Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு வக்ர பெயர்ச்சி 2024 : ரிஷபம் ,மிதுனம் பலன்கள் மற்றும் பரிகாரம்

குரு வக்ர பெயர்ச்சி 2024 : ரிஷபம் ,மிதுனம் பலன்கள் மற்றும் பரிகாரம்

குரு வக்ர பெயர்ச்சி 2024 : ரிஷபம்

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வக்ரகுரு இருப்பின் தற்போதைய கோச்சார குரு காலகட்டத்தில் உங்களின் எண்ணம் நிறைவேறும். நிறைய லாப நுகர்ச்சி பெறுவீர்கள். திருமணம் கூடி வரவே மாட்டேன்கிறதே என வாடுபவர்களுக்கு சட்டென்று திருமணம் நடந்து விடும். இதே போல் மறுமணமும் நடக்கும்.

குரு வக்ர பெயர்ச்சி 2024

திரவ சம்பந்த குத்தகை எடுத்தவர்கள் அதனை நல்லவிதமாக நடத்துவர். உங்கள் இளைய சகோதரி சம்பந்தமான ஒரு பிரச்சனை தீர்வு காணும். உங்கள் மூத்த சகோதரர் அல்லது நண்பர்களுடன் மனக்கசப்பு மறைந்துவிடும். அரசியல்வாதிகளுக்கு இதுவரையில் மக்களை சந்திக்க இயலாத சூழ்நிலை மாறி ,பொதுமக்களோடு இணைந்து பணியாற்றலாம்.

பரிகாரம்

தட்சிணாமூர்த்திக்கு ஊறவைத்த வெள்ளை கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கவும். சிவன் சன்னதியில் சுண்டல் பிரசாதத்துடன் வணங்க நலம் கிட்டும்.

குரு வக்ர பெயர்ச்சி 2024 : மிதுனம்

உங்கள் பிறந்த ஜாதகத்தில் வக்ரகுரு இருப்பின் இதுவரையில் சம்பாதித்த பணம் முழுவதும் கடலில் கரைத்த பெருங்காயமாக இருந்திருக்கும். தற்போதைய வக்ரகுரு காலத்தில் உங்கள் சம்பாத்யம்  கையில் சேர்ந்து நல்ல முதலீடாக மாறும். முதலீடு சம்பந்த அலைச்சல் நன்மை தரும் விதமாக அமையும். 

தொழில் சார்ந்து  நிறைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைத்து அது சம்பந்தமான வேலைகள் துரிதப்படும். 

குரு வக்ர பெயர்ச்சி 2024

சமையல் கலைஞர்கள் வெளிநாடு சென்று பணி புரியும் வாய்ப்பு ஏற்படும். நிறைய பரபரப்பான நன்மைகள் கிடைக்கும். 

பரிகாரம்

சிவன் கோவிலில் நடக்கும் யாகங்களுக்கு நிறைய மூலிகை, வேர்கள் வாங்கி கொடுங்கள். நிறைய பழங்கள் காணிக்கை செலுத்தவும். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!