உங்கள் ஜாதகத்தில் குபேரயோகம் உள்ளதா ? குபேரனின் அருளை பெறுவது எப்படி ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குபேரயோகம்

ஜோதிடம் என்பது இயற்கையின் காலச் சக்கரம். அந்த காலச்சக்கரத்தின் அடையாளமே ‘ஜாதக கட்டம்’ என்ற எந்திரம். அந்த எந்திரத்தின் மூலம் ஒருவரின் முழுமையும் அறியும் அமைப்பு உண்டு. அதில் தன வரவையும் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கான குபேரனின் அமைப்பையும் அறிந்து கொள்வதே ‘குபேர யோகம்’ குபேரன் என்பதற்கு பெரும் செல்வந்தன் என்ற பொருள் உண்டு.

நம் எல்லோருக்கும் பெரும் செல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை உண்டு. நாம் குபேரனாகி விடுவோமா? என எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.இயற்கைதான் நம்மில் ஒருவரை குபேரனின் அனுகிரகம் பெற்ற தேர்ந்தெடுத்து குபேர சம்பத்தை அளிக்கிறது .அப்படி இயற்கையில் அமைப்புடன் ஒருவர் இருந்தால் அவருக்கு’ குபேர யோகம், கிட்டும்.

குபேரயோகம்

குபேரன் தேவலோகத்தின் செல்வத்திற்கு அதிபதியாக உள்ளான். இவனிடம் உள்ள செல்வங்கள் சங்கம், பதுமம், மகாபதுமம் ,மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம்,வரம் என்பவனவாகும். இந்த நவ நதிகள் அனைத்தும் உலகில் உள்ள அத்தனை செல்வங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த நவ நதிகள் அனைத்தும் மகாலட்சுமியின் அருளால் குபேரனுக்கு கிடைத்தவை. இந்த செல்வங்கள் அனைத்தும் சங்கநிதி. பதுமநிதி என்ற இருவரால் பாதுகாக்கப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன .

ஜோதிடத்தில் குபேர யோகத்திற்கான அமைப்பு

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் தனித்து இருக்குமானால் அவர்கள் தனம் வரும் வழிகள் அறியாமல் தடுமாற்றம் அடைவர். மேலும் வாழ்நாள் முழுவதும் தனக்கு எந்த தொழில் மூலம் தனம் வரும்? யார் மூலம் தனம் வரும்? எப்படி தனம் வரும்? என்ற தேடலில் முழுவதையும் தேடியே களைத்து போவர்.

நவகிரகங்களில் பெரும் தனத்தை கொடுப்பதற்கு தனத்திற்கு காரகமாக வருவதற்கு ராகு, சந்திரன், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்களே காரணமாகிறார்கள். ராகு சாயா கிரகமாக இருந்து பெரும் தனத்தை கொடுத்தும், சில நேரங்களில் பறித்தும் செல்வதால் குபேர யோகத்திற்கு ராகு தொடர்புள்ளவராக இருக்க மாட்டார்.இதில் சந்திரன் என்பது மனம் மற்றும் தினம்(ஒவ்வொரு நாளையும்) குறிப்பதாகும்.

வியாழன் என்பது பெரும் தனத்தையும் தங்கம் மற்றும் பொன் ஆபரணங்களை குறிப்பதாகும். சுக்கிரன் என்பது தனத்தையும் சுகபோகங்களையும் குறிப்பதாக உள்ளது. ஆகவே சுக்கிரன் மூலம் தனம் வந்தாலும் சுகபோகங்கள் மற்றும் ஆடம்பரத்திற்காக வந்த தனமும் சென்று விடும் அமைப்பு உண்டாகிறது.

குபேர யோகம் உள்ளவர்கள் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடையாமலும், சந்திரனை அசுப கிரகங்கள் பார்வை செய்யாமலும் இருக்க வேண்டும். அது போலவே வியாழன் ஜாதகத்தில் அசுப கிரகங்கள் தொடர்பு இல்லாமலும் சந்திரனுடன் நெருக்கமாக தொடர்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

குபேரயோகம்

சந்திரனுக்கு அடுத்த பாவத்தில் உள்ள கிரகம் வலிமையாக ஆட்சியோ அல்லது உச்சம் பெற்றோ இருக்க வேண்டும். குபேர சம்பத்து என்பது தொடர்ச்சியாக தனம் வரும் வழியை அறிந்து கொள்வதும், தனத்தை சரியான முறையில் கையாள்வதும், தனத்தை தொடர்ச்சியாக முதலீடு செய்வதே ஆகும்.

இதை செய்வதற்கு ஜாதகத்தில் சந்திரனும் வியாழனும் நல்ல அமைப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டும். சந்திரன் ஆட்சி உச்சம் பெறாவிட்டாலும் சொந்த வீட்டை பார்க்கலாம், வியாழன் ஆட்சி உச்சம் பெறாவிட்டாலும் சொந்த வீட்டை பார்க்கும் அமைப்பாக இருக்கலாம். இதனால் ஜாதகர் தொடர்ந்து முதலீடுகளை செய்வதிலும், முதலீடுகளில் இருந்து தன வரவை உண்டாக்கும் கட்டமைப்புகளை உருவாக்கவும் தன வரவுகளை பாதுகாக்கும் கட்டமைப்புகளை உருவாக்கவும் முனைந்து கொண்டே இருப்பார்.

இந்த அமைப்பு உள்ளவர் பெரும்பாலும் புகழை, முகஸ்துதியை விரும்ப மாட்டார்கள்.தங்களை முன்னெடுப்பதை விட தாங்கள் செய்யும் தொழிலை முன்னெடுப்பதில் கவனமாக இருப்பர். தங்களிடம் நேர்மையற்றவர்களை தண்டிப்பதை விட விலக்கி வைத்து விடுவார்கள்.

பொதுவாக சனியை அசுப கிரகங்கள் என்று எல்லோரும் தள்ளி வைத்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை! நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்பது உண்டு. சனி கர்மங்களுக்கு தண்டனை கொடுப்பவன் அவ்வளவுதான். உங்கள் முற்பிறவியில் கர்மங்கள் குறைவு எனில் தண்டனையும் குறைவு.

சனியை சுப கிரகங்கள் பார்வை செய்து, சந்திரனுக்கு அடுத்த ராசியில் சனி இருந்தால் பெரும் தனத்தை கொட்டி தீர்த்து விடுவான் சனி பகவான். ஜோதிடத்தில் ‘சனி கொடுத்தார் எவர் தடுப்பார்’ என்ற பழமொழியும் உண்டு. மேலும் சனியால் வருகின்ற தனத்தை எவராலும் அழிக்க முடியாது. எனவே சந்திரனுக்கு அடுத்த இடத்தில சனி இருந்தால் அவன் பெரும் தனவான்.

குபேரன் அனுக்கிரகத்தை பெறுவது எப்படி ?

கோச்சாரத்தில் சந்திரனோடு, வியாழன் சேர்ந்திருக்கும் போது வரும் வியாழக்கிழமை-பௌர்ணமி அன்று லட்சுமி குபேர பூஜை செய்து குபேர சம்பத்தை பெறலாம்.

மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வீட்டில் முழு சந்திர ஒளி பிரதிபலிக்கின்ற இடத்தில் குபேர கோலமிட்டு அதன் மேல் வாழையிலை வைத்து, அதில் முகம் பார்க்கும் கண்ணாடி, மல்லிகை பூ நன்கு சூட வைத்து, ஆறவைத்த பசும்பால், கனிகள், பன்னீர் படையல் இட்டு, சந்திர ஹோரை, வியாழ ஹோரை, புதன் ஹோரை அல்லது சுக்கிர ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும். பின்பு சந்திரனின் ஒளியில் அங்கே சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கான தன வரவு வருவதை இயற்கை உங்களுக்கு வழிகாட்டும்.

சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் வளர்பிறை திருதியை அன்று வருவது தான் ‘அட்சய திருதியை’ அன்று உங்கள் வீட்டில் குபேர பூஜை செய்து பூஜைக்கு வருபவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அன்று யார் தானம் கொடுக்கிறார்களோ அவர்கள் வளர்வார்கள் என்பது ஐதீகம்.

அப்போது குபேரனின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்கிறார்கள். இந்நாளில் தான் தன் வீட்டில் உணவிற்கே வழியேதும் இல்லாத போது தன் வீட்டிற்கு பசியோடு வந்த ஆதிசங்கரருக்கு அந்த வீட்டுப் பெண் தன் வீட்டில் மீதி இருந்த லட்சுமியின் அம்சமாகிய நெல்லிக்கனியை தானம் செய்தால்.அந்த நெல்லிக்கனியை பார்த்தபோதுதான் அந்த வீட்டின் ஏழ்மையையும் அந்த பெண்ணின் நன்மனதையும் புரிந்து கொண்ட ஆதிசங்கர லட்சுமியை நோக்கி கனகதார ஸ்தோத்திரத்தை இயற்றுகிறார். அந்த பெண்மணியின் வீட்டில் பொன்னும், மணியும் வாரி அருள் செய்தால் மகாலட்சுமி என்கிறது புராணம்.

Leave a Comment

error: Content is protected !!