Homeஜோதிட தொடர்கைரேகை சாஸ்திரம்: விரல்கள் சொல்லும் ரகசியங்கள் !

கைரேகை சாஸ்திரம்: விரல்கள் சொல்லும் ரகசியங்கள் !

கைரேகை சாஸ்திரம்

கருவில் உருவாகும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சி வாலிப வயதில் முழுமை பெறுகிறது. வெட்டப்பட்ட மரக்கிளைகள் மீண்டும் துளிர்த்து வருவது போன்ற அதிர்ஷ்ட அமைப்பு மனிதனுக்கு இல்லை எனினும் மனிதன் இறுதி மூச்சு உள்ள வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு ஒன்று உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உறுப்பு நகங்களே என்றால் அது மிகையாகாது. கால் விரல்களை விட கைவிரல்களே மனிதனுடைய செயல்களில் பெரிதும் பயன்படுத்தப்படுவதால், நகங்களுக்கு ரேகை சாஸ்திரம் முக்கியத்துவம் தருகிறது.

விரல்களுக்கு உறுதியையும் அழகையும் தருபவை நகங்களே. மேலும் மனிதனது உடல் ஆரோக்கியத்திற்கும் விரல் நகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இனி ரேகை சாஸ்திரப்படி சில பொதுவான குறிப்புகளைக் காண்போம்.

விரல் நகங்கள் இளஞ்சிவப்பு, தாமரைமலர் வண்ணம் போன்ற நிறங்களில் அமைவதே சிறந்தது. சீரான ரத்த ஓட்டம், ஆரோக்கியமான உடல் நிலை, நோய் வந்தாலும் எளிதில் குணமாகும் நிலை போன்றவை அமையப்பெறும். வெளிர் நீலம், வெளிர் மஞ்சள் மற்றும் சிறுசிறு புள்ளிகள் இருந்தால் உடல் நல குறைபாடுகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

விரல் நகங்களின் அடிப்பகுதிகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் தெளிவான சந்திர வளையம் அமைவது உடல்நலம் மற்றும் வலிமையை சுட்டிக்காட்டும்.சின்னஞ் சிறு சந்திர வளையம் அல்லது தென்படாமலே இருந்தால் ரத்த ஓட்ட குறைபாடுகள் ஏற்படும் எனக் கருதலாம்.

நீண்ட நகங்கள் கொண்ட நபர்களுக்கு பெரும்பாலும் மார்பு, நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். அந்த நபர்கள் அமைதியானவராகவும், மென்மையானவராகவும் இருப்பார்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். கலைகளில் ஈடுபாடு இருக்கும். உயர்ந்த குறிக்கோள், எண்ணம் கொண்டவர்கள்.

குட்டையான நகங்களை கொண்டவர்களுக்கு பெரும்பாலும் இதயம் சார்ந்த ஆரோக்கிய குறைபாடுகள் அமையும். அதனுடன் சந்திர வளையமும் இல்லை என்றால் இருதயக் கோளாறுகள் ஏற்படும் எனலாம். இத்தகைய நபர்கள் எதையும் விமர்சனம் செய்வதில் சிறந்தவர். விவாதங்களில் அதிக ஆர்வம் இருக்கும். சாமர்த்தியமாக பேசும் திறமை மிகுந்தவர்கள்.

நீண்ட மற்றும் குறுகலான நக அமைப்பு கொண்டவர்களுக்கு முதுகுத்தண்டு தொடர்பான குறைபாடுகள் உண்டாகலாம்.

நீண்ட அகலமான நக அமைப்பு கொண்டவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுவார்கள். எதிலும் கவலை கொள்வார்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவார்கள்.

நகங்கள் கீழே குறுகலாக அமையப்பெற்றால் மூளை நரம்பு தொடர்பான குறைபாடுகள் வரலாம். அடிக்கடி விரல் நகங்களை கடிக்கும் பழக்கம் உள்ள நபர்களும் அதிக உணர்ச்சி வசப்படுபவராகவும், கவலை கொள்பவராகவும் இருப்பார்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!