Homeஜோதிட குறிப்புகள்இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

  • 2ல் சூரியன் – பொருள் சேதம்.
  • 2ல் சந்திரன் – இளம் வயதிலேயே திருமணமாகிவிடும். பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும். பெண்களுடனான கேளிக்கைகளில் நாட்டம் உள்ளவனாக இருப்பான்.
  • 2ல் செவ்வாய் – கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்.
  • 2ல் புதன் – நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்.
  • 2ல் குரு – பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.
  • 2ல் சுக்கிரன் – சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.
  • 2ல் சனி – இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசுதங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப் பெண்களாலேயே உண்டாகும்.
  • 2ல் ராகு அல்லது கேது இருந்தால் – இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மனசஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதானகாலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.
  • 2ல் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் – பெரும் பணக்காரனாக இருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.
  • 2ல் சுபக்கிரகங்களுடன் – சூரியனும் கூடி நின்றால் – பொருள்நாசம். கையில் காசு தங்காது.
  • 2ல் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்(அறிவும்) செல்வமும் உண்டு.
  • 2ல் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்ததுமட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்
  • 2ல் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,செல்வம் எல்லாம் கூடி வரும்.
  • இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்.
  • இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேதுசேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது.
  • இரண்டாம் அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால் அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.
  • அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்துஅமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
  • கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும் ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய் இருப்பான்.
  • இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன் கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்.
  • இரண்டாம் அதிபதியும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக அமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
  • இரண்டம் அதிபதியும் , புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னிரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்.
  • இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்.
  • இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில் குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.
  • மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரியசெல்வந்தனாக இருப்பான்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!