Homeஜோதிட தொடர்குரு சனி பரிவர்த்தனை பலன்கள்

குரு சனி பரிவர்த்தனை பலன்கள்

குரு சனி பரிவர்த்தனை

இவர்கள் வினோதமான மகான் சித்தன் , ஞானி , என்ற வழியில் இவர்களை சேர்க்கலாம். உயர்வு தாழ்வு கீழ் ஜாதி மேல் ஜாதி பணக்காரன் ஏழை என்ற பாரபட்சம் இன்றி சம நோக்கோடு பார்ப்பவர்கள். இவர்கள் ஆன்மீகத் துறையில் ஈடுபட்டால் தெய்வீக தோற்றங்கள் அபூர்வ சக்திகள் நாடி வரும்.

இவர்கள் எத்தொழிலை செய்யவும் தயங்க மாட்டார்கள். நியாயமான தார்மீகமான தொழில்களையும் செயல்களையும் வரவேற்பார்கள். செயல்படுத்துவார்கள். எந்த இடையூறுகள் வந்தாலும் அதை , கண்டு மனம் தளராதவர்கள் இவர்கள். பிறரின் சூழ்நிலையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்யத் தயங்க மாட்டார்கள்.

இவர்கள் பேங்க் , நீதி , துறை கைவினை பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் கலைத்துறை , எழுத்துத்துறை , சமயத்துறை , அறநிலை யத்துறை போன்றவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின் வம்சாவழி சிறப்பிப்பது இல்லை.குழந்தைகள் உடல் நலம் குறைந்தவர்கள். உடல் குற்றம் பிடிதல் உள்ளவர்களாக உள்ளனர்.

ஆன்மீக பேச்சு , மத போதகர்களான நிலைகளில் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் . பெண்ணாசை , பொன்னாசை , மண்னாசை குறைந்தவர்கள் ஆகவும் மக்களை நல்வழிப்படுத்தும் மார்க்கத்தை உபதேசிப்பவர்களாகும்.நன்மதிப்பு பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

விருச்சிகம் , தனுசு , கும்பம் , மீனம் போன்ற லக்னத்திற்கு சிறப்பை தருகிறது. மற்ற லக்னங்களுக்கு எதிரிடை பலன்கள் தருகிறது .
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!