உபசய வீடுகள் ஜாதகம்
சில பேரை பார்த்திருப்பீங்க. 20 வயசுல ஒண்ணும் இல்லாம இருப்பாங்க. 30 வயசுக்கு அப்புறம் திடீர்னு பெரிய ஆளா ஆயிடுவாங்க. 40 வயசுல கோடீஸ்வரர் ஆயிடுவாங்க. ஏன் தெரியுமா?
காரணம் அவங்க ஜாதகத்தில் உபசய வீடுகள் Strong-ஆ இருக்கும்.
ஜோதிடத்தில் 4 வீடுகள் இருக்கு. அது வயசாக வயசாக தான் நல்லது செய்யும். அது தான் 3, 6, 10, 11 ஆம் வீடுகள். இதை தான் உபசய வீடுகள்னு சொல்றோம். உபசயம்-னா வளர்ச்சி, அதிகரிப்புனு அர்த்தம்.
சாஸ்திரம் சொல்லுது – இந்த வீடுகள் காலமும், முயற்சியும் சேர சேர வளரும். செவ்வாய், சனி மாதிரி கடுமையான கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தா இன்னும் நல்லது செய்யும்.
உங்க ஜாதகத்தில் இந்த 4 வீட்டில் கிரகம் இருக்கா? பாருங்க.
1. 3-ஆம் வீடு – முயற்சி வீடு
இது தைரியம், முயற்சி, திறமைக்கான வீடு.
இங்கு கிரகம் இருந்தா, ஆரம்பத்தில் கஷ்டப்படுவீங்க. யாரும் உங்களை கண்டுக்க மாட்டாங்க. ஆனா வயசாக வயசாக உங்க தைரியம் கூடும். உங்க முயற்சிக்கு பெரிய பலன் கிடைக்கும். மீடியா, எழுத்து, பிஸ்னஸ்-ல் பெரிய ஆளா வருவீங்க.
இங்கு செவ்வாய் இருந்தா – நீங்க யாருக்கும் பயப்பட மாட்டீங்க. எதிரிகளை ஜெயிப்பீங்க.
2. 6-ஆம் வீடு – போட்டி வீடு
இது எதிரி, கடன், நோய், போட்டிக்கான வீடு. கேட்கவே பயமா இருக்கா? பயப்படாதீங்க.
6-ஆம் வீட்டில் கிரகம் இருந்தா, சின்ன வயசுல கடன், எதிரி தொல்லை இருக்கும். ஆனா 30 வயசுக்கு அப்புறம் நிலைமை அப்படியே மாறும். எதிரிகள் ஓடிடுவாங்க. கடன் தீரும். போட்டி தேர்வில் ஜெயிப்பீங்க. அரசு வேலை கிடைக்கும்.
இங்கு சனி இருந்தா – நீங்க கடைசியில் ஜெயிச்சே தீருவீங்க. யாராலும் உங்களை அசைக்க முடியாது.
3. 10-ஆம் வீடு – தொழில் வீடு
இது வேலை, பதவி, புகழுக்கான வீடு.
இங்கு கிரகம் இருந்தா, ஆரம்பத்தில் சின்ன வேலையில் இருப்பீங்க. சம்பளம் கம்மியா இருக்கும். ஆனா உங்க உழைப்பு வீண் போகாது. வயசாக வயசாக பதவி உயரும். 35-40 வயசுல பெரிய பதவிக்கு போவீங்க. சொந்த தொழில் செய்தா பெரிய வெற்றி கிடைக்கும்.
இங்கு சூரியன், செவ்வாய் இருந்தா – நீங்க Boss-ஆவே பிறந்தவர்.
4. 11-ஆம் வீடு – லாப வீடு
இது தான் மிக முக்கியமான வீடு. லாபம், நண்பர்கள், ஆசை நிறைவேற்றத்துக்கான வீடு.
இங்கு கிரகம் இருந்தா, சின்ன வயசுல லாபம் கம்மியா இருக்கும். ஆனா வயசாக வயசாக பணம் கொட்டும். நண்பர்கள் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும். நீங்க நினைச்ச ஆசை எல்லாம் 40 வயசுக்குள்ள நிறைவேறும்.
இங்கு எந்த கிரகம் இருந்தாலும் நல்லது. குறிப்பா சனி, ராகு இருந்தா கோடீஸ்வர யோகம்.
அப்போ என்ன அர்த்தம்?
உங்க ஜாதகத்தில் இந்த 4 வீட்டில் கிரகம் இருந்தா, நீங்க Late-ஆ வந்தாலும் Latest-ஆ வருவீங்க. அவசரப்படாதீங்க. உங்களுக்கான நேரம் வந்துகிட்டே இருக்கு.
சின்ன வயசுல கஷ்டப்படுறீங்கன்னா கவலைப்படாதீங்க. அந்த கஷ்டம் தான் உங்களை பெரிய ஆளா மாத்தப்போகுது.
உங்க ஜாதகத்தில் 3, 6, 10, 11-ல் எந்த கிரகம் இருக்கு? கீழே Comment பண்ணுங்க. வயசாக வயசாக உங்களுக்கு என்ன நடக்கும்னு நான் சொல்றேன்.