Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன் |Indraya rasi palan -03.12.2024

இன்றைய ராசி பலன் |Indraya rasi palan -03.12.2024

இன்றைய ராசி பலன்

மேஷம்

உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்

ரிஷபம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மிதுனம்

நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் பெறுவீர்.

கடகம்

indraya rasi palan kadagam

உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும்.

சிம்மம்

உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

கன்னி

உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

நீங்கள் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிக்க முடியும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

தனுசு

நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular