குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-மேஷம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்

மேஷராசி அன்பர்களோ கடந்த முறை குருப்பெயர்ச்சியினால் நீங்கள் நிறைய நன்மைகளை அடைந்திருக்க வேண்டும் ஆனால் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாமிடத்தில் அமர்ந்துள்ள ராகுவால் நீங்கள் அதிகமான கஷ்டங்களையே அடைந்தீர்கள். பிள்ளைகளால் மனநிம்மதி இழந்தீர்கள்.
பொருளாதார ஏற்ற தாழ்வு கடன்கள், வீண் பழிச் சொல், உடல்நிலை பாதிப்பு. சிறுவிபத்து, தேவையில்லாத பிரச்சனைகள், குடுமபத்திலும், தொழிலும், உத்யோகத்திலும் பிரச்சனைகள், பென்சன், மன அமைதியிழப்பு. உறவுகள், நண்பர்கள். பகை, கோர்ட்டு கேஸ் பிரச்சனைகள் இருபோன்று ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு வழியில் பாதிக்கப்பட்டீர்கள்.
இந்த முறை குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடமாகிய மிதுன ராசியில் அமர போகின்றார். உங்கள் ராசிக்கு 7மிடம், 9மிடம், 11மிடத்தைப் பார்வையிடப் போகின்றார். பொதுவாக குருபகவானுக்கு கோட்சார ரீதியாக மூன்றாமிடம் என்பது அத்தனை விசேஷமானதில்லை என்று புலிப்பாணி சொல்வார்.
கேளப்பா குருபதியும் மூன்றிலேரக்
கெடுதி மெத்த செய்வனடா வேந்தன் தானும் ஆளப்பா அகத்திலே களவு போகும்
அப்பனே அரிட்டம்டர் சிகவுக்கேதான்
கூளப்பா குவலயங்களெல்லாம் ஆண்ட குற்றமில் காந்தாரி மகனும் வானும்
வீளப்பா வீமன் கை கதையினாலே விழுந்தானே மலை போலே சாய்ந்தான் சொல்லே
என்று புலிப்பாணியும் ‘தீதில் ஒரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும் என்று இன்னொரு ஜோதிடப் பாடலுகின்றது.
குரு பார்வை பலன்கள்

குரு மூன்றில் வரும் போது எதிலும் காரியத்தடைகள், முயற்சிகள் தோல்வி வேலைக்காரர் முதலாளி உறவு பாதிப்பு சகோதரபகை, மனோதைரியம் குறைதல், பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடுதல் அல்லது வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படுதல், திடீர் செலவு இடமாற்றம், பிள்ளைகள் வழியில் தொந்தரவு, தங்க நகைகளை அடகு வைத்தல், அல்லது விற்று விடுதல், உடல்நிலை பாதிப்பு, தாய்க்கு பீடை வாகனங்கள் வழியில் செலவுகள் அல்லது வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும்.
குரு மூன்றில் மறையும் போது செல்வ வசதிகள் குறையும், உடல் உபாதை கூடும். எதிரிகள் கை ஓங்கும். மனஅமைதி குறையும். தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் உங்கள் ராசிக்கு 7மிடத்தைக் குரு பார்ப்பதால் திருமணத்துக்கு வரன் தேடினால், ஆண் பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும். லாபஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், வியாபாரத்தில் நல்லமுறையில் லாபம் கிடைத்தாலும், எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்ட வண்ணமேயிருக்கும்.
பணப் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி தோன்றும் வீண் வம்பு, தும்பு விவகாரங்கள் ஏற்படும். திட்டமிட்டு நிதானமாக காரியமாற்ற வேண்டும். கடன் அதிகரிக்கும். ஆனால் குருபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாமிடமாகிய தனுசுராசியை பார்வையிடுவதால், தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழிலில் லாபம் குறையாது ஆனால் செலவுகள் அதிகரிக்கும்.
காதலில் பிரச்சனை ஏற்படும். தோல்வி அடைவீர்கள். கணவன் மனைவி உறவு மட்டும் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் ஆறுதலையும் ஏற்படுத்தும். குரு வக்ரகதியில் பயணிக்கும் 72 நாட்கள் மட்டுமே சுமாராக இருக்கும்.
வியாபாரிகள்
அதிக முயற்சிகள் செய்வீர்கள் ஆனால் தடைகள் அதிகம் ஏற்பட்டு முயற்சிகள் தோல்வியடையும். வேலைக்காரர்களிடம் பிரச்சனை, செய் தொழிலை இடமாற்றம் செய்தல் போன்றவை ஏற்படலாம். அதனால் பண விரயம் ஏற்படும். தொழிலுக்காக மனைவியின் நகைகளை அடகு வைக்க வேண்டி வரும். நகை ,பணம் களவு போக நேரிடலாம் எச்சரிக்கை தேவை. யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. கடன் அதிகம் வாங்க வேண்டாம். புது முயற்சிகளை ஒத்தி போடுங்கள்.
உத்யோகஸ்தர்கள்
திடீர் இடமாற்ற உத்தரவு கிடைக்கப் பெற்று மன நிம்மதியிழப்பீர்கள். மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் ஒத்துப் போகும். ஆனால் சக ஊழியர்கள் உங்களைப் பற்றிக் கோள்மூட்டுவார்கள். பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். யாரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தானுண்டு தன் வேலையுண்டு, என்றிருக்க வேண்டிய காலமிது.
பெண்கள்
உத்யோகம் பார்க்கும் பெண்கள் அதிகப் பிரயாசைப் பட்டு உழைப்பீர்கள். வீட்டு வேலையும், குடும்பப் பொறுப்பும் உங்களை அதிகம் அலைக்கழிக்கும் கணவர் உறவு மட்டும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். தாய்வீடு உறவு பகையாகும். கணவரின் தேவைக்காக நகைகளை கொடுக்க வேண்டிவரும். இருந்தாலும் சிறிது காலத்துக்குள் அவற்றைத் திருப்பி விடுவீர்கள். ராகு கேது பெயர்ச்சியினால் பிறகு, ஓரளவுக்கு நன்மைகள் உண்பாகும். உடல்நலம், மன அமைதி கெடும்.
மாணவர்கள்
நல்ல கல்வி மான்களாகிய நீங்கள், படிப்பில் நாட்டம் குறைந்து காணப்படுவீர்கள். மதிப்பெண்கள் குறையும். விளையாட்டுப் புத்தியை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
கலைஞர்கள்
நிறைய வாய்ப்புகள் வரும் பயன்படுத்தத் தெரியாது. ஊருக்காக இலவச சேவை செய்வீர்கள். வருமானமில்லாமல் தவிப்பீர்கள். உங்களுக்காக திட்டமிட்டுக் காரியமாற்றினால் நல்லது.
அரசியல்வாதிகள்
பிறரை நம்பிக் கெடுவீர்கள். உங்களுடைய நண்பர்களே உங்களது எதிரிகள். எனவே யாரையும் நம்பாமல் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். சற்று செல்வாக்கு குறையக் கூடிய காலமாகும். எனவே அமைதியுடனும், பொறுமையுடனும் காத்திருங்கள்.
விவசாயிகள்
அதிக மகசூல் கிடைக்காது. நன்செய், புன்செய்ப் பயிர்கள் ஏமாற்றமளிக்கும். கால்நடைகள், வாகனம் வகையில் செலவுகளும் சேதாரங்களும் ஏற்படும் கடன்பட் வேண்டியிருக்கும்.
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, முல்லை மலரால் குருபகவானை வழிபடுங்கள்.
ஒருமுறை மதுரை -திருப்பத்தூர் அருகிலுள்ள பட்டமங்கலம் என்ற ஊருக்குச் சென்று அங்குள்ள அஷ்டமாசித்தி தக்ஷிணாமூர்த்தியை 108 முறை வலம் வந்து வணங்குங்கள்.
கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி அல்லது தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடித்திட்டை செங்கோட்டை அருகிலுள்ள புளியரை சென்று தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
சனிக்கிழமைதோறும் ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.