குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- சிம்மம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
சிம்ம ராசி அன்பர்களே! கடந்த ஒரு வருடகாலமாக நீங்கள் பட்டுவரும் அவதிகள் சொல்லி மாளாது. தொழில் முடக்கம், பங்காளிகளுக்குள் பிரச்சனைகள், வேலைக்காரருடன் தகராறு, பணவிரயம், மிஷின், வாகனங்கள் அடிக்கடி ரிப்பேர் ஆகுதல், உத்யோகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள். V.R.S. கொடுத்துவிடலாமா என்று எண்ணக்கூடிய அளவுக்கு பிரச்சனைகள், உத்யோக மாற்றம், மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு பாடு குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம், மனைவியுடன் தகராறு, பிள்ளைகளால் கெட்ட பெயர், கடன் பிரச்சனைகள்,வருமானப் பற்றாக்குறை, உடல் உபாதை, சுபகாரியங்கள் தள்ளிப் போகுதல், கோர்ட்டு கேஸ், பிரச்சனைகள், காதலில் சிக்கல் இப்படிப் பலவகைகளில், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தவித்தீர்கள்.
தற்சமயம் குருபகவான் மிதுன ராசிக்கு உங்கள் ராசிக்கு 11மிடம் என்னும் லாபஸ்தானத்துக்குச் செல்கிறார் உங்களுடைய கஷ்டங்கள் குறையப் போகின்றன. பிரச்சனைகள் நீங்கப் போகின்றது. தொழில் பெருகும். லாபம் அதிகரிக்கும். திகரிக்கும். புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளும் அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் புது ஜீவன் ஒன்று உதயமாகும்.
குரு பார்வை பலன்கள்

பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் குறையும். உடல் உபாதை நீங்கும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கோயில், குளம் செல்லவும், தீர்த்த யாத்திரை செய்யவும். வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் வில்லங்கம் நீங்கும். வழக்கு வியாஜ்ஜியங்கள் வெற்றியிலே முடியும். நூதன ஆடை ஆபரண யோகமும், புதுவீடு மனை வாங்க யோகமும் அமையும். மொத்தத்தில் மிகவும் சந்தோஷமான காலமாக இருக்கும். சகோதரர்களுடனும் நல்லுறவு அமையும். நல்ல பலன்கள் அனைத்தும் நடக்கவே செய்யும்.
அஷ்டமச்சனியின் பாதிப்புகளை குருபகவான் குறைப்பார். குரு பகவான் வக்ர கதியில் கடகத்தில் பயணிக்கும் 72 நாட்கள் , சுபவிரயங்கள் நடைபெறும்.
வியாபாரிகள் : வியாபாரத்தில் செழிப்பு உண்டாகும். பழைய தொழில் அபிவிருத்தியாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். லோன் போன்றவை கிடைக்கும். தொழிலுக்கு புதுமிஷின் போன்றவை வாங்குவீர்கள். உங்கள் தொழிலில் லாபம் கணிசமாகக் கிடைக்கும். உங்கள் தொழிலைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப் படுவார்கள். ஸ்பெகுலேசன் துறைகள் மிகுந்த லாபத்தை ஈட்டித் தரும். வேலைக்காரர் உறவு சுமூகமாக இருக்கும். நீண்டநாள் வாராக்கடன் வசூலாகும். கடன் குறையும்.உத்யோகஸ்தர்கள் : வேலையில் இருந்த இடைஞ்சல்கள் நீங்கி, வேலையில் மகிழ்ச்சி ஏற்படும். உத்யோகத்தில் நிரந்தரமில்லாமல் இருந்தவர்கள் நிரந்தரமாக்கப் படுவீர்கள். அல்லது நல்ல வேலை கிடைக்கும். புரோமேஷன், சம்பள உயர்வும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றல் உத்தரவு வரும். ஆபிஸில் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் உயரும்.
பெண்கள் : கணவன், மனைவி உறவு அற்புதமாக இருக்கும். நாத்தனார், மாமியார். எல்லோருமே அன்பைப் பொழிவார்கள். ஒரு சிலர் தனிக்குடித்தனம் செல்வீர்கள், நீங்களும் அனைவரிடமும் சகஜமாகப் பேசி நல்ல பெயரை எடுப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரச் சாமான்கள், புதிய ஆடை, ஆபரண யோகம் உண்டாகும். உத்யோகம் பார்க்கும் பெண்கள் ஆபிஸிலும், வீட்டிலும் மரியாதையுடன் தையுடன் நடத்தப்படுவீர்கள். திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை சிலருக்கு அமையும். நீண்ட நாள் நோய் நீங்கும். சிறிது பணத்தை மிச்சம் பிடிக்க இயலும்.
கலைஞர்கள் : உங்களது திறமை எல்லாவிடத்தும் பிரகாசிக்கும். கௌரவமும், புகழும், செல்வாக்கும் உங்களை உச்சாணியில் நிறுத்தப் போகின்றது. வருமானம், பெருவாரியாக வருமென்பதால் தவறான வழியில் பணத்தைச் செலவழிப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
அரசியல்வாதிகள் : உங்களது அரசியலில் பெரிய முக்கியத்துவம் ஏற்படப் போகின்றது. கட்சியில் பெரிய பதவி கிடைத்து எல்லோரும் உங்களை மதித்து நடக்க வேண்டிவரும். பேரும். புகழும் செல்வாக்கும், வருமானமும் உங்களை ஒருவித புகழ் போதையில் ஆழ்த்திவிடும்.
மாணவர்கள் : நல்ல முறையில் படிப்பீர்கள் உயர்கல்வி அடைவீர்கள்.
விவசாயிகள் : விவசாயம் பெருகும். லாபம் கொப்பளிக்கும். கால்நடைகள், வாகனம் சிறக்கும். பயிர்விளைச்சல் அமோகமாக இருக்கும்.
பரிகாரம்: தேவையில்லை, வியாழக்கிழமை தோறும், தக்ஷிணாமூர்த்தியையும், ஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மரையும் தரிசித்து வருவது உத்தமம், ஒருமுறை திருச்செந்தூர் சென்று. ஸ்ரீ சண்முகரையும், ஸ்ரீ செந்திலாண்டவரையும், தரிசித்து விட்டு, 5 சாமியார்களுக்கு அன்னதானம் செய்து வந்தால் நல்லது.