தனித்த ராகு-கேது மற்றும் பிற கிரகங்களுடன் சேரும் போது ஏற்படும் பொது பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ராகு-கேது

ராகு-கேது

மனித வாழ்வில் இராகு, கேது என்னும் இருதிரு நாகங்கள் தனித்தமைந்தும் கிரகங்களோடு இணைந்தமைந்தும் சரியான பாதையில் இட்டுச் செல்கின்றன. சனி, இராகு, கேது ஆகியவை கொடிய கிரகங்கள் என்பது தவறான கருத்து. கடிகாரத்தில் பெரிய முள், சின்ன முள் போல் மனிதர்களின் வேகத்தைக் குறைத்து விவேகத்தை அளிக்கத்தக்கவை இத்திரு நாகங்கள். இனி இராகு கேது தனித்திருப்பதால் உண்டான பலன்களைப் பார்ப்போம்.

ராகு – கேது தனித்து இருந்தால் எற்படும் பொது பலன்கள்

1. மேஷம் – துலாத்தில் முறையே இராகு – கேது அல்லது தனித்திருந்தால் குடல் வைத்தியர் ஆவர். ஞானி ஆவர்.

2. ரிஷபம் – விருச்சிகத்தில் உச்சம், நீச்சமுற்றால் மாமா சிற்றப்பா வீட்டு வாசமுறுவார்.

3. மிதுனம் -தனுசு இராசியில் தனித்திருந்தால் தனியார் வங்கிப் பணி அமையும். அமைச்சராவார்.

4. கடகம்- மகரம் இராகு- கேது ஞான வடிவினராய், கவிஞர்களாய், இல்லறத்துறவிகளாய் இருக்க நேரும். (எடுத்துக்காட்டு; வள்ளலார். இராகவேந்திரர், இந்தத் தனித்த அமைப்பு பத்து இலட்சம் பேர்களுக்கு ஒருவருக்கே அமையும்.

5.சிம்மம் – கும்பத்தில் தனித்திருந்தால் மிருதங்க வித்வான் ஆவர், திடீரென கலைத்துறையில் பிரவேசித்து பெரும் செல்வம் சேர்ப்பார்.

6.கன்னி-மீனத்தில் (இராகு-கேது தனித்து இருந்தால் அலாஸ்கா முதல் ஆஸ்திரேலியா வரை பயணம் செய்து செல்வம் சம்பாதிப்பர்.

ராகு-கேது

ராகு -கேது பிற கிரகங்களுடன் இணையும் போது ஏற்படும் பலன்கள்

1. இராகு + சூரியன்: மேஷத்தில் சேர்ந்து இருந்தால் பெரிய அரிசி ஆலை அதிபர்.

2. இராகு + சூரியன்:துலாத்தில் இருந்தால் தொழிற்சங்கத் தலைவர்.

3. இராகு + சூரியன்:சிம்மத்தில் இருந்தால் இரயில் ஓட்டுனர்.

4.மேஷத்தில் கேது + சூரியன் சேர்ந்தால் அக்குபஞ்சர்.

5.சிம்மத்தில் கேது + சூரியன் இருந்தால் மூலிகை மருத்துவர்.

6.துலாத்தில் கேது + சூரியன் இருந்தால் மாந்திரீகராய்த் திகழ்வர். மற்ற ஒன்பது வீடுகளைப் பற்றிப் பார்ப்போம்.

7.இராகு +சந்திரன் சேர்க்கை கடகத்தில் இருந்தால் கடல்சார் சிக்னல் அதிகாரி. கப்பற்படைத் தளபதி.

8.ரிஷபத்தில் இராகு +சந்திரன் இருந்தால் துப்பறியும் நிபுணர். ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ரிஸர்வ் வங்கி ஆளுநர்.

9.விருச்சிகத்தில் இராகு +சந்திரன் இருந்தால் வாழை, தென்னை ஆய்வு மைய அதிகாரி. வன அலுவலர்.

10.ரிஷப கேது+சந்திரன் யுனானி மருத்துவர்.

11.கடகத்தில் கேது+சந்திரன் சேர்க்கை இசை வல்லுநர்.

12.விருச்சிகத்தில் கேது+சந்திரன் சேர்க்கை ஏற்றுமதியாளர். ஒருங்கிணைப்பாளர்.

13.செவ்வாய் +இராகு மேஷத்தில் இருந்தால் இராணுவ தளபதி.

14.விருச்சிகத்தில் செவ்வாய் +இராகு இருந்தால் எல்லைப் பாதுகாப்பாளர்,

15.கடகத்தில் செவ்வாய் +இராகு இருந்தால் காமிரா (திரைப்பட ஒளிப்பதிவாளர்).

16.மகரத்தில் செவ்வாய் +இராகு இருந்தால் காப்பி தேயிலை – ஏலக்காய் பண்ணை உரிமையாளர்.

ராகு-கேது

17.கேது மேஷத்தில் செவ்வாயுடன் இருந்தால் மூளை மருத்துவர்.

18.கடகத்தில் கேது +செவ்வாய் இருந்தால் எக்ஸ்ரே ஸ்கேன் அலுவலர்.

19.விருச்சிகத்தில் கேது +செவ்வாய் இருந்தால் நில அளவை அலுவலர்.

20.மகரத்தில் கேது +செவ்வாய் இருந்தால் தொலைபேசி மின்வாரிய மண்டல அதிகாரி.

21.புதனுடன் இராகு சேர்ந்து மிதுனத்தில் இருந்தால் வங்கி மேலாளர்,

22.கன்னியில் புதன் +ராகு இருந்தால் உப்பு, மீன் சேகரிப்பாளர்.முத்து, உப்பு, மீன் சேகரிப்பாளர்.

23.மீனத்தில் புதன் +ராகு இருந்தால் பல் மருத்துவர், ஓரினச் சேர்க்கையாளர்,

24.புதனுடன் கேது சேர்ந்து மிதுனத்தில் இருந்தால் சர்க்கரை ஆலைக்கழிவு ஆபிஸர்.

25.கன்னியில் புதன் +கேது இருந்தால் பெருமாள் கோவிலுக்கு மின்சாதனம் வாங்கித் தருவார்.

26.மீனத்தில் புதன் +கேது இருந்தால் கள்வர். கொலையாளி, (சுபகிரகம் பார்க்கின் மாறும்)

27.குருவுடன் இராகு சேர்ந்து தனுசில் இருந்தால் பங்குதாரர் ஆவார்.

28.கடகத்தில் குரு +ராகு இருந்தால் நிர்வாக அதிகாரியாவார்.

29.மகரத்தில் குரு +ராகு இருந்தால் கூலி வேலை. மனிதக்கழிவு நீக்கிகளாக இருப்பார்.

30.கேதுவுடன் குரு சேர்ந்து கடகத்தில் இருந்தால் மூளை வைத்தியர், பங்கு தாரர் ஆவார்.

31.தனுசில் குரு +கேது இருந்தால் கோவில் பூசாரியாவார்.

32.மகரத்தில் குரு +கேது இருந்தால் விஷக்கடி மருத்துவராவார்.

33.சனியுடன் இராகு சேர்ந்து மகரம், கும்பத்தில் இருந்தால் செய்தி சேகரிப்பவர். அரிசி ஆலை முதலாளியாவார்.

34.மேஷத்தில் சனி +ராகு இருந்தால் பிளாட்டின வியாபாரியாவார்.

35.துலரத்தில் சனி +ராகு இருந்தால் கட்டுமாணப் பணி செய்வார்.

36.மகர – கும்பத்தில் கேது சனியுடன் இருந்தால் குடல் மருத்துவர்.

37.மேஷத்தில் சனி +கேது இருந்தால் வெடிகுண்டு செய்யவர்.

38.துலாத்தில் சனி +கேது இருந்தால் சித்த மருத்துவர்.

rahu ketu

39.சுக்கிரனுடனும் இராகு சேர்ந்து துலாம், ரிஷபத்தில் இருந்தால் பெண் போகா கிரிமினல் வக்கீல ஆவார்.

40.கன்னியில் சுக்கிரன் +ராகு இருந்தால் கீழ் ஜாதி மக்கள் ஒருங்கிணைப்பாளர்.

41.மீனத்தில் சுக்கிரன் +ராகு இருந்தால் கப்பலோட்டி கட்டுபாடு அதிகாரியாவார்.

42.சுக்கிரனுடன் கேது 12 வீடுகளில் எங்கு சேர்ந்து சேர்ந்து இருந்தாலும் மூலிகை மருத்துவராவார். அரசில் தொடர்புள்ளவர் பல்பொருள் அங்காடி வைப்பார்.

இது தவிர மற்றக் கிரகங்களுடன் இராகு-கேது ரிஷபத்திலோ அல்லது விருச்சிகத்திலோ இருந்தால் உச்சம், நீச்சத்துக்குத் தகுந்து வருமானமுண்டு

கேது மருத்துவக்காரகன் எனபதால் ஒவ்வொரு கிரகத்துடன் சேரும் போது சித்தா, ஹோமியோ, அலோபதி என்றும், உறுப்பு மருத்துவர் என்றும் பிரியும்.

இராகு இயந்திரக்காரகன் என்பதால், சூரியனுடன் சேர்ந்தால் ரோடு ரோலர் இயந்திரம், சந்திரனுடன் சேர்ந்தால் தண்ணீர் இறைக்கும் இயந்திரம், செவ்வாயுடன் இணைந்தால் பல்சக்கர இயந்திரம், புதனுடன் சேர்ந்தால் அச்சடிக்கும் இயந்திரம், குருவுடன் கேது சேர்ந்தால் மருத்துவ ஆசிரியர்.

இராகுவானால் பொறியியல் பேராசிரியர் தொடர்புத் தொழில் அமையும் சுக்கிரனுடன் சேர்ந்தால் சினிமாத் துறை சனியுடன் சேர்ந்தால் பேரிரைச்சல், இராட்சத இயந்திரம் லோகோ, தொடர் வண்டி. சுரங்கத் தொழில்(செவ்வாயுடன் இருந்தாலும் ) வாழ்வு அமைத்துத் தரும். சந்திரன் கேது சேர்ந்து லக்னத்திற்கு 6-இல் மறைந்தால் மனநோயாளி.

Leave a Comment

error: Content is protected !!