Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- விருச்சிகம்

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி கிரக நிலைகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

தனுசு ராசி அன்பர்களே! கடந்த முறை குருப்பெயர்ச்சினால், அதிகமான நன்மைகள் ஏதும் நீங்கள் அடையவில்லை. கடன் வாங்கி, தொழில் செய்தீர்கள். வீண் பிரச்சனைகள், சிறுவிபத்து, தேவையில்லாத ஆடம்பரச் செலவுகள், பணம், பொருள், திருடு போகுதல், வருமானப் பற்றாக்குறை, மிகுந்த பிரயாசைக்குப் பிறகு சுபகாரியங்கள் நடைபெறுதல் போன்ற பலன்களையே நீங்கள் அடைந்தீர்கள், ஆனால் இந்த முறை குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடமாகிய, மிதுன ராசிக்கு செல்கிறார். எனவே உங்கள் ராசியை தனது நேர்பார்வையினால் பார்வையிடப் போகின்றார்.

குரு பார்வை

குரு பார்வை பலன்கள்

கேந்திராதிபத்ய தோஷம், குருவுக்கு ஏற்பட்டாலும் கூட, பொதுவாக, குருபகவான் ஒவ்வொருவர் ராசிக்கும் ஏழாவது வீட்டில் அமர்வது மிகவும் சிறப்பாகும். எனவே உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். குருபகவான் உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களது ராசியையே பார்க்கப் போகின்றார். அதுவும் தனுசு ராசி குருவுக்கு சொந்த வீடு “குரு பார்க்க ஒரு கோடி தோஷம் நீங்கும்”. என்பார்கள். ஆகவே குருபகவான் பார்வையினால் நன்மைகளையும் நீங்கள் அடையப் போகின்றீர்கள்.

உங்களது தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி, தொழில் புதுப்பொலிவுடன் நடைபெறத் துவங்கும். பிரச்சனைகள் குறைந்து விடும். எதிரிகள் கை தாழ்ந்துவிடும். வியாபாரம் பெருகி, லாபம் பலவகைகளிலும் வரும் புதிய தொழில் செய்ய வாய்ப்புகள் தேடி வரும். ஒத்துழைப்பும். எதிர்பாராத பண உதவியும், கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பிரமோசன், சம்பள உயர்வு மற்றும் விரும்பிய இடமாற்ற உத்தரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த திருமண வாய்ப்பு கைகூடி வரும். கணவன், மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும். புதுவீடு, மனை வாங்குதல், புதிய கட்டிடம், வாகன யோகம், நூதன ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும்.

தெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவை நல்ல முறையில் நடைபெறும். நோய் குணமாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் நீங்கும். நீங்கும். கோர்ட்டு, கேஸ் பிரச்சனைகள் சாதகமாக முடியும். காதலர்கள் வெற்றி பெறு பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், சந்தோஷமும் நிலவும். மிகவும் நல்ல பலன்களை உங்களுக்கு இந்தக் குருபெயர்ச்சி ஏற்படுத்தப் போகின்றது.

குரு வக்ர கதியில் கடகத்தில் இருக்கும் 72 நாட்கள், சிறிது கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

வியாபாரிகள் : பழைய தொழில் அபிவிருத்தியாகும். புதிய தொழில் செய்ய வாய்ப்புக் கிடைக்கும். நல்ல நண்பர்கள் முதலுடன் வந்து சேர்வார்கள். புது மிஷின் வாங்கவோ,புது கட்டிடம் கட்டி தொழிலை இடமாற்றம் செய்யவோ வாய்ப்புகள் வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணம் நாலாபக்கமிருந்தும் வரும், வேலைக்காரர், முதலாளி உறவு நல்ல முறையில் இருக்கும். அரசாங்கத் தொந்தரவு நீங்கும். வெளியூர் பிரயாணங்களும், வெளியூர் ஆர்டர்களும் வரும்.

உத்யோகஸ்தர்கள்: நீங்கள் எதிர்பார்த்த லோன் கிடைத்து, குடும்பத் தேவையை சமாளிப்பீர்கள் ஆபிஸில் நல்ல மரியாதை கிடைக்கும். மேலதிகாரிகள் மற்றும் முதலாளியுடன் உறவு சீராக இருக்கும். சக ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்புகள் கொடுப்பார்கள். நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றல் உத்தரவு கிடைக்கப் பெறுவீர்கள். அடிக்கடி பிரயாணங்களும் அவற்றால் நல்ல பலன்களும் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும்.

பெண்கள்: உடலில் ஆரோக்யமும், மனதில் தெளிவும் ஏற்படும். புதிய ஆடை ஆபரண யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். கணவர் உங்கள் மீது அன்பைப் பொழிவார். ஒரு சிலருக்கு தாய்வழி சீதனம் கிடைக்கலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அக்கம் பக்கத்தாரால் போற்றப்படுவீர்கள். மாமியார், நாத்தனார் உறவு நல்ல முறையில் இருக்கும். உத்யோகம் பார்க்கும் பெண்களுக்கு, சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். மனநிம்மதி ஏற்படும். ஒரு சிலருக்கு தாய்மைப் பேறு அடையும் பாக்கியம் உண்டாகும்.

மாணவர்கள் : உயர்கல்வி யோகம் உண்டாகும். கல்விக்காக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும். அல்லது வெளியூரில் படிக்கவும், வாய்ப்புகள் வரலாம். நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். உடனே நல்ல வேலையும் கிடைக்கும்.

கலைஞர்கள் : உள்ளூரில் மதிப்பும், மரியாதையும் கூடும். வெளியூர் வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பட்டம், பதவி, பேரும், புகழும், செல்வமும் தேடி வரும்.

அரசியல்வாதிகள் : பெரிய வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். திடீரென்று நல்ல பதவி தேடி வரும். உங்களை விடத் தகுதி அதிகம் பெற்றவர்களை விட உங்களுக்கு செல்வாக்கு பெருகப் போகின்றது. எல்லோரும் உங்களை மரியாதையுடன் அணுகுவார்கள். பேரும், புகழும், செல்வாக்கும் பெருகும்.

விவசாயிகள் : கால்நடை வாகனங்கள் விருத்தியாகும். நன்செய், புன்செய்ப் பயிர்கள் நல்ல விளைச்சல் தரும். லாபம் அதிகம் வரும். புதிய நிலபுலன் வாங்கும் யோகம் உண்டாகும்.

பரிகாரம்: தேவையில்லை. இருப்பினும், வாரந்தோறும் வியாழக்கிழமை அருகிலுள்ள சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி, முல்லை மலரால் வழிபட உத்தமம்.

ஒருமுறை ஆலங்குடி சென்று ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வருவதும். திருச்செந்தூர் சென்று, ஸ்ரீ செந்திலாண்டரைத் தரிசித்து விட்டு வருவதும் சிறப்பு. சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!