குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- துலாம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
துலாம் ராசி அன்பர்களே! கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசிக் எட்டாமிடத்தில் அமர்ந்து மிகுந்த சோதனைகளைக் கொடுத்தார். தொழில் முடக்கம். கட பிரச்சனைகள், அனைவரிடமும் கெட்ட பெயர் வாங்குதல், பொருள். விரயம், திருடு போகுதல் அலட்சியம், சோம்பல், மந்தபுத்தி, உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள், பிடிக்காத ஊருக்கு இடமாற்றம், மேலதிகாரிகளின் தொந்தரவு, குடும்பத்தில் சுபகாரியத் தடங்கல் வருமானப் பற்றாக்குறை. நகைகளை அடகு வைத்தல், வீண் வாக்குவாதம், மாணவர்களுக்கு கல்வித் தடங்கல், படிப்பில் ஆர்வமின்மை, பெற்றோர், ஆசிரியரிடம் தீட்டு வாங்குதல் காதலர்களுக்கு அவமானம், தோல்வி, பயம் மேலும் வாகன விபத்து, உடல்பிணி, பீடைகள் வைத்திய செலவு, தாய்க்குப் பீடை போன்ற பல கெட்ட பலன்களை அஷ்டமக் குரு வழங்கினார்.
குரு பார்வை பலன்கள்

இப்போது உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆரம்பிக்க போகின்றது. “ஓடிட போனவனுக்கு ஒன்பதாமிடத்து வியாழன்” என்பார்கள். இந்த வருடம் குருபகவான் உங்கள்ராசிக்கு ஒன்பதாமிடத்தில், மிதுன ராசியில் அமரப் போகின்றார். உங்கள் காட்டில் மழை தான். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப் போகிறது.
உங்கள் கனவுகள் பலிக்கப் போகின்றன. தொழில் பெருகும். லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில், உத்யோக வாய்ப்புகள் அமையும், குடு குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு அமையும். ஆனால் அது அவர்களுக்கு நன்மையாகவே முடியும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன், மனைவி, உறவு மகிழ்ச்சியாக இருக்கும். சுடன் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும். நோய் நொடி நீங்கும். மனதில் மகிழச்சி நிலவும், நூதன ஆடை, ஆபரண யோகமும், ஒரு சிலருக்கு புதுவீடு கட்டும் யோகமும் அமையும், கையிருப்பு அதிகரிக்கும். நேர்த்திக்கடன் செலுத்துதல், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்றவை அமையும்,
வெளிவட்டாரப் பழக்கம் நன்மை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவும், மகான்களின் தரிசனமும் கிடைக்கும். காதலில் வெற்றி ஏற்படும். நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் ஏற்படும். கோர்ட், கேஸ் பிரச்சனைகள் சாதகமாகும். கணவன். மனைவி பிரிந்திருந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். மிகுந்த மகிழ்ச்சியான காலமாக அமையப் போகின்றது. 8.10.2025 முதல் 21.12.2025 முடிய 72 நாட்கள் குருபகவான் கடகத்தில் பிரவேசிக்கும் போது, சிறிது தடங்களும், பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் கவனமாக நடந்து கொள்ளவும்.
வியாபாரிகள் : பழைய தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பார்க்கும் இனங்கள் அனுகூலமாகும். லோன் போன்றவை கிடைத்துப் புதுமிஷின் வாகனம் வாங்குவீர்கள். புதுகட்டிடம் கட்டி சிலர் தொழிலை இடமாற்றம் செய்வீர்கள். கடன்கள் தீரும். அரசாங்கத் தொந்தரவு, கோர்ட்டு, கேஸ் பிரச்சனைகள் சாதகமாகும். புது தொழில் வாய்ப்புகளும் நல்ல பார்ட்டிகளும் கிடைப்பார்கள் வெளிநாடு வெளிமாநிலத் தொடர்புகள் ஏற்படும். சரக்குகள் மளமளவென்று விற்றுத் தீர்ந்துவிடும். லாபம் அதிகரிக்கும் முன்னேற்றமான காலமாகும்.
உத்யோகஸ்தர்கள் : மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடியலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பெண்கள் : உடல் நோய்கள் நீங்கும். மனதில் தெளிவும், நிம்மதியும் உண்டாகும். கணவர் உங்கள் மீது அன்பைப் பொழிவார். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரச் சாமான்களை வாங்குவீர்கள்.
விலை உயர்ந்த ஆடை, ஆபரண யோகம் உண்டாகும். உத்யோகத்துக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். குடும்பத்திலும் அக்கம், பக்கத்தாரிடமும் நல்ல பெயர் வாங்குவீர்கள்.
மாணவர்கள் : ஒரு சிலர் வெளியூரில் தங்கிப் படிக்க நேரிடலாம். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். கல்வியில் நாட்டம் ஏற்படும். பழைய பாடங்களை நல்ல முறையில் மீண்டும் எழுதித் தேர்வு பெறுவீர்கள். படிப்பு முடிந்ததும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெருமை தேடித் தருவீர்கள்.
கலைஞர்கள் : நிறைய வாய்ப்புகள் அமையும், வெளியூரில் உங்கள் திறமை பிரகாசிக்கும் வருமானம் உயரும். செல்வாக்கும், புகழும் அந்தஸ்தும் உண்டாகும்.
அரசியல்வாதிகள் : திடீரென்று நல்ல பதவி தேடி வரும். சகலரும் உங்களை மதிப்பார்கள்.கட்சியில் நல்ல பெயர் எடுப்பீர்கள் வருமானம் உயரும்.
விவசாயிகள் : நன்மையே ஏற்படும். விளைச்சல் அதிகம் ஏற்பட்டு, லாபம் நிறையக் கிடைக்கும். கால்நடை வாகனம் சிறக்கும், கடன் குறையும். புதிய நிலபுலன்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு வாய்க்கும்.
பரிகாரம் : தேவையில்லை குலதெய்வத்தையும், தாய், தகப்பனையும் நல்ல முறையில் பேணினால் போதும், ஒருமுறை குருஸ்தலமான திருச்செந்தூர் சென்று வந்தால் மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும். வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.