Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன் |Indraya rasi palan -05.12.2024

இன்றைய ராசி பலன் |Indraya rasi palan -05.12.2024

இன்றைய ராசி பலன்

மேஷம்

indraya rasi palan

உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்

indraya rasi palan rishabam

நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கலாம். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

indraya rasi palan mithunam

நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

indraya rasi palan kadagam

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

indraya rasi palan simmam

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.

கன்னி

indraya rasi palan kanni

நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்

indraya rasi palan thulam

உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

indraya rasi palan viruchigam

உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுக்களில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொன்பொருள் சேரும். நினைத்தது நிறைவேறும்.

தனுசு

indraya rasi palan tamil

உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

indraya rasi palan magaram

உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

indraya rasi palan kumbam

உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

மீனம்

indraya rasi palan meenam

உங்களுக்கு நண்பர்கள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பொன் பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!