குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021-மீனம்
அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத மீனராசி அன்பர்களே!!!
குரு பகவான் 15. 11 .2020 முதல் 13. 11. 2021 வரை லாப ஸ்தானத்தில் அமர்ந்து நல்ல தீர்வுகளை தரப்போகிறார்
- கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்
- பணப்புழக்கம் அதிகரிக்கும்
- கடனில் பெரும்பகுதியை அடைப்பீர்கள்
- பிரபலங்கள் ,அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும்
- பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்
- வங்கி கடன் உதவி கிட்டும்
- சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்
- கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்
- மூத்த சகோதர வகையில் மனக்கசப்பு நீங்கும்
- புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்
- தடைபட்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும்
- புது பதவி பொறுப்புகள் தேடிவரும்
- அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்
- வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்
குரு பகவானின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால்
- மனோபலம் கூடும் தைரியமாக முடிவெடுப்பீர்கள்
- வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்
- இளைய சகோதர வழியில் அனுகூலம் உண்டு
- குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்
- மகளுக்கு நல்ல வரன் அமையும்
- பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்
- குரு ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்
- பணவரவு உண்டு புதிய திட்டங்கள் நிறைவேறும்
கும்பத்தில் குரு பகவான்
6.4. 2021 முதல் 14 .9 .2021 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று அதிசாரம் ஆகியும் வக்கிரம் அடைவதால்
- அலைச்சல்களும் செலவுகளும் அதிகரிக்கும்
- பெரிய பதவிகள் தேடிவரும்
- வியாபாரத்தில் பற்று வரவு உயரும்
- குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள்
- வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள்
- வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்
- முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்
- உத்தியோகத்தில் எதிர்ப்புகள் நீங்கும்
- வேலைப்பளு குறையும்
- உங்களின் தொலைநோக்கு சிந்தனை பாராட்டுகள் கிடைக்கும்
- தள்ளிப்போன பதவி உயர்வு சம்பள உயர்வு இனி தடையின்றி கிடைக்கும்
பரிகாரம்
பழனியில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி
ராஜஅலங்காரத்தை ஒருமுறை தரிசித்து வாருங்கள் முருகனின் அருளால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.