்டும்.
  • நெய்வேத்தியம் : கதம்ப சாதம்
  • குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 5 வயது
  • குமாரி பூஜையினால் உண்டாகும் பலன்கள் : கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
  • பாட வேண்டிய ராகம் : பைரவி
  • பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : கோட்டு வாத்தியம்
  • குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : பொரியல்

பலன்கள் : பகைகள் விலகி செல்வ செழிப்பு உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!